TopBottom

ரஜினியின் எந்திரன்- தி ரோபோ படத்தின் முதல் டிசைன் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.மீசையில்லாத 'ரோபோ' ரஜினி கையில் ஒற்றை ரோஜாவுடன் இருப்பது போன்ற வித்தியாசமான டிசைன் இது.படத்துக்கு தேவையற்ற மிகை எதிர்பார்ப்பை தரக்கூடாது என்பதால் படத்தில் வரும் ரஜினியின் உண்மையான தோற்றம் குறித்த ஸ்டில்களை வெளியிடாமல் முழுக்க முழுக்க அனிமேஷன் டிசைனை மட்டுமே இப்போதைக்கு ஷங்கர் வெளியிட்டுள்ளாராம்.அதே போல ரஜினி பட வரலாற்றிலேயே முதல்முறையாக ரஜினிக்கு இணையாக கதாநாயகியின் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. இது ஷங்கருக்கு ரஜினி கூறிய ஆலோசனை என்கிறார்கள்.ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் ஒரு படம் வரவேண்டும் என நீண்ட நாளாகவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். எனவே ஐஸ்வர்யா ராய் பெயரையும் இணைத்தே வெளியிடுங்கள். ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று ரஜினி கேட்டுக் கொண்டாராம்.சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ நாவ்லகளின் அடிப்படையில்தான் இந்தப் படம் உருவாகிறது. ஆனால் இந்த நாவல்களில் ஹாலிவுட் பாணியில் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளார் ஷங்கர், சுஜாதா இறப்பதற்கு முன்பே, அவரது அனுமதியுடன்.கதைப்படி இந்தப் படத்தில் ரஜினிக்கு இரு கெட் அப்கள். ஒன்று மனித ரஜினி, இன்னொன்று ரோபோ. ஐஸ்வர்யாவின் பாத்திரத்துக்கு நிலா என்று பெயர். இந்த இருவரைத் தவிர இன்னும் ஒரு முக்கியமான பாத்திரமும் இந்தப் படத்தில் உண்டு. அதுதான் ஜீனோ. குட்டி எந்திர நாய்க்குட்டி. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் எல்லாருக்கும் பிடிக்கும் சாகஸங்களைச் செய்யும், சொந்தமாக சிந்திக்கும் திறன் கொண்ட நாய்க்குட்டி இது.ஜூராஸிக் பார்க் படத்துக்கு டைனோசர்களை வடிவமைத்தவர்கள் தான் ரோபோ ரஜினி மற்றும் ஜீனோவை டிசைன் பண்ணுகிறார்கள். இன்று அமெரிக்காவில் ரஜினி-ஐஸ்வர்யாவின் டூயட் பாடலுடன் படப்பிடிப்பு துவங்குகிறது.

முழுக்க முழுக்க ஹாலிவுட்டில் தயாராகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையுடன் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் படப்பிடிப்பு துவங்குகிறது ரஜினியின் இயந்திரன்-தி ரோபோ.இந்தப் படத்தில் பணியாற்றும் பல கலைஞர்கள் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள்.இன்று ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மென் இன் பிளாக், பேட்மென்ஸ் ரிட்டர்ன், இன்ஸ்பெக்டர் காட்கெட்ஸ் போன்ற படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் மேரி இ வோக்ட், ரோபோவின் காஸ்ட்யூமராகப் பணியாற்றுகிறார். இவருடன் இந்திய காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவும் இணைகிறார்.இயந்திரனுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளைச் செய்யப் போவது ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ.இவர்கள் தான் டெர்மினேட்டர், டெர்மினேட்டர்-2, ஜூராஸிக் பார்க், பிரிடேடர், பியர்ல் ஹார்பர், சமீபத்தில் உலகைகே கலக்கிய அயர்ன் மேன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு மிரட்டலான கிராபிக்ஸ் பணிகளைச் செய்தவர்கள்.இந்தியப் படம் ஒன்றில் இவர்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறை.படத்துக்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் தர ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்கள் ஐஎல்எம், கேஇஎப்எக்ஸ், ஹாங்காங்கின் சென்ட்ரோ, மென்போர்ட் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.ஹாலிவுட்டின் எந்தப் படத்துக்கும் சவால் விடும் வகையில் ரஜினியின் இயந்திரனை உருவாக்குவதற்காகவே இவ்வளவு பெரிய முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் அருண்பாண்டியன் (நினைவிருக்கா?).கிட்டத்தட்ட ரஜினி நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் இயந்திரன் என்று கூடச் சொல்லலாம்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments