TopBottom

அலிபாபா - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 12 September 2008


பட்டுப்புடவையின் ஜரிகையும், புதுமுகங்களின் வருகையும் ஒரு அட்ராக்ஷனை ஏற்படுத்தும், எப்போதும்! அலிபாபாவில் இயக்குனரும் புதுசு. ஹீரோவும் புதுசு. கதையமைப்பும் புதுசு என்பது அடிஷனல் அட்ராக்ஷன்!

நண்பனுடன் வீட்டுக்கு லேட்டாக வரும் பிள்ளையை கண்டிக்கும் அப்பா பிரகாஷ்ராஜ், "சாப்டிருக்க மாட்டீங்களே, இந்தா..." என்று தோசையை சுட்டு போடுவதும், பின்பு அனைவரும் நிதானமாக பைகளை எடுத்துக் கொண்டு கிளம்புவதும் பேமிலி எபெஃக்ட். அடுத்த காட்சியில்தான் புரிகிறது இவர்களின் டெரர் ட்ரீட்! அத்தனை பேரும் வேறொரு வீட்டுக்கு வந்த திருடர்கள். நிதானமாக அந்த வீட்டு மாவில் தோசை சுட்டு தின்றபின் கொள்ளையடித்துவிட்டு கிளம்புகிறார்கள். (இந்த லட்சணத்தில் வீட்டு பெரியவருக்கு பிளாஸ்கில் காபியும் போட்டுக் கொடுக்கிறார்கள்) 'பிரமாதம்டா' என்று வாய்விட்டு ரசிக்க வைக்கிற இயக்குனர் இடைவேளை வரைக்கும் இப்படி சிரிப்பு துக்கடாக்களை அள்ளி வீசுகிறார்.

திருட்டுத் தொழிலை ஏதோ சினிமா பார்ப்பது போல ரசித்து செய்யும் கதாநாயகன் அண் கோ, சம்பந்தமில்லாமல் போலீஸ், மந்திரி, தொழிலதிபர் என்று இன்னொரு கோஷ்டியின் சொந்த விவகாரங்களில் சிக்கி சின்னாபின்னமாவதுதான் கதை. இடையில் டூயட்டுக்கு ஆகுமே என்று காதலையும் சேர்த்திருக்கிறார்கள். ஒரு சிட்டிகை தேன்.

தானுண்டு, தன் திருட்டு உண்டு என்று போகிற புதுமுகம் கிருஷ்ணா, தனது அப்பா பிரகாஷ்ராஜ் சாவுக்கு காரணமானவர்களை விடாமல் துரத்துகிறபோது கதையின் போக்கும் மாறிவிடுகிறது. அதுவரை இருந்த நகைச்சுவை தொலைந்து போய், சீரியஸ் ஆகிறது தியேட்டர்.

பிரகாஷ்ராஜின் அலட்டிக் கொள்ளாத திருட்டுகளுக்கும், அதை நியாயப்படுத்தும் வசனங்களுக்கும் தியேட்டரில் கைதட்டல்களும் விசில்களும் நிச்சயம். கமிஷனர் வீட்டுக்குள்ளேயே புகுந்து திருடும் அவர், வீட்டு ஆட்கள் வந்த பின்னும் பதறாமல் "ஒரு நிமிஷம்" என்றபடி போன் கால் அட்டர்ன் பண்ணுகிறாரே, பின்னியிருக்கிறார் மனுஷன்.

கிருஷ்ணாவிடம் ஃபயர் அதிகம். நடிப்பு, டான்ஸ், பைட் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறார். புதுமுகம் என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும், "போங்கய்யா" என்பார்கள். (மீசையை கொஞ்சம் ட்ரிம் செய்யலாமே?)

சற்றே முத்தலாக தெரிகிறார் புதுமுகம் ஜனனி. திருட்டு காதலனையும், அவரது அப்பாவையும் எப்படியாவது திருத்திவிடலாம் என்று அட்வைஸ் செய்கிற அவர், பின்பு அதே காதலனுக்கு துணை போகிறாரே, லேசாக இடித்துவிட்டு போகிறது லாஜிக்.

நேர்மையான போலீஸ் அதிகாரி பிஜுமேனன். இவரது ட்ரீட்டும் சற்று எடக்கு மடக்கு. திருடனை நடு வீட்டு டைனிங் டேபிளில் உட்கார வைத்து சோறு போட்டு அனுப்புவது ரசனை. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அழகம்பெருமாளிடம் யதார்த்தம். க்ளைமாக்சில், ராதாரவி, திலகன் என்று வழக்கமான நடிகர்களை கொண்டு சூடான பொட்டலத்தை கட்டியிருக்கிறார் இயக்குனர்.

முக்கியமான பாராட்டு வசனகர்த்தா ரமணா கோபிநாத்துக்கு. படம் நெடுகிலும் சுண்டியிழுக்கும் வசனங்கள். "பேசிக்கலா உங்ககிட்டே தப்பிருக்குன்னு நினைச்சேன். இப்போதான் புரியுது, உங்க பேசிக்கே தப்புன்னு..." ஒரு உதாரணம் இது.

தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு வித்தை. வித்யாசகரின் இசையில் 'புதிய பறவை ஒன்று, ஹர ஹர சம்போ...' இரண்டையும் முணுமுணுக்கலாம்.

தியேட்டருக்கு வெளியே தைரியமாக போர்டே வைக்கலாம், 'அலிபாபாவும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும்' என்று!

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments