TopBottom

எந்திரன்- தி ரோபோ படத்தின் கதை

எழுதியவர் : Karthikan Karunakaran 14 September 2008

ரஜினி படம் என்றாலே பூஜை போட்ட நாள்முதலே அவர் படத்தின் கதைகளுக்கு கால் முளைக்கத் தொடங்கிவிடும். இதோ 'எந்திரன்' கதையும் இப்போது கசிய ஆரம்பித்துவிட்டது.

'எந்திரனி'ல் ரஜினிக்கு இரட்டைவேடம். 2020-ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது கதை. ரஜினி ஒரு பெரிய விஞ்ஞானி. இவரது காதலி ஐஸ்வர்யா ராய். மனிதனுக்கு நிகரான வேலைகளை செய்யும் சிந்தனை கொண்ட ரோபோக்களை தயாரிக்கும் பணி ரஜினியிடம் ஒப்படைக்கப்படுகிறது. பகுத்தறிவும், நல்ல சிந்தனையுடன் உலகிற்கு உதவும் எந்திர மனிதனை உருவாக்குகிறார் ரஜினி. (ரோபோவும் ரஜினிதான் என்பது கூடுதல் விசேஷம்).

இதற்கிடையே ரஜினிக்கு கிடைக்கும் புகழை கெடுப்பதற்காக அவர் உருவாக்கி ரோபோவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர் வில்லன் ஆட்கள். தனது கட்டுப்பாட்டில் ரோபோவை கொண்டுவர போராடும் ரஜினிக்கு இன்னொரு சிக்கலும் உருவாகிறது.

விஞ்ஞானி ரஜினியின் காதலியான ஐஸ்வர்யா ராயை ரோபோ ரஜினியும் காதலிக்க ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யா ராயிடம் மயங்கிப்போகும் ரோபோ ஐஸ்வர்யா ராயை காதல் மூடுடன் துரத்த ஆரம்பிக்கிறது.

ரோபோவின் காதல் மயக்கத்தையே சாதகமாக்கி கொள்ளும் ரஜினி, ஐஸ்வர்யாராயை காதலிப்பதுபோல நடிக்க செய்து அதனை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ரோபோவுக்குள் ஏற்பட்ட கெட்ட மாற்றங்களை சரிசெய்து வெற்றி காண்பதே மீதி கதை. ஆக படத்தின் நாயகன் - வில்லன் இரண்டுமே ரஜினிதான்.

'ரோபோ'வுக்கு அபிஷேக் பச்சன் ஆட்சேபம் தெரிவிக்காமல் இருந்தால் சரி.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments