TopBottom

சக்கரகட்டி - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 29 September 2008

நடிப்பு: சாந்தனு, இஷிதா, வேதிகா

தயாரிப்பு: வி.கிரியேஷன்

இயக்கம்: கலாபிரபு

இசை: .ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: ஆண்ட்ரூ&இராசாமதிஒரே கல்லூரியில் படிக்கும் சாந்தனுவுக்கும், இஷிதாவுக்கும் காதல் பூத்துகாய்த்து கனியாகிறது. அதே கல்லூரிக்கு படிக்க வருகிறாள் சாந்தனுவின் அத்தைமகள் வேதிகா.

மணந்தால் சாந்தனு. இல்லையேல் சாவுஎன்கிற அளவுக்கு அழுவாச்சியாட்டம்போடுகிறார். அத்தை மகள் மீது சாந்தனுக்கு ஒரு கண் இருக்கிறது என்றுதவறாகப் புரிந்து கொள்ளும் இஷிதா, வெட்டிக்கொண்டு திரிகிறார்.

சக்கர கட்டிக்குள் மாட்டிக் கொண்ட எறும்பு மாதிரி இருவருக்கும் இடையில்கிடந்து தவிக்கிறார் சாந்தனு. இஷிதாவிடம் காதலையும், வேதிகாவிடம் காதல்இல்லை என்பதையும் நிரூபிக்க, நண்பர்கள் கொடுக்கும் ஐடியாக்கள் சொதப்பிக்கொண்டே போக பிரச்னை பெரிதாகிறது.

கிளைமாக்சில் ஒரு பக்கா பிளான்போட அதுவும் பிளாப் ஆகிறது. இஷிதாவும், வேதிகாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருவருமே ஒருவர்மற்றொருவருக்கு சாந்தனுவை விட்டுத் தருகிறார்கள். கடைசியில் சாந்தனுக்குகிடைப்பது யார் என்பது சஸ்பென்ஸ். முக்கோண காதல் கதையை இளமை, புதுமையாக தர முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கலாபிரபு.

கே.பாக்யராஜின் வாரிசு சாந்தனு அவருடைய சாயல் சிறிதுமின்றி சொந்தஸ்டைல், முத்துடன் அறிமுகமாகியிருப்பது அழகு. ஜிம் பாடி, சின்ன தாடியெனமுரட்டு இளைஞனின் தோற்றத்தோடு ஆக்ஷன் அடிதடியில் இறங்காமல்மென்மையான காதல் கதையில் துணிச்சலாக என்ட்ரி ஆகியிருக்கிறார்.

கன்னக்குழியும், நுனிநாக்கு ஆங்கிலமும் அதற்கு கை கொடுக்கிறது. மெழுகுபொம்மைகளாக வலம் வரும் வேதிகா, இஷிகா இடையில் மாட்டிக் கொண்டுதவிக்கும்போதும் தன்னை புரிய வைக்க இருவரிடமும் கடைசி வரைபோராடும்போதும் சாந்தனுவிடம் நல்ல நடிகருக்கான அடையாளங்கள்.

சாந்தனு&இஷிதா காதல் டைடல் பார்க் ரகம். காபி ஷாப், டிஸ்கோதே எனவளர்வது சுவாரஸ்யம். அவர்களுக்குள் வரும் உரசல் பழைய பஞ்சாங்கம். படித்தநாகரீக பெண்ணான வேதிகா, உசிலம்பட்டி பொன்னுத்தாயி ரேஞ்சுக்குஅத்தைமகன் சாந்தனுவை நினைத்து உருகுவதில் லாஜிக் இல்லை.

சாந்தனுவின் நண்பர்களின் யோசனைகளும், அது வேதனைகளாக மாறுவதும்சிரிக்க வைக்கிறது. அதிலும் காதலர்களை சேர்த்து வைக்க, கிளைமாக்சில்போடும் கேமரா ஐடியாவும் சொதப்ப அசடு வழிந்து நிற்கும்போது சிரிப்பில்அரங்கம் அதிர்கிறது.

.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் வெல்லக்கட்டி, அதிலும்டாக்சி...டாக்சி...’யை இனி இளசுகளின் செல்போன்கள் பாடும். ஆண்ட்ரூ&இராசாமதியின் ஒளிப்பதிவு காட்சிக்கு ஒருவிதமாகவும், பாடல்களுக்கு ஒருவிதமாகவும் பணியாற்றி இருக்கிறது. பாடல்களில்இடம்பெறும் கிராபிக்ஸ் கலக்கல்கள்வாவ்போட வைக்கிறது.

முதல் படத்திலேயே ஆக்ஷன் அதிரடி என்று இறங்காமல் மென்மையானஉணர்வுகளை சொல்ல வந்திருக்கும் கலாபிரபுவை நல்ல இயக்குனராகஅடையாளம் காட்டுகிறதுசக்கரக்கட்டி’. படத்தின் உருவாக்கத்தை போலகதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும்இனித்திருக்கும் சக்கரக்கட்டி.

1 Comment

 1. உங்கள் விமர்ச்சனம் மேலோட்டமாக இருக்கிறது.

  இந்த விமர்ச்சனத்தை படத்தை பார்க்கலாம் என தோன்றவில்லை. பார்க்க வேண்டாம் என தோன்றவில்லை.

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments