TopBottom

காதலில் விழுந்தேன் - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 30 September 2008


அதீத அன்பின் உச்சம் ஏற்படுத்தும் விபரீதங்களை சொல்லும் கதை. அதைநாக்குமுக்காவின் உதவியுடன் இளசுகளின் மனசுக்குள் கொக்கிபோட முயன்றிருக்கிறார் இயக்குனர்.மயக்க நிலையில் இருக்கும் காதலியை சக்கர நாற்காலியில் அமர்த்தியபடி துரத்தி வரும் கும்பலுக்கு டிமிக்கி கொடுத்தபடி ரயிலில் ஏறி தப்பிக்கிறார் நாயகன் நகுலன். ரயிலில் டி.டி.ஆர். லிவிங்ஸ்டனிடம் தனது சுவாரஸ்யமான காதல் பிளாஷ்பேக்கை சொல்கிறார். பிளாஷ்பேக்கின் முடிவில்தான் தெரிகிறது நகுலன் ஒரு கிராக்.அடுத்தடுத்த டிராக்கில்.... நகுலனின் காதலி(சுனேனா) பிணம் என்பதும், துரத்தி வந்த கும்பல் போலீஸ் என்பதும் தெரியவர, நமக்குள் ஏற்படும் ஷாக்தான் திரைக்கதையின் போஷாக்.அப்புறமென்ன? காட்டுக்குள் காவல்துறைக்கும், கண்மூடித்தனமான காதலுக்கும் இடையே நடக்கும் போராட்டம், கதையை முடித்துவைக்கிறது.பையன் தேறிடுவாம்பா... என்று சொல்ல வைக்கும் அறிமுகமாக நகுலன். இந்த பாராட்டுக்கள் ஆட்டத்துக்கும் அதிரடிக்கும் மட்டும்தான். டயலாக் ஏரியா வரும்போது குளோசப்பில் நகுலின் ரியாக்ஷன் இன்னும் அரிச்சுவடியை தாண்டாத நிலை.ஒட்டடைகுச்சியுமில்லாமல் ஓவர் வெயிட்டும்போடாமல் அளவான அங்கம், அழகான முகம் என சுனேனா கவர்கிறார். பெரும்பாலான காட்சிகளில் பிணமாகவே வந்தாலும், நடிப்பில் தெரிகிறது உயிர்ப்பு.மனநிலை பாதிக்கப்பட்ட நாயகனின் நடவடிக்கைக்கு கூறும் காரணத்தில் லாஜிக் இருந்தாலும், கதையின் அடிப்படையிலும் அது சொல்லப்படும் விதத்திலும் முந்தைய படமொன்றின் சாயல் இருப்பதால் திருப்தியின் அளவை குறைக்கிறது.க்ளைமாக்ஸில் 'குணா', 'காதல்கொண்டேன்' படங்களின் வாடை, பிண வாடையை பின்னுக்கு தள்ளுகிறது. பலூனில் மூச்சுக்காற்றை அடைப்பது, தூது விடுவது போன்றதெல்லாம் இருபது வருடங்களை கடந்த கான்செப்ட். பத்ரகாளியே வந்து ருத்ரதாண்டவம் ஆடினாலும் தலையில் தட்டி உட்காரவைத்துவிடும் இந்த காலத்தில், ஒத்தை ஆளாக ஒரு டஜன் ஆட்களை கொன்று குவிப்பதெல்லாம் குபீர் சிரிப்பை எழுப்புகிறது.படத்தின் முக்கிய கதாநாயகன்நாக்கு முக்கா..’ பாடல்தான். ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது என்பதற்காக இரண்டுமுறை வைத்திருப்பது சர்க்கரையை சாப்பாடாக்கியது போலாகிவிட்டது.’தோழியா என் காதலியா..’,’ உன் தலைமுடி...’ பாடல்களிலும் விஜய் ஆண்டனி மெலடிகிங்காக தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.விஞ்சில் சண்டைப்போடும் காட்சி உள்பட பல காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டனின் உழைப்பு பாராட்டுக்குரியது.’காதலில் விழுந்தேன்தோல்வியில் விழாது.

1 Comment

 1. Anonymous Says,

  கதை ரொம்ப நல்லா இருக்கு......

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments