TopBottom

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் மணிரத்னம் இயக்கும் புதியபடத்துக்கு அசோகவனம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இந்தி மற்றும் தெலுங்குப் படத்துக்குராவண் எனப் பெயர் சூட்டியுள்ளார் மணிரத்னம். அசோகவனத்தின் நாயகன் விக்ரம். அவருக்கு ஜோடிஐஸ்வர்யா ராய். பல முன்னணி நடிகர்களுடன்ஐஸ்வர்யாவின் கணவர் அபிஷேக் பச்சனும் முக்கியவேடத்தில் தோன்றுகிறார்.
இதன் இந்திப் பதிப்பில் ஐஸ்வர்யாராய் ஜோடியாகஅபிஷேக்பச்சன் நடிக்கிறார். அமிதாப்பச்சனும் இந்தப்படத்தில் நடிக்கிறார்.


மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து ரஜினி-மம்முட்டி நடிப்பில் தளபதியைஉருவாக்கியதுபோல, ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இப் படத்தைமணிரத்னம் உருவாக்கப் போகிறாரராம்.
கதாநாயகியை வில்லன் கடத்தி சிறை வைப்பது போலவும் கதாநாயகன் தேடிக்கண்டுபிடித்து அவரை மீட்பது போலவும் திரைக்கதை உருவாக்கியுள்ளார். தமிழில் ராவணன் என பெயர் வைப்பது எதிர்மறை பார்வையை உண்டாக்கும்என்பதால் அசோகவனம் என மாற்றியுள்ளார் மணி.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் முக்கியக் காட்சிகள் பலவற்றைஇலங்கையில் படமாக்கப் போகிறாராம்மணி். ஏற்கெனவே, கன்னத்தில்முத்தமிட்டால் படத்தை இலங்கையில்எடுத்த அனுபவம் உள்ளவர் மணிரத்னம். ராமாயணத்தின் முக்கியப் பகுதிநடைபெற்ற இடம் என்பதால்இலங்கையில்தான் படப்பிடிப்பு என்பதில்அவர் உறுதியாக உள்ளாராம்.



இந்தப் படம் தொடங்கப்படுவதற்கு முன்பே ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டுள்ளது. இளம் நடிகர் ஒருவர் அசோகவனம்- ஒரு கிலோ மீட்டர் எனும்தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் நிச்சயம்இந்தத் தலைப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார் என கூறப்படுகிறது.



ஆனால் சட்டப்படி தடுக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இப்போதே மாற்றுத்தலைப்பையும் யோசித்து வருகிறார் மணிரத்னம் என்கிறார்கள்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments