TopBottom

75 வருடகா தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது இருந்துவருகிறது.இது எம்.ஜி.ஆர்-சிவாஜி , ரஜினி- கமல் , விஜய் -அஜீத் , சிம்பு-தனுஷ் என்று நீண்டு கொண்டே செல்கிறது . இதில் அவர்கள் வெளியிடங்களில் நண்பர்களாக காட்டிக்கொண்டாலும் அவர்களின் ரசிகர்கள் சந்தித்துக்கொள்ளும்போது மோதல்கள் கூட ஏற்படிருக்கின்றன . இது பள்ளியிலிருந்து சினிமா தியேட்டர் வரையில் நடைபெறும் ஒன்றாகும்.

எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ற்றி மூடிக்கொள்வதால் விநியோகிஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் 'நட்டத்தை ஈடுகட்டு 'என குரல் கொடுப்பது குசேலன் தோல்வி மூலம் வெளிப்பட்டிருக்கிறது. இனி அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி அதலபாதாளத்தில் விழும் எந்த படமானாலும் , அதன் எதிர்விளைவு இப்படித்தான் இருக்கும் என்கிற நிலையில் , வேண்டுமென்று படத்தை கவிழ்க்க நடக்கும் இரகசிய சதிகள் பற்றி கவலையோடு சொல்கிறார்கள் திரைப்படத்துறையினர்.
ஒரு ஹீரோவின் படத்துக்கு மார்க்கெட்டில் அவருக்கு போட்டியாக இரு
க்கும் இன்னொரு ஹீரோவே வில்லனாகிறார் என்கிற அதிர்ச்சி தகவலையும் சேர்த்தே சொல்கிறார்கள்.

சுமார் 25 கோடிரூபா பட்ஜெட்டில் பரபரப்பான எதிர்பார்ப்போடு வெளியான படம்விஷால் நடித்த
'சத்யம் ' . விஷாலும் நயன்தாராவும் நெருங்கி இழைந்த ஸ்டில்கள் பிரேம் பை பிரேமாக முன்கூட்டியே வெளியிடப்பட்டதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாயிருந்த்தது. படம் வெளி வரும் முன் இருந்த 'டாக்' வெளிவந்த பின்பு இல்லை. இதற்கு பல காரணங்களையும் கூறும் திரையுலகத்தினர் புதிதாக ஒரு காரணத்தையும் சொல்கிறார்கள்.

'படம் ரிலீசான அன்னைக்கு முதல் ஷோவுக்கு ரசிகர்கள் வருவதற்கு முன்பேவிஜய் ரசிகர்கள் வந்துவிட்டார்கள் . 20 , 30 பேர் அளவுக்கு வந்து டிக்கட் வாங்கி கிட்டு தியேட்டரினுள் இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் அணி பிரிந்துஉக்கார்ந்திட்டாங்க .படத்தில் விஷால் பேசும் டயலாகுகளுகெல்லாம் நெகடிவ்கமென்ட் பாஸ் பண்ணிக்கிட்டேயிருந்த்தாங்க .படத்தில் தொய்வு ஏற்படும் இடங்களில் ஊளையிடுவது , நக்கலடிப்பதுன்னு அவங்களோட நெகடிவ் அப்ரோச் படம் பார்க்க வந்த பலரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. படம் சுமார் என்கிற மனநிலையில் இருந்த்தவர்களிடமும் கூட படம் குப்பை படம் தோல்வி என்கிற விஜய் ரசிகர்களின் கமென்ட் வொர்க் அவுட் ஆகிவிட்டது. படங்களை காலி செய்ய ரசிகர்கள் கடைப்பிடிக்கும் இந்த நெகடிவ் கமென்ட் டெக்னிக் அதிகரித்திருக்கிறது என்கின்றனர்.

தமிழ் சினிமாவில் 'இளைய தளபதி ' என்கிற பட்டம் சூட்டப்பட்டபின் விஜய் பிறகு 'தளபதி' என்று ஷோர்ட் அண்ட் ஸ்மார்ட் ஆனார் .
அவரைப்போலவே ஆகஷன்களில் வேகம் காட்டிய விஷால் 'மலைக்கோட்டை' படத்திலிருந்து 'புரட்சி தளபதி' ஆனார் .போட்டி தளபதி உருவாகுவது விஜய் தரப்புக்கு எரிச்சலை உண்டாக்க , அதற்கு வைத்த ஆப்பு தான் நெகடிவ் கமென்ட் அட்டாக் என்றும் , விஜயின் அப்பா எஸ்..சந்திர சேகரும் இதன் பின்னணியில் இருக்கிறார் ."என்கிறது சத்யம் யூனிட் .

'
விஷாலுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் இது முதல் அனுபவம் .எங்க 'தல' படத்துக்கும் எப்பவும் இப்படித்தான் விஜய் ரசிகர்கள் நெகடிவ் கமென்ட் பாஸ் பண்ணுவாங்க" என்கிறார்கள் அஜித் ரசிகர்கள் ."எங்க தல நடிக்கும் படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைக்கும் . படம் நல்ல இருந்தா பிச்சிக்கிட்டு போகும் . கிரீடம் ,ஆழ்வார், பரமசிவன்னு 'தல' நடிச்ச படங்கள் சுமார் ரகம்னு மக்கள்கிட்ட பேச்சு இருந்தது. அதை வச்சு படத்தை குப்பிற தள்ளுறதுக்காகவே விஜய் ரசிகர்கள் எங்கள விட ஆர்வமா தியேட்டருக்கு வந்து டிக்கட் எடுத்து ,அங்கங்கே உக்கார்ந்துகிட்டு சவுண்டு விடுவாங்க.இன்டர்வெல் நேரத்தில் கேன்டீன் , டோயலட்...? இங்கெல்லாம் நெகடிவ் கமென்ட்பாஸாவும். அதனால மினிமமா ஊட வேண்டிய படங்கள் கூட ஊத்திக்கும்." என்பது அஜித் ரசிகர்களின் குமுறலாக இருக்கிறது.

ஹீரோக்களின் இந்த கமன்ட் அட்டாக் புதிதல்ல என்றும், எம்.ஜி.ஆர் -சிவாஜிகமல்-ரஜினி ஆகியோர் மார்க்கெட்டில் கடும்
போட்டியிட்ட காலங்களில் இருந்தது என்று சொல்லும் தமிழ் சினிமாவுலகத்தினர் மீண்டும் அந்த போக்கை இளைய தலைமுறை ஹீரோக்கள் உருவாக்கியிருப்பதும், பேர்சனல் பிரச்சனைகளால்இந்த அட்டாக் அதிகரிப்பதும் ஆரோக்கியமானதல்ல "என்கிறார்கள். நயன்தாராவுடன் விஷால் நெருக்கம் என்ற செய்திகள் பரவியதால் டென்சனில் இருந்த சிம்பு தரப்பிலிருந்தும் 'சத்யம் ' படத்துக்கு ரசிகர்கள் அனுப்பப்பட்டு நெகடிவ் கமென்ட் பாஸ் செய்திருக்கிறார்களாம்.

விஜய் படங்களும் இது போன்ற நெகடிவ் அட்டாகிலிருந்து தப்பிக்கவில்லை என்கிறார்கள் விநியோகிஸ்தர்கள். "ஆதி" படம் ரிலிசானபோது அஜித் ரசிகர்கள் கணிசமாக வந்தார்கள் , படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே படத்தின் டைட்டிலைமாற்றி அசிங்கமான வார்த்தையை உதிர்த்திவிட்டு போவது வழக்கமா இருந்தது. "அழகிய தமிழ் மகன்" படம் வந்தபோதும் இப்படித்தான்" என்று முன்னைய நிகழ்வுகளை விளக்கினார்கள்.


நெகடிவ் கமெண்டால் உங்க படம் பாதிக்கப்பட்டிருக்கா? என 'சத்யம்'பட இயக்குனரிடம் கேட்ட போது , "சிட்டி கமிசினரா இருந்த 'லத்திகாசரண்'என்கவுண்டருக்கு
எதிரா நக்கீரனில் ஒரு பேட்டி கொடுத்திருந்தாங்க .போலிஷ் டிப்பார்ட்மென்டில் என்கவுண்டர் என்கிற வார்த்தையே கிடையாதுன்னு சொல்லியிருந்தாங்க .அதுதான் எங்க படத்துக்கு இன்பிரேஷன் 50 ரூபா புல்லட்டில் ஒரு உயிரை காலி பண்ணுவது பற்றி பேன்டசியா வசனம் பேசும் தமிழ் ஹீரோக்களுக்கு நடுவே வித்தியாசமான போலிஷ் கேரக்டரை கண்டுவந்தோம் . சத்யம் படம் நல்லா போயிருக்கு, பப்ளிக் டாக் என்ன என்கிறதுதான் முக்கியம்" என்றார்.
வசூல் கணக்குகளை சுட்டி காட்டும் திரையுலகத்தினர் "நெகடிவ் கமன்ட் என்பது போட்டி பொறாமையின் வெளிப்பாடு .இளைய ஹீரோக்கள் தரப்பில் இப்படி நடந்து கொள்வது அவங்க கேரியரை பாதிக்கும் .ஆனா ,நெகடிவ் கமெண்டே ஒருபடத்தை மொத்தமாக கவிழ்த்து விடாது. மக்களுக்கு பிடிச்சுப்போயிடுச்சுன்னாஅதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதுங்கிறதுதான் 75 வருட கால சினிமாவுலகின் நிஜம்"என்கிறார்கள்.


இந்த கட்டுரை இலங்கை பத்திரிகை ஒன்றில் வெளிவந்ததாகும்.

2 Comments

 1. Anonymous Says,

  super anna

   
 2. Reply To This Comment
 3. Anonymous Says,

  இந்த பதிவை யாராவது தமிழ்மணத்தில் இணைத்தால் நன்றாக இருக்கும்.

   
 4. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments