TopBottom

தமிழ் சினிமா உருவாகி 75 வருட காலம் ஆகிறது. உலகில் நவீன விடயங்கள் வர வர தமிழ் சினிமாவும் நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது. இது இசைத்துறைக்கும் பொருந்தும் , ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அத்திரைப்படத்தின் இசை முக்கியமானதாகும். ஒரு திகில் திரைப்படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியமானதோ , பாடல்களுக்கும் முக்கியமானதாகும்.


முன்பொரு கால கட்டத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் + கண்ணதாசன் என்ற கூட்டணி தமிழ் திரையிசை உலகை ஆக்கிரமித்து ஆட்சி செய்துகொண்டிருந்தது. இந்த கூட்டணி தொட்டதெல்லாம் துலங்கியது. இந்த கூட்டணியின் இசையலை ஓயும் கட்டத்தில் , புதிய கூட்டணியாக உருவெடுத்ததுதான் இளைய ராஜா + வைரமுத்து கூட்டணி.இந்த கூட்டணியின் இணைப்பும் ஒரு புதிய பரிணாமத்தை தமிழ் திரை உலகில் ஏற்படுத்தியது.

எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடுவதற்கு இவர்களின் கூட்டமைப்பில் வெளிவந்த பாடல்கள் மட்டுமே காரணமாக இருந்த ஒரு கால கட்டமும் இருந்தது. இன்றும் பல உதடுகள் முணுமுணுக்கும் மனது மறக்காத பல பாடல்கள் இளையராஜா + வைரமுத்து கூட்டணியில் வெளிவந்தவைதான்.

அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா , காதல் ஓவியம்,முதல் மரியாதை என்று வெற்றித் திரைப்படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கிடையில் வைரமுத்து , இளையராஜாவுக்கு இடையில் ஏற்பட்ட சிறிய பிளவு பெரிதாக்கப்பட , தமிழ் திரையிசை உலகின் பொற்கால கூட்டணி உடைந்து போனது.

அதன் பின்னர் வந்த 10, 15 ஆண்டுகளுக்கு இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களில் பாடல் வரிகளை விட இசையே அதிகமாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
90 களில் உருவான மற்றொரு இசை கூட்டணி மீண்டும் ஒரு புத்தெழிச்சியையும்புத்துணர்ச்சியையும் தமிழ் திரை உலகில் கொண்டு வந்தது .இந்த இருவர்கூட்டணியில் முதல் பாடலே தேசிய விருதைப் பெற்றுக் கொண்டதோடுஇன்னும் பல தேசிய விருதுகளையும் அள்ளிக் கொண்ட வைரமுத்து + ரஹ்மான்கூட்
டணிதான் அது. தமிழ் திரை உலகை எல்லைகள் தாண்டி கொண்ண்டு சென்றபெருமையும் இந்த கூட்டணிக்கு உண்டென்றால் அது மிகையல்ல.
எனினும் அதிக திரைப்படங்கள் வெளிவரும் மும்முரமும் வித்தியாசமானரசனைகளை ரசிகர்களும் , தயாரிப்பாளர்களும் ஏன் இசையமைப்பாளர்களுமேவிரும்பிய காரணமும் புதிய பல பாடலாசிரியர்களை தமிழ் திரையுலகில்காணுவதற்கு காரணமாக அமைந்த
து.அத்துடன் புதுமை விரும்பிகளான பலஇயக்குநர்கள் அறிமுகப்படுத்திய பல புதிய இசையமைப்பாளர்கள் தங்கள்அலைவரிசைக்கு ஒத்துப் போகக்கூடிய தங்கள் எண்ணக் கருத்துக்களைசுருக்கமான நவீனத்துவமான தமிழில் கொண்டுவரக்கூடிய காத்திரமானபடைப்பாளிகளை தேடிப்பிடிக்க ஆரம்பித்தனர் . இவர்களில் வித்தியாசாகர் , யுவன்சங்கர்ராஜா , ஹரிஸ் ஜெயராஜ் போன்றோர் தங்கள் இசைகளைநவீனத்துவப் படுத்தியது மட்டுமல்லாமல் , அது ரசிகர்களை ஈர்த்து எடுப்பதற்குமிக முக்கியமான பாலமாக தரமான நவீனத்துவப் பாணியில் அமைந்த பாடல்வரிகளை பயன்படுத்திக்கொண்டனர்.அது வெற்றியும் கண்டது.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்த 3 முன்னணிஇசையமைப்பாளர்களுமே தங்களது ஆஸ்தான கவிஞர்களாக வெவ்வேபட்டஇளம் கலைஞர்களை பயன்படுத்தி வெற்றிக்கான பாதையை வழிவகுத்துக்கொண்டனர். இதில் பா.விஜய் , யுகபாரதி ,கபிலன் , அறிவுமதி என்று ஒருபரந்துபட்ட கவிஞர் பட்டாளத்தை அறிமுகப்படுத்தியும் பிரபல்யப்படுத்தியும்
தனது தனி முத்திரையை பதித்தார் இசையமைப்பாளர் வித்தியாசாகர்.


யுவன்சங்கர்ராஜா, முத்துக்குமாரை தன் நவீனத்துவ இசைவடிவங்களுடன்நேர்த்தியான முறையில் கையாண்டு பாராட்டுக்களை வென்றெடுத்ததோடு, மிககுறுகிய காலத்தில் காத்திரமான பாடல்களை வழங்க்கியுமிருந்தார்.

ஹரிஸ் ஜெயராஜ் + தாமரை கூட்டணி இன்னுமொரு வெற்றிக் கூட்டணிமின்னலே' திரைப்படத்திலிருந்து 'வாரணம் ஆயிரம்' வரை தொடர்ந்தும்வெற்றிகரமான ஜனரஞ்சகமான , அதே நேரத்தில் தரமான பாடல்களை இந்தஇணைப்பில் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த கூட்டணிகளில் உயர்ந்த ரசனை மட்டத்திலும் அதேவேளை ஜனரஞ்சக தரத்திலும் மிகுந்த பாடல்களை தரும் கூட்டணிகள் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கின்றன. முன்னைய பொற்கால கூட்டணிகளை இந்த கூட்டணிகள் நிகர்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென்பதை நாம் துணிந்துசொல்லலாம். '

1 Comment

 1. nice post

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments