TopBottom

வரும், ஆனா வராது... இப்படி என்னத்தே கன்னய்யா மாதிரி பிலிம் காட்டி, வேறொரு படத்தின் ரிலீசையும் கெடுத்தது வாரணம் ஆயிரம்.

தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்று கேள்வியுற்றவுடன், “என்ன செய்வீங்களோ தெரியாது. ஏகனும் தீபாவளிக்கு வந்திடணும்” என்றாராம் அஜீத். வேக வேகமாக செயல்பட்டு அஜீத்தின் ஆசையை நிறைவேற்றி விட்டார் ராஜுசுந்தரம். சில தினங்களுக்கு முன்பு வரை, தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்துக் கொண்டேயிருந்தது வாரணம் ஆயிரம். இந்த மலைகளோடு எதற்கு மோதுவானேன்? என்பதால், தியேட்டரில் ஒப்பந்தமே செய்திருந்த நிலையிலும், போட்டியில் இருந்து விலகிக் கொண்டது மாதவனின் குரு என் ஆளு.இந்த நிலையில் திடீரென்று தீபாவளி ரிலீஸ் விளம்பரத்தை நிறுத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டது வாரணம் ஆயிரம். குழந்தைகள் தினமான நவம்பர் 14 ந் தேதி திரைக்கு வருவதாக முடிவெடுத்திருக்கிறார் படத்தின் ஆல் ஏரியா விநியோகஸ்தர். இவர் யார் தெரியுமா?மு.க.அழகிரியின் புதல்வர் அறிவுநிதி. படத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கிவிட்டாராம்.

தள்ளிப்போட்ட எண்ணத்தை புதுப்பித்துக் கொண்ட குரு என் ஆளு, மீண்டும் தியேட்டருக்கு ட்ரை பண்ண, எல்லா தியேட்டரையும் ஏகன், சேவல் இரண்டு படங்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார்களாம். இதற்கிடையில் வாரணம் ஆயிரம் படத்தை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் அமர்ந்து தனது ஒளிப்பதிவாளருடன் பார்த்தார் இயக்குனர் கௌதம் மேனன். இருவர் மட்டுமே இருந்த தியேட்டரில், வெளியாட்கள் யாரையும் அனுமதிக்காமல் வெளியே காவலுக்கு நின்றார்கள் ஊழியர்கள்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments