TopBottom

நமிதாவின் மறு பக்கங்கள்

எழுதியவர் : Karthikan Karunakaran 30 October 2008

நமிதாவின் மறுபக்கம் என்றதும் கற்பனையில் மூழ்கும் ஜொள்ளர்களுக்கு முதலில் ஒரு குட்டு. இது மனசின் மறுபக்கம்.


வெயிலில் காயும் உதவியாளர்களை பார்த்துக்கொண்டே பழச்சாறு அருந்தும் சில நடிகைகளுக்கு மத்தியில் நமிதா ரொம்பவே மாறுபட்டவராம். படப்பிடிப்பு தளத்தில் யூனிட்டில் உள்ள ஆட்களுக்கு ஏதாவது ஒன்றால் உதவிக்கரம் நீட்டுவதில் முதல் ஆளாக நிற்பாராம்.



ஒருமுறை ‘பம்பரக் கண்ணாலே' படத்தின் பாடல் காட்சி எடுத்தபோது நடந்த சம்பவம் ஒன்றை நினைவுகூறுகிறார் அப்படத்தில் பணியாற்றிய ஒருவர். மிளகாய் வத்தல் மீது நமிதாவும், டான்ஸர்கள் பலரும் ஆடவேண்டிய காட்சி. முதல் டேக் எடுக்கும்போதே டான்ஸர்களின் நாசி கரம்மசாலாவாக, பாதி பாடல் எடுத்து முடிப்பதற்குள் தும்மலும் விம்மலுமாக தொந்தரவுகளை அனுபவித்தனராம்.



இதைபார்த்த நமியின் மனசு இளகிவிட்டதாம். உடனே தனது சம்பளத்திலிருந்து சில லட்சங்களை எடுத்து டான்ஸர்களுக்கு தனது சார்பில் கூடுதல் சம்பளம் தரச்செய்தாராம். இது மட்டுமின்றி தான் நடிக்கும் படங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தன்னால் முடிந்தவரை பண உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம். இது வெளியே பப்ளிசிட்டி ஆகக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாராம்.அதுமட்டுமல்லாமல் , வெளியிடங்களில் தமிழில் பேசுவதை கேவலமாக நினைக்கும் சில தமிழ் நடிகைகளுக்கு மத்தியில் வேறு மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் தமிழில் பேச முயற்சிக்கும் இவருடைய ஆர்வம் வியக்க வைக்கிறது.




இப்படி நமிதாவின் மறுபக்கத்தை எழுத பல பக்கம் தேவைப்படும் என்கிறார் சினிமா பிரமுகர் ஒருவர்.தமிழ்த்திரையுலகில் கவர்ச்சி நடிகைகளாக கலக்கிய சில்க்ஸ்மிதா, அனுராதா உள்ளிட்ட பலரும் மனிதநேயம்மிக்கவர்களாக இருந்துள்ளனர்.



பூஜா போன்ற இளம் நடிகைகள் சிலர் ஆதரவற்ற குழந்தைகளின் நலனில் அக்கறைகாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளின்போது மட்டும் சில்லரை உதவிகளை செய்து சீப்பான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் சில நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் நமீதா, பூஜா போன்றவர்களின் நல்ல மனசுக்கு கோயில் கட்டினாலும் தப்பில்லை.

1 Comment

  1. அந்தக் குழந்தை முகத்துக்குள் இப்படி ஒரு கருணை முகமா!

     
  2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments