TopBottom

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.

இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்
ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.

உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Updated

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.

ஈழத்தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் உலகத்தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த்திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்நடிகர்களுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க மறுத்த நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம்" என்று கொந்தளித்த ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிலவற்றிலும் இறங்கினர். சில இடங்களில் கல்வீச்சு, போஸ்டர் கிழிப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி அக்டோபர் 25 இல் பாரீஸ் நகரில் ஏகன் திரைப்படத்தை வெளியிடமுடியாத சூழல் உண்டாகியுள்ளது.

இவ்வாறு உலகத்தமிழர் ஏகன் திரைப்படத்தை புறக்கணித்ததும் ஏகனை வெற்றிகரமாக திரையிட விரும்பிய, ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் என முழங்கிய நடிகர் அஜித், ஏதும் செய்ய முடியாத நிலையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்து, “ நடிகர் சங்கம் எடுத்துள்ள உண்ணாவிரத போராட்ட முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனவே கட்டாயம் சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நானும் கலந்துகொள்வேன். ஈழத்தில் அப்பாவித்தமிழர்கள் தாக்கப்படுவதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிப்பேன்” என ஈழத்தமிழருக்கு எதிராக பேசிய நடிகர் அஜீத் நக்கீரன் செய்தியாளார் லெனின் அவர்களுக்கு உறுதி கூறினார்.

ஈழ தமிழருக்கு ஆதரவு தருவதாக அஜித் மற்றும் அர்ஜுன் உறுதியளித்த வீடியோ காட்சி இங்கே கிளிக் செய்யவும்

தமது தல நடித்த ஏகன் வெற்றிகரமாக திரையிட விரும்பிய ரசிகர் மன்றத்தினர் "திரையுலகில் இருக்கும் ஒரு சில விஷமிகள்தான் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி உள்ளனர் " என்று கூறி வருகின்றனர்.

4 Comments

 1. அடப்பாவிகளா!

   
 2. Reply To This Comment
 3. kanojan Says,

  தல ஒரு தருதல

  ஆயிரம்
  ஆயிரம் தமிழ் சொந்தங்கள்
  சொந்தமண்னில் படாத பாடு
  படுகிறர்கள் அதை வெறும்
  எலுத்துக்களாலும்
  வார்த்தைகளலும் வடிக்க
  முடியதவைகள்
  அதர்க ்கு குரல்
  கொடுக்கவும் உண்ணாவிரதம்
  இருக்கவும் எதர்க்கு என்று
  கேட்க்கும் அஜித்
  உனர்ச்சி உள்ள மனிதனா??

   
 4. Reply To This Comment
 5. sithurar Says,

  தல ஒரு தருதல

  ஆயிரம்
  ஆயிரம் தமிழ் சொந்தங்கள்
  சொந்தமண்னில் படாத பாடு
  படுகிறர்கள் அதை வெறும்
  எலுத்துக்களாலும்
  வார்த்தைகளலும் வடிக்க
  முடியதவைகள்
  அதர்க ்கு குரல்
  கொடுக்கவும் உண்ணாவிரதம்
  இருக்கவும் எதர்க்கு என்று
  கேட்க்கும் அஜித்
  உனர்ச்சி உள்ள மனிதனா??
  தமிழ் மண்ணிலா
  பிறந்தான்

   
 6. Reply To This Comment
 7. Honey Tamil Says,

  ஆயிரம்
  ஆயிரம் தமிழ் சொந்தங்கள்
  சொந்தமண்னில் படாத பாடு
  படுகிறர்கள் அதை வெறும்
  எலுத்துக்களாலும்
  வார்த்தைகளலும் வடிக்க
  முடியதவைகள்
  அதர்க ்கு குரல்
  கொடுக்கவும் உண்ணாவிரதம்
  இருக்கவும் எதர்க்கு என்று
  கேட்க்கும் அஜித்
  உனர்ச்சி உள்ள மனிதனா??
  தமிழ் மண்ணிலா
  பிறந்தான்

  நண்பரே அஜித் பிறந்தது கேரளாவில் தான் ஆனால் அவரை வாழ வைப்பது தமிழ் ரசிகர்களே

   
 8. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments