TopBottom

அட்டகாசமான வாண வேடிக்கை... காதை பிளக்கும் பட்டாசு சத்தம்.... வானத்து நட்சத¢திரங்களுக்கு போட்டியாக திரை நட்சத்திரங்கள் அணிவகுப்பு.... ஷாருக் கான் முதல் மைக்கேல் ஜோர்டான் வரை பார்க்கும் இடமெல்லாம் பிரபலங்கள்... சில நாட்களுக்கு முன்பு அதிர்ந்தது துபாய்.

அப்படியென்ன விசேஷம் என்கிறீர்களா? அட்லாண்டிஸ் என்ற மிக பிரம்மாண்டமான சொகுசு ஓட்டல் பால்ம் ஜுமைரா என்ற செயற்கை தீவில் திறக்கப்பட்டது. அதில்தான் இத்தனை உற்சாகங்களும்!

சும்மா சொல்லக் கூடாது.... திறப்பு விழாவுக்காக மட்டும் ரூ.101 கோடியை வாரி இறைத்து இருக்கின்றனர் ஓட்டல் உரிமையாளர்கள். தென்னாப்பிரிக்க கோடீஸ்வர் சால் கெர்ஸ்னர்தான் இதன் உரிமையாளர். இந்த ஓட்டலுக்காக துபாயை சேர்ந்த நகீல் என்பவரோடு கைகோர்த்து உள்ளார்.

திறப்பு விழாவின் தலைமை விருந்தினராக அமெரிக்க டாக் ஷோ புகழ் ஓபரா வின்ப்ரே வருவதாக
இருந்தது. ஆனால் ஒரு தீ விபத்தில் அவரது வீடு சேதமடைந்ததால் ஆப்சென்ட். இருந்தால் என்ன? உடனே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வளைத்தார் கெர்ஸ்னர்.

ஷாருக் மட்டுமா? உலகின் மிகப் பிரபலமான நடிகர்கள், மாடல்கள், விளையாட்டு வீரர்கள் என மகா பிரமாண்
டமாக நடந்தது தொடக்க விழா. பாலிவுட் கனவுக்கன்னிகள் பிரியங்கா சோப்ரா, மல்லிகா ஷெராவத், டென்னிஸ் உலகை கலக்கிய போரீஸ் பெக்கர், கூடைப்பந்து நட்சத்திரம் மைக்கேல் ஜோர்டான், விர்ஜின் நிறுவன அதிபர் ரிச்சர்டு பிரான்சனும் விருந்தினர்களில் அடக்கம்.

கொண்டாட்டத்தை குறிக்க வாண வேடிக்கை நடத்தப்பட்டது. இது சீனாவில் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவின்போது நடந்ததை விட 7 மடங்கு அதிகம¢ என்பது வாய்பிளக்க வைக்கும் சேதி.

உலகை அசத்தியுள்ள அந்த ஓட்டலின் ஜாதகம் இதோ!

கடலில் வண்டி வண்டியாக மணலை கொட்டி செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுதான் பால்ம் ஜுமைரா. அதில் மொத்தம் 115 ஏக்கர் பரப்பளவில் வானுயர கட்டிடங்களுடன் காட்சி அளிக்கிறது அட்லாண்டிஸ்.

இதில் 1,539 அறைகள் உள்ளன. இதன் உள் அலங்காரங்கள் பார்ப்பவர்களை சொக்க வைக்கின்றன. கண்ணாடியில் அட்டகாசமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு உ
ள்ளன. லாபியில் கண்ணாடி சிற¢பங்கள் கொள்ளை அழகு.

இந்த மெகா ஓட்டலை கட்ட தென்னாப்பிரிக்க கோடீஸ்வரர் கெர்ஸ்னர் ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவு செய்துள்ளார். உலகில் எந்த ஒரு ஓட்டலும் இவ்வளவு பெரிய தொகையை விழுங்கியதில்லை.

மொத்தம் 58 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பிகள் இந்த ஓட்டலை கட்ட பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது சீன பெருஞ்சுவரை விட 9 மடங்கு அதிகமாம்.

65 ஆயிரம் கடல் வாழ் உயரினங்கள் உள்ள மிகப் பெரிய காட்சியகம் உள்ளது. இதில் இல்லாத உயிரினங்களே இல்லை என்ற அளவுக்கு இருக்கிறதாம்.

டால்பின் பே என்ற பகுதியில் டால்பின் மீன்களுடன் ஒன்றரை மணி நேரம் நீந்தலாம். இதற்கு கட்டணம் ரூ.5,625. மொத்தம் 24 டால்பின்கள் உள்ளன. புதிதாக 2 டால்பின் குட்டிகள் பிறந்துள்ளவாம். 11 ஏக்கரில் இது உள்ளது. இந்த டால்பின்கள் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டன.

படுக்கையில்
இருந்து பார்த்தாலே கடல் தெரியும் விதத்தில் அறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஒரு இரவு தங்க குறைந்தபட¢ச கட்டணம் ரூ.60 ஆயிரம். அதிகபட்சமாக 22வது மாடியில் அமைந்துள்ள பிரிட்ஜ் சூட்டில் தங்க ரூ.18 லட்சம் கட்டணம். 3 பெட்ரூம், 3 பாத்ரூம், தங்கத்தால் இழைக்கப்பட்ட டைனிங் டேபிள் ஆகியவை இதன் விசேஷம்.

அக்வாவென்ச¢சர் என்ற நீர் சாகச விளையாட்டு பகுதியும் உண்டு. 1.8 கோடி லிட்டர் தண்ணீர் இங்கு இருக்கும். இது மட்டும் 42 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 30 மீட்டர் உயரத்தில் இருந்தபடி, செங்குத்தாக சறுக்கிக் கொண்டே வரலாம்.

ஜிக்குரத் என்பது அதன் பெயர். மேலே இருந்து கீழே பார்த்தால், ஒரு கணம் கை நடுங்கும். அவ்வளவு செங்குத்தான சறுக்கு பாதையின் பக்கத்தில் சுறா மீன் இருக்கும் என்பது சாகச பிரியர்களுக்கு மட்டும் இனிப்பான சேதி.

சாப்பிட்டுக் கொண்டு பக்கவாட்டு கண்ணாடியில் கடல் வாழ் உயிரினங்களை பார்த்து ரசிக்கலாம். நடுவில் ஒரு கண்ணாடி மட்டும்தான் தடுப்பு. மொத்தம் 17 உணவகங்கள், பார்கள், நைட்கிளப், ஸ்பா உள்ளன.

7 Comments

 1. இந்த சமயத்தில் யாராவது வருவாங்களா??

   
 2. Reply To This Comment
 3. பாப்பம்.

   
 4. Reply To This Comment
 5. Anonymous Says,

  1、We have excellent customer service team, which could solve online various problems about the Air Jordan we provide in 24 hours.
  2、We have perfect Logistics system, which guarantees all the ordered Nike Air Jordan shoes are delivered to you in good shape as fast as possible.
  3、We have strong manufacture plant, which are able to provide various models, sizes & colors of Air Jordan shoes ranging from 1 to 23 according to what you request.
  4、We have the first-rate after-sale service , in case that the Jordan Shoes products that you receive come across some quality problems, then, please do not worry, we are abound to refund all the payment in one week,. Also, the products can be changed in one me month.The main products we specialize in are showed as follows


  Our Jordan Shoes:
  Air Jordan 7
  Air Jordan 8
  Air Jordan 9
  Air Jordan 10
  Air Jordan 11
  Air Jordan 12

  Jordan 7
  Jordan 8
  Jordan 9
  Jordan 10
  Jordan 11
  Jordan 12

   
 6. Reply To This Comment
 7. Anonymous Says,
   
 8. Reply To This Comment
 9. LOSHAN Says,

  அருமை.. எனது பதிவை விட விரிவான, தகவல்களோடு கூடிய பதிவு..
  நான் கிடைத்த படங்களுக்கு தகவல் சேர்த்தேன்.. நீங்கள் முதல்லயே கலக்கிட்டீங்க

   
 10. Reply To This Comment
 11. Karthik Says,

  பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா ....!

   
 12. Reply To This Comment
 13. Anonymous Says,

  To buy shaiya gold , it is not the aim of the cable. It is the game which brings a lot of happiness to me. We buy the shaiya money together. The beautiful story, we can not be forgotten buy shaiya gold . You will not regret to have cheap shaiya gold . So I will continue to have shaiya online gold , it is a beautiful fairy tale, it looks like my life.

   
 14. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments