TopBottom

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடி போர்நிறுத்தம் கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காலை 8 மணிக்குத் துவங்கியது உண்ணாவிரதம்.

நடிகர் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல் மற்றும் மேடையில் தமிழின் முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோர் காலையிலே வந்துவிட்டனர்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கி வைத்தார். மேடைக்கு வந்த ஒவ்வொருவரும் இதேபோல மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துப் பேசினர்.

நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி, சிவக்குமார், நெப்போலியன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், பசுபதி, அர்ஜூன், மணிவண்ணன், வடிவேலு, சுந்தர் சி, நடிகைகள் சினேகா, மும்தாஜ், ராதிகா சரத்குமார், சத்யப்பிரியா, குயிலி, மனோரமா உள்பட பலரும் காலையிலேயே உண்ணாவிரதத்துக்கு வந்துவிட்டனர்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரையும் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி பேச அழைத்தார். மிகுந்த எச்சரிக்கையுடன் ஒரு சில வார்த்தைகளில் தங்கள் உணர்வுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

அஜீத் வந்தார்:

காலை 9 மணிக்கு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்தார் அஜீத். முழுக்க கறுப்பு உடை அணிந்து வந்திருந்த அஜீத்தை ராதாரவியும் விஜய்யும் வரவேற்றனர். அஜீத்தும் விஜய்யும் கைகொடுத்து பேசிக் கொண்டிருந்ததை புகைப்படமெடுக்க பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் முண்டியடிக்க, உடனே ராதாரவி, 'இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக நடக்கும் ஒரு புனிதப் போராட்டம். தயவுசெய்து அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்...' என்றார் கண்டிப்புடன்.

விஜயகாந்த்:

11.30 மணிக்கு நடிகர் விஜயகாந்த் வருகை தந்தார். மேடையில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

வந்தார் ரஜினி:

மாலையில்தான் வருவார் எனக் கூறப்பட்ட ரஜினி, பகல் 11.45 மணிக்கு வந்துவிட்டார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்று மேடையில் அமர வைத்தனர்.

ரஜினி வந்த ஒரு மணி நேரம் கழித்து கமல்ஹாசன் உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.

நயன்தாரா- த்ரிஷா:

அதே போல நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

எம்ஜிஆர் பாடல்கள்:

நடிகர் நடிகைகளின் பேச்சுக்கு நடுவே மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.ரஜினிகாந்த பேச்சு


அஜித் பேச்சு


விஜய் பேச்சு


விக்ரம் பேச்சு


மஞ்சூரலிகான் பேச்சுஉண்ணாவிரதமும் சில தமாஷ்களும்...

உணர்வை காட்டுகிற உண்ணாவிரதம்தான். இதிலேயும் சில தமாஷ்கள்அரங்கேறின. லாரன்ஸ் பேசும்போது விஜய், அஜீத் இருவரும் தனதுரசிகர்களிடம் சொல்லி நிதி திரட்டி கொடுக்க வேண்டும் என்று பேசினார். ஆனால்இதை கண்டு கொள்ளவே இல்லை இருவரும். விஜய் பேசும்போது, இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தனதுரசிகர்கள் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்றார். இன்னும் 24 மணிநேரத்திற்குள் குறைந்தது ஒரு கோடி தந்தியாவது அவருக்கு போய் சேரவேண்டும் என்றார். தமாஷ் என்னவென்றால், இவர் பேசியது சனிக்கிழமைபிற்பகலில். மாலை ஆறு மணியோடு பல ஊர்களில் தந்தி ஆபிசை மூடிவிடுவார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முழு விடுமுறை. இந்த நிலையில் 24 மணி நேர கெடு கொடுத்த விஜயின் யோசனையை எப்படி எடுத்துக் கொள்வது?

ராதாரவியின் பேச்சில் விஜய் பேச்சை விடவும் தமாஷ். ஈழத் தமிழர்களைஇலங்கை வாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டுமாம். அப்படி அழைத்தால்இந்தியா உதவும் என்றார். நல்லவேளையாக பின்னாலேயே பேச வந்ததிருமாவளவன், வரலாற்றை எடுத்துச் சொல்லி ராதாரவிக்கு புரிய வைத்தார். இலங்கையை பொறுத்தவரை வந்தேறிகள் என்பது சிங்களர்கள்தான். வேண்டுமென்றால் சிங்களவர்களைஇலங்கை வாழ் இந்தியர்கள்என்றுஅழைக்கலாம். ஏனென்றால், இந்திய அரசு அவர்களுக்குதான் மறைமுக உதவிசெய்கிறது என்றார் காட்டமாக!

3 Comments

 1. Anonymous Says,

  Hello chellam, Telegram is a emergency service. 24 mani neramum velai seiyanum. okva.

   
 2. Reply To This Comment
 3. Hello chellam, Telegram is a emergency service. 24 mani neramum velai seiyanum. okva.

  சில சில தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்..

   
 4. Reply To This Comment
 5. Anonymous Says,

  அவர் அவர்கள் தெரிந்து வைத்து உள்ளதை மனதில் வைத்து கொண்டு , அவர்களால் முடிந்த அளவு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இந்த நேரத்தில் அதில் குறை கண்டுபிடித்து கூறுவது ஒரு பொளப்பா?

   
 6. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments