TopBottom

மும்பை: மும்பை நகரில் நேற்று இரவு தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் மும்பை நகரம் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது.

இந்த திடீர் தாக்குதலால் மும்பை நகரமே போர்க்களம் போல மாறியுள்ளது.

மும்பையின் 9 இடங்களில் நேற்று திடீரென தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளுடன் தீவிரவாதிகள் வெறித்தனமான தாக்குதலில் இறங்கினர்.

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாஜ்மஹால் ஹோட்டல், டிரைடன்ட் ஹோட்டல் மற்றும் காமா ஹோட்டல் ஆகிய இடங்களில் இந்த பயங்கர தாக்குதல் நடந்தது.












பின்னர் மூன்று ஹோட்டல்களுக்குள்ளும் அவர்கள் புகுந்து அங்கு தங்கியிருப்பவர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸாரும், அதிரடிப்படையினரும் ஹோட்டல்களுக்கு விரைந்தனர்.

ராணுவமும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. ஹோட்டல்களுக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சண்டையும் தொடங்கியது.

9 தீவிரவாதிகள் சிக்கினர்

இரு தரப்பும் சரமாரியாக துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். இதில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 9 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

தெற்கு மும்பையில் மட்டும் 8 இடங்களில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொலை

இந்த துப்பாக்கிச் சண்டையில், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கர், கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே ஆகிய உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

காமா ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின் போது அசோக் காம்தே கொல்லப்பட்டார். மற்ற இருவரும் டிரைடன்ட் ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின்போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

தாஜ் மஹால் ஹோட்டலில் 200க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது.

அதேபோல டிரைடன்ட் மற்றும் காமா ஹோட்டல்களையும் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

மும்பை போலீஸ் கமிஷனர் ஹசன் கபூர் நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

மரியாட் ஹோட்டலுக்குப் பாதுகாப்பு

மும்பையின் இன்னொரு புகழ் பெற்ற ஹோட்டலான ஜே.எம்.மரியாட் ஹோட்டலை தீவிரவாதிகள் பிடிக்கப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடற்படை, என்.எஸ்.ஜி. விரைகிறது

மும்பையில் போர் போன்ற சூழ்நிலை நிலவுவதால் அங்கு ராணுவம் தவிர கடற்படை வீரர்கள் மற்றும் என்.எஸ்.ஜி. படையினரையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.

என்.எஸ்.ஜி. படையைச் சேர்ந்த 200 கமாண்டோக்கள் மும்பை விரைந்துள்ளனர். 5 காலம் ராணுவமும் அனுப்பப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள அதி விரைவுப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

சிவராஜ் பாட்டீல் விரைகிறார்

மும்பை சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், என்.எஸ்.ஜி. இயக்குநர் ஜோதி கிருஷ்ணன் தத்துடன் மும்பை விரைந்தார்.

தீவிரவாதிகளின் தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று கூறிய அவர், மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார்.

போர் சூழல் - மகாராஷ்டிர முதல்வர்

மும்பையில் தற்போது போர் போன்ற சூழல் நிலவுவதாக மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கும், துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீலும் தெரிவித்ுதள்ளனர்.

முதல்வர் தேஷ்முக், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைத் தொடர்பு கொண்டு மும்பை நிலவரம் குறித்து விளக்கினார்.

இன்று காலை மீண்டும் தொடங்கிய துப்பாக்கிச் சூடு

நேற்று தாஜ் மஹால் ஹோட்டலுக்குள் புகுந்து அங்கு தங்கியிருந்தவர்களை சிறை பிடித்த தீவிரவாதிகள் இன்று காலை மீண்டும் துப்பாக்கிச் சூட்டை தொடங்கியுள்ளனர். கையெறி குண்டுகளையும் அவர்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று அதிகாலை தீவிரவாதிகள் துப்பாக்கித் தாக்குதலை தொடங்கினர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு என்.எஸ்.ஜி. கமாண்டோ வீரர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தீப்பிடித்து எரியும் தாஜ் மஹால்!:



தீவிரவாதிகளின் கையெறி குண்டு வீச்சால் தாஜ் மஹால் ஹோட்டல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இன்று காலை வரை தீ எரிந்து கொண்டிருந்தது.

ஹோட்டலில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் ராட்சத கிரேன்கள் மற்றும் ஏணிகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

ராணுவம் தவிர கடற்படை வீரர்கள், கமாண்டோப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை வரை தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்புப் படையினர் தீயணைப்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த தாஜ் மஹால் ஹோட்டலின் ஒரு பகுதி தீயில் கருகி விட்டது.

ஹோட்டலில் தங்கியுள்ள பலர் தங்களது ஜன்னல்கள் வழியாக கைகளை அசைத்து உதவி செய்யுமாறு கோரி வருவது பார்க்கவே பரிதாபமாக உள்ளது.

2 ஹோட்டல்களில் தீவிரவாதிகளிடம் 15 பயண கைதிகள்

மும்பை தாஜ் ஹோட்டலில் 15 பேர் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகளாக சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதில் 7 பேர் வெளிநாட்டினர் ஆவர். இதில் சிலர் பிரசிலைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் விவரம் தெரியவில்லை.

அவர்களை இரண்டு தீவிரவாதிகள் ஒரு அறையில் அடைத்து துப்பாக்கி முனையில் வைத்துள்ளனர். அந்த தீவிரவாதிகளிடம் கிரணைட் குண்டுகளும் உள்ளதாகக் கருதப்படுகிறது.

நேற்றிரவு இந்த ஹோட்டலின் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்ட இரு தீவிரவாதிகள் 7 வெளிநாட்டினர் உள்ளிட்ட 20 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி ஹோட்டலின் மாடிக்கு கொண்டு சென்றனர்.

அமெரிக்கர்கள்-பிரிட்டிஷாரை தேடி வந்தனர்:


அவர்களைப் பிடித்தபோது உங்களில் யார் யார் அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதில் 5 பேர் தப்பியோடிவிட்டனர். மற்ற 15 பேரையும் 18வது மாடியில் ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்துள்ளனர்.

அதே போல ஓபராய் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளும் இங்கே அமெரிக்கர்கள், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் யார் என்று கேட்டபடியே தான் சுட்டுள்ளனர்.

பின்னர் சுமார் 10 முதல் 20 பேரை 4வது மாடியில் ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துள்ளனர்.

இந்த இரு ஹோட்டல்களிலும் பிணயக் கைதிகளை மீட்க நேற்றிரவு முதல் கமாண்டோ படையினர் முயன்று வருகின்றனர். ஆனால், இந்த மீட்புப் பணிகளையும் கமாண்டோக்கள் ஹோட்டலின் மீது ஏறுவைதயும் டிவிக்கள் நேரடியாக ரிலே செய்து வருவதால் அதை தீவிரவாதிகள் பார்த்துக் கொண்டுள்ளதாக உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து டிவி கேமராக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு கமாண்டோக்களின் முழு வேக ஆபரேசன் தொடங்கும் எனத் தெரிகிறது.

அதே போல நரிமன் ஹவுசிலும் சில தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர்.


பாகிஸ்தானிலிருந்து கடல் வழியே வந்த தீவிரவாதிகள்
மும்பையில் நடந்த தாக்குதலுக்கு டெக்கன் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால், இந்தத் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தான் என இன்டலிஜென்ஸ் பீரோ கூறியுள்ளது.

இதுரை வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியோ தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இந் நிலையில் மும்பையில் இம்முறை தீவிரவாதிகள் புதிய முறையைக் கையாண்டுள்ளனர்.

கையெறி குண்டுகளை வீசி அந்தப் பகுதியையே நிலை குலைய வைத்துவிட்டு அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் ஹோட்டல்களில் புகுந்து பலரையும் பிணயக் கைதிகளாகப் பிடித்துள்ளனர்.

பெரும்பாலும் ஏகே-47 ரக துப்பாக்கிகளையே அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஜீன்ஸ், கருப்பு டி-சர்ட், வலது கையில் சிவப்புக் கயிறு, ஒரு பை என்ற கோலத்தில் இந்த தீவிரவாதிகள் வந்தனர்.



பைகளில் வைத்திருந்த கிரணைட்களை எடுத்து திடீரென வீசிவிட்டு, அடுத்ததாக துப்பாக்கிகளை வெளியில் எடுத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கைகளில் சிவப்புக் கயிறு இருப்பதால் இவர்கள் நக்ஸல்களோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என டெக்கன் முஜாஹிதீன் என்ற அமைப்பு செய்தி நிறுவனங்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியது.

இந்த இ-மெயில் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளது. லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர் தான் இதை அனுப்பியதாக இன்டலிஜென்ஸ் பீரோ கூறுகிறது.

இதற்கிடேயே பிடிபட்ட தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. கராச்சியில் இருந்து அவர்கள் வந்ததாக கடல் வழியே நேரடியாக மும்பைக்குள் நுழைந்ததாக இன்டலிஜென்ஸ் பீரோ கூறுகிறது.









0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments