TopBottom


பீகாரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏமாற்றி ரூ.10 பெறுமான 4 சமோசாக்களை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

பீகாரில் சோனேபூரில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடக்கும் கால்நடை சந்தை உலக பிரசித்தி பெற்றது. இதை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் பீகார் வருவது வழக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமை, சந்தைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர், வயிறு பசிக்கவே அங்கிருந்த ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சமோசாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்த அவர்கள், அது என்ன என்று ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். தனக்கு தெரிந்த Ôபட்லர்Õ இங்கிலீஷில், அது அரிய வகை மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்ட சமோசா என்று அந்த ஓட்டல்காரர் கூறி உள்ளார். இதை சாப்பிட்டால், உடலுக்கு நல்லது, நீண்ட ஆயுள் பெறலாம் என்று இஷ்டத்துக்கு கதை அளந்துள்ளார்.


அதை உண்மை என்று நம்பிய வெளிநாட்டுக்காரர்கள் தலா இரண்டு சமோசாக்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர். பணம் கொடுக்க வெளிநாட்டுக்காரர் பர்சை திறந்தபோது, அதில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை ஓட்டல் உரிமையாளர் பார்த்துவிட்டார்.

சமோசாவுக்கு 100 ரூபாய் நோட்டை வெளிநாட்டுக்காரர் எடுத்துக் கொடுக்க, அவரை அடிக்க பாய்ந்துவிட்டார் ஓட்டல்காரர். Ôஒரு சமோசாவின் விலை ரூ.2,500, மொத்தம் ரூ.10 ஆயிரத்துக்கு சாப்பிட்டுவிட்டு நூறு ரூபாயா கொடுங்கிறீங்கÕ என்று வெளிநாட்டுக்காரர்களை மிரட்டினார்.

என்னதான் மூலிகை சமோசாவாக இருந்தாலும் இவ்வளவு விலையா என்று கூறி வெளிநாட்டுக்காரர்கள் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும், அவர்களை மிரட்டி, ரூ.10 ஆயிரத்தை பறித்துக் கொண்டார் கடைக்காரர்.

இவ்வளவு விலை உயர்ந்த உணவு பண்டமா என்று புலம்பியபடி அங்கிருந்து புறப்பட்ட வெளிநாட்டுக்காரர்கள் கண்ணில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்து சிறப்பு போலீஸ் அதிகாரி லோகிக் குமார் பட்டார்.

உடனடியாக அவரிடம் சென்ற வெளிநாட்டுக்காரர்கள், ÔÔஉங்கள் ஊரில் ஒரு சமோசா விலை 2,500 ரூபாயா?ÕÕ என்று கேட்டனர்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லோகிக் குமார், அவர்களிடம் விசாரித்த போது ரூ.2.50க்கு விற்கப்படும் சமோசா ரூ.2,500க்கு வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்கப்பட்டிருப்பது தெரிந்தது. உடனடியாக அந்த ஓட்டலுக்கு வெளிநாட்டுக்காரர்களை லோகிக்குமார் அழைத்துச் சென்றார்.

போலீசுடன் வெளிநாட்டுக்காரர்கள் வருவதை பார்த்த ஓட்டல் உரிமையாளர் பின்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டார். சுற்றுலா பயணிகளை இப்படியா ஏமாற்றுவது என்று கடை ஊழியர்களை லோகிக் குமார் கண்டித்தார்.

பின்னர், 4 சமோசாவுக்கு ரூ.10 போக மீதமுள்ள ரூ.9,990ஐ கடை ஊழியர்களிடம் இருந்து வாங்கி வெளிநாட்டுக்காரர்களிடம் கொடுத்துள்ளார். தலைமறைவாக உள்ள ஓட்டல் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

2 Comments

  1. vinoth Says,

    it's very funny

     
  2. Reply To This Comment
  3. it is not funny but a shame on indians. see how well foreigners treat Indian tourist.

     
  4. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments