TopBottom

சென்னை விமானத்தை கடத்தி தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னை விமான நிலையத்தில் 9 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த தாக்குதலை போல இன்னும் பல தாக்குதல்களை நடத்தி இந்தி யாவையே சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெரும் சதி திட்டத்தை தீட்டி உள்ளனர்.

எனவே அவர்கள் இன்னும் பல தாக்குதல்களை நடத்தலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட் டுள்ளனர்.

தீவிரவாதிகள் எந்தெந்த மாதிரி எல்லாம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ïகித்து அதன் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே `டெக்கான் முஜாகிதீன்' என்ற பெயரில் டெல்லி விமான நிலையத்துக்கு இ.மெயில் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று நேற்று வந்துள்ளது. மும்பையில் தீவிர வாதிகள் தாக்குதலை நடத்தியதும் தாக்குதலுக்கு பொறுப் பேற்று இந்த பெயரில் தான் இ.மெயில் வந்தது. இப்போது அவர்கள் 2-வது இ.மெயிலை அனுப்பி உள்ளனர்.

அதில் "டெல்லி, பெங்களூர், சென்னை விமான நிலையங்களை தகர்ப்போம் சரக்கு விமானங்களை கடத்தி தாக்குவோம். டிசம்பர் 3-ந் தேதியில் இருந்து 7-ந் தேதிக்குள் இந்த தாக்குதல் நடக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்த இ. மெயில் வந்ததும் உடனே நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டது. சென்னை, டெல்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.

தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி தாக்குதல் நடத்தினாலோ அல்லது விமானம் மூலம் வந்து தாக்குதல் நடத்தினாலோ அதை எப்படி முறியடிப்பது என்பது குறித்து ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாகும். எனவே இதையொட்டி தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவில் விமானங்களை கடத்தி கட்டிடங்களில் மோத செய்து தாக்குதல் நடத்தினார்கள். அதே போன்ற தாக்குதல்கள் நடக்கலாம் என்று கருதுவதால் அதை தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க 9 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், அதிவேக விரைவு படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்கின்றனர்.

விமான நிலையத்தை சுற்றியும், உள்ளேயும் அதிரடி படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். விமான நிலையம் முன் பகுதியில் பங்கர்கள் அமைத்து கமாண்டோ போலீசார் எந்திர துப்பாக்கியுடன் நிற்கின்றனர். விமான நிலைய வளாகத்துக்குள் வரும் பார் வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய போர்டிகோவில் 90 வினாடிகள் மட்டுமே கார்கள் நிற்க அனுமதிக்கப்படுகிறது.

விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் அதிரடி வீரர்கள் தொடர்ந்து வாக னங்களில் சுற்றி வருகிறார்கள். உள் பகுதியிலும் `பங்கர்கள்' அமைத்து வீரர் கள் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

9 அடுக்கு பாதுகாப்பு

1. விமான நிலையம் முன்பு உள்ள சி.எஸ்.டி.ரோடு மேம்பாலத்தில் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு.

2. விமான நிலையத்தை சுற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளது.

3. கண்காணிப்பு கோபுரங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளது.

4. விமான நிலையத்துக்கு வரும் சாலைகள், நுழைவு வாயிலில் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு.

5. கார் நிறுத்தும் இடங்களில் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு.

6. விமான நிலைய போர்டிகோ பகுதியில் `பங்கர்' அமைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

7. பயணிகள் உள்ளே நுழையும் பகுதியில் விமான நிலைய பாதுகாவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

8. விமான நிலையத்தின் உள் பகுதியில் பயணிகள் நடமாடும் இடம், விமானத்தில் ஏறும் இடம் ஆகியவற்றில் மத்திய தொழிற்படை பாதுகாப்பு.

9. விமான ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம் ஆகியவற்றிலும் அதிவேக விரைவு படை பாதுகாப்பு.

3 Comments

  1. Anonymous Says,

    :-o

     
  2. Reply To This Comment
  3. Anonymous Says,

    :-t

     
  4. Reply To This Comment
  5. Karthik Says,

    comment testing

     
  6. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments