TopBottom


உலகையே மெய் சிலிர்க்க வைத்த மும்பை துப்பாக்கி சண்டை ஓய்ந்து விட்ட விஷயமல்லப குலை பதற வைக்கும் இன்னும் பல பயங்கர சம்பவங்கள் எப்போது, எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம்

தீவிரவாதிகள் `பகீர்' ரகசிய திட்டங்களை அறிந்து வைத்திருக்கும் உளவுத்துறை அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது.


காத்திருக்கும் தீவிர வாதிகளின் தாக்குதல்கள் ஒருவேளை உலகில் இதுவரை இல்லாததாக இருக்கலாம்!

சமீப காலமாகவே இந்தியாவில் வெடிகுண்டு சம்பவங்கள் மிக சகஜமாகி விட்டன.

தீவிரவாதிகள் நினைத்த மாத்திரத்தில் வெற்றிகரமாக தங்கள் செயலை செய்து விட்டு மாயமாக மறைந்து விடுகிறார்கள். அல்லது உயிரை துறந்து விடுகிறார்கள்.

கடந்த 2000 ஆண்டி லிருந்தே இந்தியாவுக்கு தீவிரவாதிகள் சவால் விட தொடங்கி விட்டார்கள்.

இன்றைய தேதியில் இந்தியா உள்பட உலகின் 65 நாடுகளில் 177 தீவிரவாத அமைப்புகள் திரை மறைவில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வார்கள்.


இத்தகைய தீவிரவாத அÛ மப்புகளில் சுமார் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானை தÛ லமையிடமாக கொண்ட அல்கொய்தா 1989ல் உதயமானது. இதுபோல 1992ல் அல்ஜீரியாவில் உருவான ஆர்ம்டு இஸ்லாமிக் குரூப், எகிப்தில் 1970ல் உதயமான அல் ஜிகாத், இந்தியாவில் 1992ல் உருவான அல் உம்மா, ஈராக்கில் 1974ல் உதயமான அபுநிதால் மற்றும் முஜாகுதீன் ஈகாலக், லெபனானில் 1990ல் தோன்றிய அஸ்பத் அல் அன்சார், பாகிஸ்தானில் 1993ல் உருவான ஹரக்கத் அல் அன்சார், 1990ல் தோன்றிய ஹரக்கத் அல் முஜாகிதீன் மற்றும் 1989ல் உதயமான லஸ்கர் இ தொய்பா, பிலிப்பைன்சில் 1991ல் ஏற்படுத்தப்பட்ட அபுசாயாப் போன்ற இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஒருவருக் கொருவர் ரகசிய தொடர்பு கள் வைத்திருக்கிறார்கள்.

தற்போது 500 உறுப் பினர்கள் மட்டுமே இருக்க லாம் என்று நம்பப்படும் அல்கொய்தா அமைப்பிற்கு ஹரக்கத் அல் முஜாகிதீன், இஸ்லாமிக் ஜிகாத், அல்உம்மா உள்பட 30 வெவ் வேறு இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது.


கடந்த 30 ஆண்டுகளில் உலக தீவிரவாதிகளின் மிக முக்கிய 25 தாக்குதல்கள் உள்பட பல சம்பவங்களில் சுமார் 2 லட்சம் பேர் உயிரை இழந்திருக்கிறார்கள்.

இவர்களில் அல்குவைதா, லஸ்கர் இ தொய்பா, ஹரக்கத் அல் முஜாகிதீன் உள்பட சுமார் 10 தீவிரவாத இயக்கங்களின் புதிய குறி இந்தியா பக்கமாக திரும்பியிருக்கிறது.

இந்தியா உலகை மிரட்டும் அளவுக்கு மிகப்பெரிய வல்லரசு நாடாக மாறப் போகிறது என்பதை மிக நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள் அவர்கள்.

இந்தியாவின் விளை யாட்டு துறையும், விண் வெளித்துறையும் உலகம் பேசப்படும் விஷய மாக மாறி விட்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் களுக்கு உலகளாவிய பெயர் இருக்கிறது. சமீபத்தைய சந்திராயன் மட்டுமல்ல. இந்தியாவின் 14 ராக்கெட்டுகள் ஏற்கனவே உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் இந்தியா மீதான எதிர்பார்ப்பு எல்லோருக்குமே உண்டு.


இது தவிர சமீப காலங் களாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல மேலை நாடுகள் இந்தியாவுடன் நல்உறவை வளர்க்கும் எண்ணத்தில் கைகுலுக்கி வருகின்றன.

உலகின் டாப்-10 நாடு களில் இந்தியாவும் ஒன்றாகி விட்ட நிலையில் இதனை நம்பர் 1 ஆக்கும் உணர்வு இந்தியர்களுக்கு உண்டு என்பது தீவிரவாதிகளுக்கு புரியாமல் இல்லை.

அதனால் தான் இந்தியா வளர்வதற்கு முன்னதாக `சிசுக்கொலை' செய்யத் துடிக்கிறது தீவிரவாத இயக்கங்கள்.

முதல் கட்டமாக இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்பது அவர்கள் குறியாக இருக்கிறது. அதனால் தான் பெரு வணிக நகரமான மும்பை மீது தாக்குதல் நடத் தப்பட்டது.நடந்து முடிந்த சம்பவம் தீவிரவாத அமைப்புகளை பொறுத்த வரை வெறும் `சாம்பிள்' விஷயம்தான்!

மும்பைக்கு இந்த பயங்கரம் ஒன்றும் புதிதல்ல!

கடந்த 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி 13 இடங்களில் குண்டு வெடித்து 257 பேர் உயிரை `காவு' வாங்கியிருக்கின்றனர்.

2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி 2 இடங்களில் குண்டி வெடித்து 46 பேர் பலியாகினர்.

கடந்த 2006ம் ஆண்டு ஜுலை மாதம் 11-ந்தேதி ஜெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்பட 7 இடங்களில் குண்டு வெடித்து 200 பேர் மரணத்தை தழுவி யுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 25 பெரிய வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

உளவுத்துறையினர் முன்பு எப்போதையும் விட உஷாராக இருப்பதும், அவர்களது கிடுக்கிபிடி திட்டங்களும் தான் இந்த நிலைக்காவது நம்மை காத்து வருகின்றன.

தீவிரவாதிகளின் மும்பை துப்பாக்கி சண் டையின் இலக்கு பல வெளிநாட்டு பயணிகளை படகு மூலம் கடத்தி சென்று இந்திய சிறை கைதிகளை விடுவிப்பதுதான் என்பது திரை மறைவு தகவல். இது தவிர மற்ற விஷயங்கள் சாக்கு, போக்காக சொல்லப் படுபவை.

இந்த தாக்குதலையடுத்து விடுவிக்கப்பட்ட சிறை கைதிகள் உதவி மூலம் இந்தியா முழுவதும் அதிரடி தாக்குதல் நடத்தி நிலைகுலைய செய்வது அவர்களது எண்ணம்.

இந்திய பெரு நகரங் களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, திருவனந்தபுரம் உள்பட பல பகுதிகளில் எந்த நேரமும் தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தலாம். இது விலகும் ஆபத்தல்ல! தொடரும் ஆபத்துப

அனேகமாக அடுத்த கட்ட தாக்குதல் 15 கி.மீ. சுற்றளவை தகர்த்து தூள், தூளாக்கும் 23 கிலோ எடை கொண்ட `சூட்கேஸ் பாம்' களாக இருக்கலாம்.

இந்த வெடிகுண்டு சூட்கேஸ்கள் ஓடும் ரெயில் களில் வைக்கப்படலாம். எனவே, ரெயில்வே பாதுகாப்பு துறையினர் விழிப்பாக இருக்க வேண்டி யது அவசியமாகும். கூடவே பயணிகளும் தான்!

தீவிரவாதிகளின் இலக்கு பட்டியலில் தமிழகம் இருக்கிறது என்பது உளவுத்துறைக்கு தெரியாமல் இல்லை.

இங்குள்ள பல மர்ம ஆசாமிகளுக்கு பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு இருப்பது மட்டுமல்ல. அவர்களிடம் பயிற்சியும் பெற்று வந்திருப்பது உளவுத்துறைக்கு நன்றாகவே தெரியும்.
எனவே
, அடுத்த குறி சென்னையாக கூட இருக்கலாம்

இது தவிர தசாவதாரம், ஈ சினிமா படங்கள் போல `பயோ டெரரிஷம்' என்ற நவீன வகை தாக்குதல் திட்டமும் தீவிரவாதிகளிடம் இருக்கிறது. மார்பர்க் மற்றும் டுலரிமியா என்ற 2 வகை வைரஸ்கள் மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நிமிஷ நோயாகும். இதற்கு உலகில் மருந்து கண்டு
பிடிக்கப்படவில்லை.

மரபணுக்கள் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ள இத்தகைய கிருமிகள் தீவிரவாத இயக்கங்கள் கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு இறுதிக்கட்ட போரில் தீவிரவாதிகள் இத்தகைய வைரஸ் கிருமிகளை பரவ விடலாம்!

இதுகுறித்து சிங்கப்பூரில் உள்ள பயங்கரவாத ஆய்வு மையதலைவர் ரோகன் குண ரத்னா கூறும் போது, `உலகத்தீவிரவாதம் முற்றி லும் புதுமையாக வளர்ந்து வருகிறது. கெம்பியோ எனப்படும் கெமிக்கல் பயாலஜிகல் ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார்கள். தீவிரவாதிகள் `பயோவார்' களத்தில் இறங்கினால் அதன் சேதங்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்கிறார்.பொதுமக்கள் அனை வரையும் கண், காது, கை, கால்களை ஊனமாக்கி, உடல் உறுப்புகளை பறித்து விடும் பயங்கர நவீன யுத்தம் அது.

உதாரணமாக `குடோ மனஸ்' என்ற பாக்டீரியாவை ஏவி விட்டால் போதும். கோடிக்கணக்கான லிட்டர் சுரக்கக்கூடிய எண்ணெய் கிணறுகள் ஒரே நாளில் வறண்ட பாலைவனமாகி விடும்.

இத்தகைய உலகின் ஒட்டு மொத்த தீவிரவாதிகளின் நிலைக்களம் பாகிஸ்தானை சுற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணியில் பாக் தொடர்பு இருப்பது உறுதி பட தெரிந்தும் எதுவும் இயலாத நிலையிலேயே இந்தியா ஏனோ கைகட்டி நிற்கிறது. இப்போது புதிய தகவலாக மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமும் தீவிர வாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக அதிர்ச்சி விஷயங்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியா மீதான தாக்குதல்களில் தாவூத் இப்ராகிமிற்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் நம்புகிறார்கள்.

மொத்தத்தில் தீவிர வாதத்திற்கு எதிராக இந்தியர்கள் உணர்வு பூர்வ மாக ஒன்றுபட வேண்டிய தருணம் இது.

ஏராளமான தீவிரவாதி கள் இன்னமும் கூட இந்தியர்களோடு கலந்து, இந்தியாவுக்குள் தான் மறைந்திருக்கிறார்கள். அவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும்.

`இந்தியா என் தாய்நாடு' என்று எல்லோரும் எழுச்சி பெற்றால் தான் அது முடியும். இல்லையெனில் இந்தியா அமைதியையும், நிம்மதியையும் இழந்து தவிக்க நேரிடும்

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments