TopBottom

ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கில படத்துக்காக .ஆர். ரஹ்மானுக்கு லண்டன் விமர்சகர்கள் விருது வழங்கப்பட்டது.

லண்டனை சேர்ந்த டேனி போய்லே இயக்கியுள்ள ஆங்கில படம் ஸ்லம்டாக் மில்லியனர். மும்பை குடிசை பகுதியில் வாழும் 18 வயது இளைஞன், டிவியில் நடக்கும் கேம்ஷோவில் பங்கேற்கிறான்.

அதில் அவன் ஜெயித்து மில்லியனர் ஆவதுதான் படக்கதை. கேம் ஷோ நடத்துபவராக அனில் கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
லண்டன் சினிமா விமர்சகர்கள் சங்கத்தினர் இப்படத்தை பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளனர்.

அதில் சிறந்த இசைக்காக ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், இப்பட இயக்குனர் டேனி போய்லே எனது நண்பராகிவிட்டார். இப்படத்தில் பின்னணி இசை, அதிக நேரம் இடம்பெறாது. ஆனால் குறைவாக வந்தாலும் படத்தை அப்படியே தூக்கி நிறுத்தும். இதற்கு காரணம், என்னிடம் அந்த இசையை டேனி போய்லே வாங்கிய விதம்தான் என்றார்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments