TopBottom


அடகுக் கடைகளில் கூட்டம் இருப்பது நம்மூருக்கு புதிதல்ல. ஆனால் செல்வச் செழிப்புமிக¢க அமெரிக்காவில்?
ஆம்... கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அங்கும் நிலைமை அப்படித்தான்.

ஏழைகள், நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல் பணக்காரர்கள் கூட இப்போது அடகுக் கடைக்கு வரத் தொடங்கி இருக்கின்றனராம்.

அமெரிக்கா முழுவதுமே அடகுக் கடைகளுக்கு இது அட்டகாசமான நேரம். அந்நாட்டில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான அடகுக் கடைக்காரர்கள் இருக்கிறார்களாம்.
பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் திவாலாக, எல்லா வியாபாரமும் படுத்துவிட, அடகு வியாபாரம் மட்டும் கொழித்துக் கொண்டு இருக்கிறது.

நகை, வாட்ச், வைரம் என நிறைய பொருட்களை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர்.

‘‘வங்கிகள் இப்போது அதிகமாக கடன் தருவது இல்லை. ஆகவே கொஞ்ச காலத்துக்கு நிலைமையை சமாளிக்க மக்கள் அடகுக் கடைகளை நாடுகிறார்கள்‘‘ என்கிறார் ஒரு அடகுக் கடைக்காரர். இதுவரை ஏழை, நடுத்தர மக¢கள்தான் இந்த கடைக்கு வருவார்கள்.

இப்போது நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் கூட வர வேண்டிய நிலை உள்ளது. மிகப் பெரிய உயரதிகாரிகள், சொந்த தொழில் செய்பவர்களும் அடகுக் கடைகளை நம்பி இருக்கின்றனராம்.

சொந்த தொழில் செய்பவர்களில் பலர், ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்காக தங்கள் பொருட்களை அடமானம் வைத்துள்ளனர¢.

பெவர்லி லோன் என்ற அடகுக் கடை 70 ஆண்டாக செயல்பட்டு வருகிறதாம். 4 சதவீத மாத வட்டிக்கு இது கடன் தருகிறது. கடந்த சில மாதங்களில் இந்த கடை தரும் கடன்களின் அளவு போல, இந்நிறுவனத்தின் சரித்திரத்திலேயே தந்தது இல்லையாம்.

மோ மணி என்ற கடையின் வியாபாரம் 20 சதவீதம் அதிகரித்து இருக்கிறதாம்.

``நாம் நேரில் பார்க்க முடியாத பல பிரபலங்கள், தொழிலதிபர்கள் கூட இப்போது தங்கள் பொருட்களை அடகு வைத்து பணம் பெற வரிசையில் இருக்கிறார்கள்‘‘ என்கிறார் மற்றொரு தரகர். :~

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments