TopBottom

சிலம்பாட்டம் - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 22 December 2008

அக்ரஹாரங்களை வக்ரஹாரங்களாக உருவகப்படுத்தும் தமிழ் சினிமா இயக்குனர் வரிசையில் மேலும் ஒரு ஸ்டெப் முன்னேறியிருக்கிறார் இயக்குனர் சரவணன்.

படம் நெடுகிலும் மனிதனின் எட்டாவது துவாரத்தில் தனது முக துவாரத்தை வைத்தபடியே கதை சொல்லும் இவரது ஸ்டைல் "உவ்வ்வேக்..." ஆனாலும் கமர்ஷியல் கமர்கெட்டை இனிப்பாகவே கொடுத்திருப்பதால் ஒரு பேஷ்... பேஷ்...

கோவில் குருக்கள் நெடுமுடி வேணுவின் பேரன் சிம்பு. ஒரே ஒரு பக்தி பாடலை பாடி மதங்கொண்ட யானையையே மதிமயக்கி குளிர வைக்கிறார்! அப்படிப்பட்ட சிம்புவே மதங்கொண்டு சிலிர்ப்பதுதான் படம். வழக்கமான பழிவாங்கல் ஃபார்முலாதான் என்றாலும், அடங்காத காளையாக துள்ளி திரியும் சிம்புவின் கேரக்டர்களில் துள்ளுகிறது துடிப்பும் நடிப்பும்.

கும்பகோணத்தில் குருக்களாக இருக்கும் சிம்புவை உப்பு, காரம் கூட கொடுக்காமல் வளர்க்கிறார் தாத்தா. இவருக்கு கோபமே வரக்கூடாது என்பதற்காகதானாம். ஏன் கோபம் வரக்கூடாது என்பதற்கு வலுவான ஒரு பிளாஷ்பேக். கிராமத்தில் பங்காளி சண்டையில் கொல்லப்படும் தமிழின் (இவரும் சிம்புதான்) மகன்தான் இந்த குருக்கள் சிம்பு. உண்மை தெரியவர, அப்பாவை கொன்ற கிஷோரை எப்படி பழிவாங்கினார் என்பது க்ளைமாக்ஸ்.

கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கிற நேரத்தில் கரண்ட் போய்விட, சிம்புவை பஞ்சாமிர்தம் ஆக்குகிறார்கள் இளம் பெண்கள். மீண்டும் கரண்ட் வந்ததும், ஒவ்வொருவராக வந்து ‘தடவ’ சொல்லி அடையாளம் கண்டு பிடிக்கிறார்களாம். சிம்புவுக்கென்றே சிந்திக்கப்பட்ட சீன்! ஆனால் தமிழாக நடித்திருக்கும் சிம்புவிடம் வழக்கத்தை மீறிய ஹேண்ட்சம்! அதிலும் விரல்களை மடக்கி "பிரிச்சு மேஞ்சுடுவேன்" என்கிறாரே, ரசிகர்கள் உய்ய்.. உய்ய்ய்ய்...

சரக்கு ரயிலில் காதல் வளர்க்கும் சிம்பு-சினேகா காதலில் எக்குதப்பான நெருக்கம்! நீதிமன்றத்திற்கே வந்து தனது உறவை வெளிச்சம் போட்டுக் காட்டும் சினேகா, அதனால் தனது குடும்பத்தையே இழந்துவிட்டு நிற்பது பரிதாபம். மற்றொரு நாயகி சனாகானுக்கு ஆடுவதற்கு கிடைத்த வாய்ப்பை விட, நடிக்க கிடைத்தது கொஞ்சமே!

'வாய்வு புகழ்' சந்தானத்தை பாராட்டுவதை விட, குருக்கள் சிம்புவிடம் வம்பளக்கிற அந்த கெச்சலான பையனை பாராட்டலாம். (காமெடி ரூட்டை பிடிச்சா பையனுக்கு சிறப்பான எதிர்காலம் நிச்சயம்)

கிஷோரின் வில்லத்தனம் பயங்கரம். படமெடுத்தாடுகிற பாம்பை தோளில் போட்டுக் கொண்டு அவர் சிரிக்கிற சிரிப்புக்கு அந்த பாம்பே படை நடுங்கும்! வெயிட்டான பிரபுவுக்கு லைட்டான ரோல்தான். ஆனாலும் பிரமிக்க வைத்திருக்கிறார் மனிதர்.

நாலே சீன் வந்தாலும், நறுக்கென்று கிச்சு கிச்சு முட்டுகிறார் கருணாஸ். இவர் பேச நினைப்பதை இவருக்கு முன்பாகவே மற்ற கேரக்டர்கள் பேசிவிட, இவர் காட்டும் பரிதாப முகம் கருணாசுக்கேயுரிய அப்பாவித்தனம்.

யுவனின் இசையில் நலந்தானா, வேர் இஸ் த பார்ட்டி இரண்டிற்கும் திருவிழா கொண்டாடுகிறது தியேட்டர். நடன இயக்குனர்களுக்கும் ஸ்பெஷல் ஷொட்டு. மதியின் ஒளிப்பதிவு அற்புதம்.

ஒருசில விஷயங்களை 'கட்' பண்ணியிருந்தால், 'உடும்பாட்டம்' மனசை கவ்வியிருக்கும் சிலம்பாட்டம்!

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments