TopBottom

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் ஆம்புலன்ஸ்! இதென்ன கலாட்டா என்று விசாரித்தால் வாந்தி மயக்கம் இத்யாதி... இத்யாதி...! காட்டுவாசிகள் பற்றிய கதை என்பதால் ஆதிவாசிகள் கெட்டப்பில் நடிக்க தினந்தோறும் ஐநூறு பேர்களை திரட்டி வருகிறார்களாம். அத்தனை பேருக்கும் பெயின்ட்டாபிஷேகம் நடக்கிறது.

கருப்பு பெயின்ட்டை அவர்கள் மீது அடித்து ஷாட்டில் நிற்க வைத்து விடுகிறார்கள். இந்த பெயின்ட் உடலுக்கு சூடு என்பதாலும், மிக அதிக மின்சார வெளிச்சம் பாய்வதாலும், அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறார்களாம் இந்த நடிகர்கள். அதுமட்டுமல்ல, கண்களும் பொங்கி விடுகிறதாம்.

ஆரம்பத்தில் இவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடிய பட நிர்வாகத்தினர், இப்போது நிரந்தரமாக ஒரு ஆம்புலன்சை கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். இதில் இரண்டு டாக்டர்களும், இரண்டு நர்சுகளும் அமர வைக்கப்பட்டிருக்கிறார்களாம். மரக்காணம், திருநெல்வேலி, கோவூர் போன்ற இடங்களுக்கு இதே கருப்பு பெயின்ட்டோடு அழைத்துச் சென்று அலைகழிக்கிறார்களாம்.

இன்னொரு முக்கிய சங்கதி. இவர்களில் சிலரை டாப்லெஸ் ஆக நிற்க வைக்க வேண்டியிருந்ததாம். இதற்காக தமிழகத்தில் ஆட்களை தேடிய செல்வராகவனுக்கு கிடைத்தது ஏமாற்றமே! ஒரு தமிழ் பெண்ணும் இதற்கு தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் மும்பையில் இருந்து 20 பெண்களை வரவழைத்தார்களாம். இவர்களுக்கும் பெயின்ட்டாபிஷேகம் நடந்திருப்பதால், இந்த டாப்லெஸ் ரசிகர்களுக்கு தெளிவாக புலப்படுமா என்பது சந்தேகம்தான்!

1 Comment

  1. anbumathy Says,

    super

     
  2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments