TopBottom

பாலிவுட் ஆசையில் தமிழ் ஹீரோயின்கள்

எழுதியவர் : Karthikan Karunakaran 23 December 2008


ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவி, ரதி ஆகியோர் தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்கு சென்றவர்கள். இவர்கள் அனைவரும் இந்தியில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருந்தார்கள்.

இடையில் அவர்களின் இடத்தை பிடிக்க தென்னிந்திய நடிகைகள் முயற்சி செய்யவில்லை. ஆனால் இப்போது இந்தி சினிமா ஜுரம் மெல்ல பரவ ஆரம்பித்துள்ளது. தமிழில் பல படங்களில் நடித்த ஸ்ரேயா, ஜெனிலியா, சதா இந்தி சினிமாவில் பிசி ஆகிவிட்டனர்.

கஜினி படம் மூலம் ஆமிர் கானுக்கு ஜோடியாகியுள்ளார் அசின். அடுத்ததாக லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதனால் தமிழ¢ நடிகைகள் பலர் மும்பையிலுள்ள சினிமா மானேஜர்களை தொடர்பு கொண்டு, வாய்ப்பு வேட்டையை தொடங்கியுள்ளனர். இதில் பத்மபிரியாவும் ஒருவர். சமீபத்தில் போட்டோ ஷ¨ட் நடத்தியுள்ள அவர்,மும்பை சினிமா கம்பெனிகளுக்கு அதை அனுப்பி வைத்துள்ளார்.

இதே போல மீனாட்சியும் தனது போட்டோக்களை அனுப்பியுள்ளார். இதே போல லட்சுமிராய் உட்பட சில தமிழ் நடிகைகள் இந்தியில் நடிக்க முயற்சி எடுப்பதாகக் கூறப்படுகிறது.

அதிக சம்பளம், புகழ், சர்வதேச அளவில் பிரபலம் அடைவது ஆகியவைதான் இந்தி சினிமாவுக்கு நம் நடிகைகள் செல்ல காரணம். விளம்பர நிறுவனங்களும் புது நடிகைகளை ஒப்பந்தம் செய்யவே விரும்புகின்றன.

அதனால்தான் அசினுக்கு இப்போது நிறைய விளம்பர படங்கள் குவிகின்றன. தமிழ் நடிகைகளின் இந்தி சினிமா ஆசைக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் தமிழ்ப் பட இயக்குனர் ஒருவர்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments