இந்திய மொழிகளில் இருப்பது 1,250 வெப்சைட்கள் மட்டுமே :அதில் 550 பிளாக்குகள்....!


இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அதிகரித்து வந்தாலும், இந்திய மொழிகளில் அதிக வெப்சைட்கள் ஆரம்பிக்கப்படுவது இல்லை.

இப்போதைக்கு இந்திய மொழிகளில் 1,250 வெப்சைட்கள் மட்டுமே உள்ளனவாம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வெப்சைட்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தை ஆராய்ச்சி நிறுவனமும் இந்திய இன்டர்நெட் மற்றும் செல்போன் சங்கம் நடத்திய ஆய்வு இதைத் தெரிவிக்கிறது.

ஆனால் செய்தித் தாள்கள், உள்ளூர் மொழிகளில் ஏராளமாக வெளிவந்து கொண்டுள்ளன.

இந்திய மொழிகளில் உள்ள 1,250 வெப்சைட்களில் 550 வெப்சைட்கள் தனிநபர்களின் பிளாக் ஆகும். 284 வெப்சைட்கள் பொழுதுபோக்கு விஷயங்களை கொண்டுள்ளன. 14 இ காமர்ஸ், 29 தேடுதல் சேவை வெப்சைட்கள் மட்டுமே உள்ளன.

இத்தனைக்கும் உலகிலேயே அதிகம் பேர் பேசும் மொழிகளில் இந்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சீன மொழியை 105 கோடி பேரும் ஆங்கிலத்தை 51 கோடி பேரும் இந்தியை 49 கோடி பேரும் பேசுகின்றனர்.

ஆனால் இந்தியில் அந்த அளவுக்கு வெப்சைட்கள் இல்லை. உலகில் இன்டர்நெட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் டாப் 10 மொழிகளில் இந்திக்கு இடமில்லை.

``இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் ஆங்கிலம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்‘‘ என இதற்குக் காரணம் கூறுகிறார் சுலேகா இணையதள சிஇஓ சத்ய பிரபாகர்.

எனினும் 8 மொழிகளில் சேவை தரும் ரீடிப் இணையதளம், உள்ளூர் மொழி சேவைக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகிறது. ஆனால் இந்திய மொழிகளில் வெப்சைட் தருவதில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் இருக்கின்றன என்கிறது அந்த நிறுவனம்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. மிக உபயோகமான பதிவு. சிந்திக்க வைத்தது. நம் மொழிக்கு நாம் ஏதாவது இணையத்தில் செய்தாக வேண்டும். நன்றி.

    ஸ்ரீ...

    பதிலளிநீக்கு
  2. Can you give me the source of this.. I'm just more interested in other details also.. brkumaran@gmail.com

    பதிலளிநீக்கு
  3. நம்ப முடியாத செய்தி. அப்படிப்பார்த்தால் தமிழில் உள்ள ஆயிரக்கணக்கான website கள் ஈழத் தமிழருடையதா?

    இணையத்தில் தமிழுக்கு எத்தனையாவது இடம் என்று ஒன்றும் குறிப்பிடவில்லையே!

    பதிலளிநீக்கு