TopBottom

நான் இந்த கட்டுரையை இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டே எழுதுகிறேன்.
ஏன் இப்படி சொல்லறேன்னு பாக்கிறீங்களா ??? இந்தியாவுக்கு அமேரிக்கா அணு ஒப்பந்த்தம் நடந்த்துடுசசில்லே.. பிறகு காங்கிரஸ் காரங்க என் மேலயும் வழக்கு போட்டுட்டா.... அதான்.

குறிப்பிட்ட இலக்கை குறி பார்த்து ஷ¨வை எறிந்தால், அந்த ஜோடி ஷ¨வை பாதி விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். சீனாவில் கலக்கும் இந்த விசித்திர தள்ளுபடி விற்பனையில், குறியாக நிறுத்தப்பட்டு உள்ளது ஜார்ஜ் புஷ் படம்!

சமீபத்தில் தனது பதவிக் காலத்தில் கடைசி பயணமாக ஈராக்குக்கு அமெரிக்க அதிபர் புஷ் வந்தாலும் வந்தார். அவருக்கும்(!) அவரையும், அமெரிக்காவையும் பிடிக்காதவர்களுக்கும் அந்தப் பயணம் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது .

ஈராக் பிரதமருடன் சேர்ந்து புஷ் பேட்டி அளித்தபோது, டிவி நிருபர் ஒருவர் தனது இரண்டு ஷ¨க்களையும் அடுத்தடுத்து புஷ்சை நோக்கி எறிந்த காட்சியை உலகமே பார்த்தது.

அந்த தாக்குதலில் இருந்து அடிபடாமல் புஷ் தப்பினாலும் அவரது பெயரும், அந்த பிராண்ட் ஷ¨ பெயரும் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

தாக்குதல் நடத்திய நிருபருக்கு சொகுசு கார், ஆயுள் முழுதும் சம்பளம்... அவ்வளவு ஏன், கோடீஸ்வர மணமகள் வரை தர பலரும் போட்டி போடுகின்றனர்.
இப்போது சீனாவில் அந்த ஷ¨வுக்கு விசேஷ தள்ளுபடி அளிக்கப்படுகிறது

அதுவும் எப்படி... புஷ் போஸ்டர் உயரத்தில் ஏ முதல் டி வரை குறிக்கப்பட்டிருக்கும். தூரத்தில் இருந்து குறி பார்த்து ஷ¨வை எறிய வேண்டும்.
ஷ¨ படும் இடத்தைப் பொருத்து 20 முதல் 50 சதவீதம் வரை விலையில் தள்ளுபடி கிடைக்கும்

இந்த அறிவிப்பை பெய்ஜிங்கில் உள்ள ஒரு காலணி கடை அறிவித்ததுதான் தாமதம், கூட்டம் அலைமோதியது. முதல் அரை மணி நேரத்துக்குள் 64 ஜோடி ஷ¨ விற்றுத் தீர்ந்து ரூ.75,000 கலெக்ஷன் ஆனது. அடுத்த நாள் பல நூறாக விற்பனை பெருகியது.

இதுபற்றி கடை முதலாளி கூறுகையில், ஈராக்கில் நடந்த ஷ¨ எறியப்பட்ட சம்பவம் எங்களைக் கவர்ந்தது. வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு அளிக்க தள்ளுபடி போட்டியை நடத்துகிறோம்.

அதற்கு " புகழை நோக்கி எறிந்து, அதிர்ஷ்டம் வெல்லுங்கள்" என்று பெயரிட்டு உள்ளோம் என்றார்.

நம்ம ஊரில எல்லாம் தள்ளு படி கொடுக்க மாட்டங்களா??????

பிறகு வழக்கு போட்டுடுவாங்கேல்லே :) :) :~

1 Comment

  1. Anonymous Says,

    =))

     
  2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments