TopBottom

வில்லு - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 14 January 2009


இந்தி சோல்ட்ஜ‌‌‌ரின் மேலோட்டமான தழுவலாக வெளிவந்திருக்கிறது, விஜய் - பிரபுதேவா கூட்டணியின் இரண்டாவது படமான வில்லு. தந்தைக்கு ஏற்பட்ட இழுக்கை தனயன் துடைத்தெறியும் எளிமையான கதை.

ஒருவ‌‌‌ரி கதைதானே என்று உள்ளே நுழைய முடியாது. படத்தின் சஸ்பென்ஸ் பல கிளைக்கதைகளாக படத்தை கூறுபோட்டிருக்கிறது. நேர்மையான ராணுவ மேஜர் சரவணன். அவர் தங்களது தேசத்துரோக செயலுக்கு இடையூறாக இருப்பதால் நான்கு ராணுவ அதிகா‌‌‌ரிகள் அவரை சுட்டுக் கொல்கிறார்கள்.

அத்துடன் சரவணன் ஒரு தேசத் துரோகி என அனைவரையும் நம்ப வைக்கிறார்கள். இதன் காரணமாக சரவணனின் இறுதி சடங்கில் நியாயமாக கிடைக்க வேண்டிய ராணுவ ‌‌‌ரியாதை கிடைக்காமல் போவதுடன், சரவணனின் மனைவி மற்றும் மகனை ஊரார் தள்ளிவைக்கிறார்கள்.

உணர்வுப்பூர்வமாக தோன்றும் இந்தக் கதை படத்தில் பிளாஷ்பேக்காக சில நிமிடங்கள் மட்டுமே வருகிறது. அப்படியானால் மீதி படம்? இருபது வருடங்கள் கழித்து மகனின் (விஜய்) பழிவாங்கும் படலத்திலிருந்து தொடங்குகிறது.

வில்லன்கள் நால்வரும் இப்போது இன்டர்போலால் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள். இந்தியா வரும் அவர்களில் ஒருவரை காவல் துறையிடமிருந்து காப்பாற்றுகிறார் விஜய். இன்னொரு வில்லனான பிரகாஷ்ரா‌‌ஜின் மகள் நயன்தாராவை காதலித்து அவரது மாப்பிள்ளை ஆகிறார். மூன்றாவது வில்லனின் மகன் என்று நாடகமாடுகிறார்.

இப்படி வில்லன்கள் தலையில் வெண்ணெய் வைத்து கண்ணாமூச்சி காட்டும் விஜய், அவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வதுட‌‌ன், உடன் இருந்தே அவர்களின் உயிர் பறிக்கிறார். இதனிடையில் உண்மை பிரகாஷ்ராஜுக்கு தெரிய வருகிறது. அவரை விஜய் பழி வாங்கினாரா? அவரது தந்தையின் தேசத் துரோகி களங்கம் துடைக்கப்பட்டதா? நீண்ட கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

மேஜர் சரவணன், அவரது மகன் புகழ் என விஜய்க்கு இரண்டு வேடங்கள். இளமையான அப்பா என்பதால் மீசையை மட்டும் முறுக்கிவிட்டு சமாளித்துக் கொள்கிறார். மகன் விஜயிடம் முந்தைய படங்களில் பார்த்த அதே துடிப்பும், விறைப்பும் அப்படியே மாறாமல் இருக்கிறது. அடுத்தப் படத்திலும் இதை எதிர்பார்க்கலாம்... மாறாமல் அப்படியே.

காவல்துறையின் கண்காணிப்பை மீறி விஜய் வில்லனை காப்பாற்றும் ஆரம்ப காட்சியில் எழும் யார் விஜய் என்ற கேள்வியை இறுதிவரை சஸ்பென்சாக கொண்டு சென்றிருப்பது படத்தின் டெம்போவை அதிக‌‌‌ரிக்கிறது. அறுபது சதவீத ஆடைத் தள்ளுபடியுடன் நயன்தாரா இளமை நயாகரா. திருமண வீட்டில் விஜயும், நயனும் போடும் செல்ல சண்டை ரசிகர்களுக்கு வெல்ல உருண்டை.

வடிவேலுவை சிம்பன்சி என நினைத்து வெளிநாட்டு போலீஸ் இம்சிப்பது வெடிச்சி‌‌‌ரிப்பு. தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் பலம். மம்மி டாடி, ராமாகிட்ட வில்லை கேட்டேன் பாடல்கள் இளமை பொங்கும் ரகம் என்றால், நீ கோபப்பட்டுப் பார்த்தால் மனதில் தங்கும் ரகம்.

க்சன் மற்றும் பாடல் காட்சிகளில் ஜாலம் செய்கிறது கேமரா. வில்லன்களின் வித்தியாசமான கெட்டப் மாறுவேட போட்டியை நினைவுப்படுத்துகிறது. குறிப்பாக ஆனந்த்ராஜ், ஸ்ரீமனின் தோற்றம். பிரகாஷ்ரா‌‌ஜின் பலமே வசனம்தான். வில்லுவில் அவரை அதிகம் பேச அனுமதிக்காதது பெரும் இழப்பு.

விஜயின் மனைவியாக வரும் ரஞ்சிதா ‌‌‌ரிதாபப்பட வைக்கிறார். தேசத் துரோகியின் மனைவி என அவரது நெற்றியில் பிரகாஷ்ராஜ் பச்சை குத்துவது கொடுமை. கீதா, மனோஜ் கே. ஜெயன் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பெரும்பகுதி கதை வெளிநாட்டில் நடப்பதால் மனதுக்கு ஒட்டாமல் போய்விடுவது படத்தின் குறை. சர்வதேச குற்றவாளிகளை விஜய் ஜஸ்ட் லைக் தட் அடித்து நொறுக்குவது படத்தின் சுவையை குறைத்து விடுகிறது. திரைக்கதையில் வரும் திடீர்ஜம்ப்கள் கதையின் ஓர்மையை சிதைத்து விடுகின்றன. படத்தின் முக்கியமான பலவீனம், நீ...ண்ட கிளைமாக்ஸ். கத்தி‌‌‌ரி போட்டிருக்கலாம்.

ஓபனிங் பைட், பாடல், காதல், வில்லன், இறுதியில் ஜெயம் என்ற வழக்கமான விஜய் ஃபார்முலாவில் வில்லுவும் ஏற்கனவே பார்த்த படம் போன்ற உணர்வையே தருகிறது. இயக்குனர் பிரபுதேவா பற்றி சொல்வதென்றால்,

நடன அமைப்பு சூப்பர்.

வில்லு : அம்பின் வேகம் காணாது.

6 Comments

 1. மசாலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கதையில் நம்ப முடியாத சண்டைகள்தான் அதிகம் என்கிறார்கள். கமர்ஷியல் சினிமாவில் இது சகஜம்தான் என்றாலும், வில்லுவின் சண்டை காட்சிகள் முழுக்க முழுக்க காதிலே பூ என்கிறார்கள்.

  இளையதளபதி "பழைய தளபதி " ஆகாமல் இருந்தால் சரி....!@};-

   
 2. Reply To This Comment
 3. SUREஷ் Says,

  தீ, தாய்நாடு, போக்கிரி, பில்லா 2007. கலவைங்கண்ணோவ்.. நம்மாளுக வயில் நுழையாத பேரெல்லாம் சொல்லுவாக.. நம்பாதீக...

   
 4. Reply To This Comment
 5. நன்றி : Thamil Kirukkan

  நன்றி : SUREஷ்

   
 6. Reply To This Comment
 7. //ஓபனிங் பைட், பாடல், காதல், வில்லன், இறுதியில் ஜெயம் என்ற வழக்கமான விஜய் ஃபார்முலாவில் வில்லுவும் ஏற்கனவே பார்த்த படம் போன்ற உணர்வையே தருகிறது. இயக்குனர் பிரபுதேவா பற்றி சொல்வதென்றால்,
  நடன அமைப்பு சூப்பர்.//

  படம் பார்க்கலாமா இல்லியா? நீங்க என்ன சொன்னாலும் நான் சீடியில பார்க்கத்தான் போறேன்... நல்லாருக்குன்னு சொன்னா நல்ல சிடி வாங்கனும்... இல்லன்னா இருக்கவே இருக்கு காமிரா கோப்பி... அவங்களும் வாழனுமில்லே

   
 8. Reply To This Comment
 9. Krish Says,

  Please do not see this film.

  Kuppppai....it sucks. As usual, nothing special in this movie. These kind of movies degrading the quality if tamil cinema. Nayan thara oru waste..she is doing nothing other than exposing her body. vadivelu comey is mokkai...

  Eppathaan intha vijay mathiri alunga thirunthuvangaloo...tamil cinemavin sabbakkedu!!

   
 10. Reply To This Comment
 11. Anonymous Says,

  விஜய் நல்ல சினிமா நடீக்க போங்க PLS PLS PLS

   
 12. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments