TopBottom

ஹாலிவுட்டில் நுழைகிறது கோலிவுட்!

எழுதியவர் : Karthikan Karunakaran 18 January 2009

தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஹாலிவுட்டில் நுழைகிறது கோலிவுட்.

உலக சினிமாவின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகிறது ஹாலிவுட். இங்கிருந்து தயாராகும் படங்கள் உலக அளவில் வியாபாரம் மற்றும் ரசிக தொடர்புகளை கொண்டிருக்கிறது. உயரிய விருதான ஆஸ்கார் விருதும் இந்த படங்களுக்கே வழங்கப்படுகிறது.

தமிழ்சினிமா கலைஞனால் தொட முடியாத உயரம் ஹாலிவுட் என்ற காலம் மாறிவருகிறது. தமிழ் சினிமாவின் வளர்ச்சியும், அதன் பொருளாதாரமும் ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்தாலும் தொழில்நுட்பத்தில் அசுரத்தனமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

தமிழ் நாட்டில் உருவாகும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தி அளவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள். கமலஹாசன் தனது ‘அவ்வை சண்முகி‘, ‘இந்தியன்‘, படங்களுக்கு ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களை பயன்படுத்தியதன் மூலம் ஹாலிவுட் கதவை திறந்து வைத்தார்.

தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் படங்களால் தமிழ் சினிமா ஹாலிவுட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழர் ஒருவர் தயாரித்த ‘விளையாட்டு‘ என்ற படத்தில் ஹாலிவுட் நடிகர் ஆன்ட்ரூஸ் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது ஜனநாதன் இயக்கி வரும் ‘பேராண்மை‘ படத்தில் ரோலண்ட் கிக்கிங்கர் மற்றும் சிசோ என்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர். எய்ட் பேக்ஸ் உடலமைப்பு கொண்ட ரோலண்டுடன் சண்டையிடுவதற்காகவே ஹீரோ ஜெயம்ரவி தன் உடலையும் வலுவாக்கிக் கொண்டார்.

ஏவிஎம் தயாரிக்கும் ‘அயன்’ படத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சண்டை கலைஞர்கள் சண்டை காட்சிகளில் மட்டுமல்லாது படத்திலும் நடித்திருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கும் ‘கோவா’ படத்தில் ஹாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார்.

‘பென்டாஸ்டிக் ஃபோர்‘ படத்தின் நாயகி ஜெசிக்காவுடனும் பேச்சு நடந்து வருகிறது. அவர் அதிகம் சம்பளம் கேட்பதால் இன்னும் முடிவாகவில்லை. இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஹாலிவுட் நடிகை நடிப்பது உறுதி என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘கிரீடம்’ விஜய் இயக்கும் ‘மதராச பட்டினம்’ படம் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த படம். அதில் வெள்ளைகார பெண்ணாக நடிக்க ஹாலிவுட் நடிகை ஒருவரை தேடி வருகிறார்கள்.

ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘எந்திரன்‘ படத்தில் பெரும்பான்மையான தொழில்நுட்ப கலைஞர்கள் ஹாலிவுட்டைச் சேர்ந்தவர்கள்தான்.
ரஜினி மகள் சவுந்தர்யா ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்சுடன் இணைந்து தமிழ் படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போன்று தமிழ்பட தயாரிப்பாளரான ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஜாக்கிசான் நடித்து இயக்கும் ஹாலிவுட் படத்தை தயாரிக்கிறார்.

தமிழிலிருந்து சென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற கோல்டன் குளோப் விருது கோலிவுட், ஹாலிவுட்டுக்கான தூரத்தை வெகுவாக குறைத்திருக்கிறது. ஏ.ஆர் .ரஹ்மானும் தமிழையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். சென்றவருடம் தமிழில் இவருடைய இசையில் ஒரே ஒரு படம் மட்டும் தான் வெளியானது ஆனால் ஹிந்தியில் ஐந்து படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

‘சன் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் பிரபலமான ஆங்கிலப் படங்களின் மூலம் சாதாரண ரசிகர்களும் ஹாலிவுட்டுக்கு நெருக்கமாகியிருக்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழர்களின் பங்கு உலகளாவிய வகையில் பரந்து விரிந்து கிடப்பதை போன்று சினிமாவிலும் தமிழ் கலைஞர்களின் பங்கு உலகமெங்கும் பரவும் வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது.

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களும், தாகத்துடன் வரும் இளைஞர்களாலும் ஹாலிவுட் என்ற உயரத்தை நோக்கிச் செல்வது ஆரோக்கியமான ஆச்சரியமான நிலை’ என்கிறார் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் ஒருவர்.

3 Comments

 1. நல்லா சொல்லியிருக்கீங்க நண்பா! வாழ்த்துக்கள்!! அதிகாலை 'நவின்' அமெரிக்கா

   
 2. Reply To This Comment
 3. Nalla Pathivu...The "SUN TV-DUBBED PICTURES"...good punch...

   
 4. Reply To This Comment
 5. கோடம்பாக்கத்தில் ஹாலிவுட் நுழைந்ததனால் தானே அது கோலிவுட் ஆனது ?

   
 6. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments