TopBottom

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் முதல் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவியேற்பு தொடர்பான சில சுவாரசியமான விவரங்கள்:

வாஷிங்டன் நகரில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் 7-வது அதிபர் ஒபாமா.



அதிபர் மற்றும் துணை அதிபரின் பதவிக்காலம், ஜனவரி 20-ம் தேதி பகல் 12.06 மணியில் இருந்து (இந்திய நேரப்படி இரவு 10.36) தொடங்குகிறது.

தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், முன்னிலையில் ஒபாமா அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்காவின் 58 அரசு பாதுகாப்பு அமைப்புகள், உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களின் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

பதவியேற்பின் போது அதிகாரபூர்வமான 10 விதமான நிகழ்ச்சிகளில் ஒபாமா கலந்து கொண்டு பேசினார்.

பதவியேற்புக்குப்பின் அளிக்கப்பட்ட சிற்றுண்டி, சுதந்திரம் பிறந்ததை குறிக்கும் வகையில் அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக இருந்த ஜான் மார்ஷல், 1807- முதல் 1833-ம் ஆண்டுவரை அதிகபட்சமாக 9 பேருக்கு அதிபராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

பெண் தலைமை நீதிபதியாக இருந்த சாரா ஹுகஸிடம் அதிபராகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டே ஒரே அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன்.

விமானத்தில் பயணம் செய்தபோது அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றவர் ஜான்சன். 1963-ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி கொலை செய்யப்பட்டபோது ஜான்சன் அவசரமாகப் பதவியேற்க நேரிட்டது.

ப்ராங்கிளின் ரூஸ்வெல்ட் 1937-ம் ஆண்டு முதல் முதலாக ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.

வாஷிங்டன் நகரில் முதல் முறையாக அதிபராக பதவியேற்றவர் தாமஸ் ஜெபர்சன், இவர் 1801-ல் அதிபராக பொறுப்பேற்றார்.

ஜார்ஜ் வாஷிங்டன் 2-வது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற போது மிகவும் குறைந்த நேரத்தில் தனது பதவியேற்பு உரையை முடித்துக் கொண்டார். 135 வார்த்தைகள் மட்டுமே இடம் பெற்றிருந்த அவரது உரை 2 நிமிஷங்களுக்குள் முடிந்துவிட்டது.

ஜான் ஆடம்ஸ், 1797-ல் தலைமை நீதிபதி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

1809-ம் ஆண்டு ஜேம்ஸ் மேடிஸன் அதிபராகப் பதவியேற்ற போது முதல்முறையாக பதவியேற்பு அணிவகுப்பு நடத்தப்பட்டது.

1 Comment

  1. அருமையான தகவல்கள்...ஒபாமா பதவியேற்கும்போது சில சுவையான சம்பவங்கள் நேர்ந்தன.. அவற்றையும் விவரித்திருக்கலாம்...
    வாழ்த்துகள்!!

    நான் தான் முதல் கமென்ட் கொடுத்தேன் (என்ன ஒரு அல்ப சந்தோஷம்)

     
  2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments