TopBottom

சில மொபைல் போன்களை பற்றிய விமர்சனம்.....!

எழுதியவர் : Karthikan Karunakaran 23 January 2009

முன்னாடி எல்லாம் சினிமா படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதினாங்க. என்ன செய்யிறது வருகின்ற படங்களின் எண்ணிக்கையும் குறைந்த்துவிட்டன. அதான் புதுசா ஏதாவது செஞ்சு பாக்கலாம் எண்டு சில மொபைல் போன்களை பற்றிய சிறிய குறிப்புக்களை எழுதுகிறேன்.

நோக்கியா என் 78

நோக்கியா என் 78 மொபைல் போன் குறித்த புதிய தகவல் ஒன்று வெளிவந்துள் ளது. இந்த போன் முதலில் வடிவமைக்கப் பட்ட போது இதில் ஒரு எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர் இருந்தது.இந்த வசதியின் மூலம் இதில் பதிந்து இயக்கப்படும் பாடல்களை ஒரு எப்.எம். ரேடியோவை குறிப்பிட்ட அலை வரிசையில் ட்யூன் செய்து கேட்கலாம். இந்தியாவில் அண்மையில் இந்த போன் விற்பனைக்கு வந்த போது அதில் எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர் வசதி இல்லை. ஏனென்றால் இந்தியா உட்பட சில நாடுகளில்அரசின் அனுமதி இல்லாமல் எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர்களை இயக்கக் கூடாது.

எனவே அந்த நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு செல்கையில் எப்.எம். ட்ரான்ஸ்மிஷன் வசதி இல்லாமல் தயாரிக் கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதேபோல் வேறு சில மொபைல் போன்களிலும் எப்.எம் ட்ரான்ஸ்மீட்டர் வசதிஉள்ளது. சோனி எரிக்சன் டபிள்யூ 980 மொபைலில் இந்த வசதி உள்ளது. இந்தியாவில் இந்த வசதியுடன் போன் விற்பனையாகிறதா? அல்லது அதுஇல்லாமல் விற்பனையா கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.

கன்னட மொழியில் மொபைல் சேவை

கன்னட மொழியில் அமைந்துள்ள மொபைல் போன்களை ஏர்டெல் நிறுவனம்கர்நாடக மாநிலத்தின் கிராமப் புறங்களில் அறிமுகப்படுத் துகிறது. இதற்கெனஇந்தியன் பெர்டிலைசர் கூட்டுறவு அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுஇத்திட்டத்தை செயல்படுத்துகிறது. 2009 ஆம் ஆண்டுக்குள் கர்நாடகாமாநிலத்தின் 90 சதவிகித மக்களிடம் மொபைல் போன் பயன்பாட்டினைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஏர்டெல் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இன்னும் கிராமப்புற மக்கள் மொபைல் போனை அவ்வளவாக அங்குபயன்படுத்தத் தொடங்கவில்லை. கர்நாடகாவில் மொபைல் பயன்படுத்துவோர்எண்ணிக்கை ஒரு கோடியே 70 லட்சமாக இருந் தாலும் இதில் கிராமப் புறமக்களின் எண்ணிக்கை (13%) மிகக் குறைவு தான். எனவே தான் கிராமப் புறமக்களுக்கு புரியும் வகையில் கன்னடத்தில் டிஸ்பிளேயுடன் கூடிய மொபைல்போன்களை ஏர்டெல் அறிமுகப்படுத்துகிறது.

சாம்சங் மோட்டாரோலாவை முந்தியது

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத மொபைல் போன் விற்பனையில் சாம்சங்நிறுவனம் மோட்டாரோலாவினைப் பின் னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப்பிடித்தது. வழக்கம் போல் முதல் இடத்தை நோக்கியாவும் இரண் டாவது இடத்தைசோனி எரிக்சன் நிறுவனமும் கொண்டுள்ளன. இதுவரை மோட்டாரோலாமூன்றாவது இடத்தில் இருந்தது. ஆனால் ஜனவரி முதல் மார்ச் வரை யிலானகாலத்திய விற்பனையில் சாம்சங் இந்த இடத்திற்கு வந்துள்ளது

ஜனவரியில் 5.7% கூடுதலாகவும் மார்ச்சில் 7% கூடுதலாகவும் ஸ்டெடியாகஉயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளது. மோட்டாரோலா இச்சந்தையில் தான்கொண்டிருந்த 6.7% பங்கினை விட்டு 5.9% க்கு வந்துள்ளது. சோனி தொடர்ந்து 8.1% இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனம் வெளியிட்ட குரு 100 மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று சாம்சங் நிறுவனத்தைஉயர்த்தியுள்ளது. பன்னாட்டளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சாம்சங்இந்தியா வில் தன் பங்கினை உயர்த்தும் வகையில் பல புதிய மாடல்களைஅனைத்து நிலைகளிலும் இறக்கு கிறது.

மோட்டோ ரோக்கர் இ–8

மோட்டாரோலா நிறுவனம் அண்மையில் வழக்கத்திற்கு மாறான புதுவசதிகளுடன் மொபைல் போன் ஒன்றினை மோட்டோரேக்கர் இ8 என்ற பெயரில்வெளியிட்டுள்ளது. அண்மையில் சவுண்ட் பஸ் என்னும் நிறுவனத்தைமோட்டாரோலா நிறுவனம் கையகப்படுத்தியது. அதன் விளைவாக இந்தபோனில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு பல புதிய வசதிகள்தரப்பட்டுள்ளன.

சவுண்ட் பஸ் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து மியூசிக் மற்றும் வீடியோசார்ந்த பல பைல்களை மொபைல் போனில் டவுண்லோட் செய்து இயக்கலாம். இந்த போனில் மோட் ஷிப்ட் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம்ஜஸ்ட் ஒரு பட்டனை அழுத்தி போனை ஒரு மியூசிக் பிளேயராக மாற்றலாம்.

பாஸ்ட் ஸ்குரோல் தொழில் நுட்பம் பாடல்களைத் தேர்ந்தெடுக்க விரைவாகச்செயல்படும் வழி ஒன்றைத் தந்துள்ளது. இதன் கீ பேட் தோற்றத்தில் மட்டுமேதெரியும். போனை அணைத்துவிட்டால் இந்த கீ பேடை பார்க்க முடியாது. அதேபோல போனை மியூசிக் பிளேயராகப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் போன்டயல் கீ பேட் மறைந்து மியூசிக் பிளேயருக்கான கீ பேட் காட்டப்படுகிறது. அதில்பாடல் இயக்க, முன்னோக்கி தள்ள, பின்னோக்கிச் செல்ல, தற்காலிகமாகநிறுத்தவென கீகள் தெரிகின்றன. MIDI, MP3, AAC, AAC+, Enhanced AAC+, WMA, WAV, AMRNB, Real Audio (RA) v10 என்ற பலவகையான பார்மட்களில் உள்ள பாடல்களைஇது இயக்குகிறது.

மியூசிக் பிளேயராக இயங்குகையில் முப்பரிமாணத்தில் இரண்டு சேனல்ஆடியோ கிடைக்கிறது. ஸ்பீக்கரும் எப்.எம். ரேடியோவும் இதில்இணைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்டல் டாக் தொழில் நுட்பம் மூலம் பாடல்கள்தெளிவாகக் கிடைக்கின்றன. 100 கிராம் எடையில் 10.6 மிமீ தடிமனில் இந்தபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 அங்குலத் திரையில் அகலவாக்கிலும் காட்சிகிடைக்கிறது.

இதன் மெமரி 2 ஜிபி. இதனை 4 ஜிபி வரை கூடுதலாக்கலாம். இதனுடன் ஒருபோர்ட்டபிள் ஸ்பீக்கரும் தரப்படுகிறது. இதனை எந்த மியூசிக் பிளேயர், மொபைல் போன் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைத்து இயக்கலாம். இதன் விலை ரூ. 15,455 மற்றும் ரூ.13,999. அண்மையில் இந்த போன்கள்மும்பையில் அபிஷேக் பச்சனால் வெளி யிடப்பட்டன.

எல்.ஜி.– கே.எப் 600

எழுதுவதைப் புரிந்து டெக்ஸ்ட்டாகக் கொள்ளும் வித்தை மற்றும் சிறப்பானகேமரா என அசத்தும் வசதிகளுடன் எல்.ஜி. நிறுவனத்தின் கே.எப்.– 600 மொபைல்வெளிவந்துள்ளது. முதலில் நம்மைக் கவர்வது இதன் தோற்றமே. அருமையானமிக மென்மையான ஸ்லைடராக உள்ளது. எடை 107 கிராம் என்றாலும் அதுபெரிய குறையாகத் தெரியவில்லை.

240 து 320 ரெசல் யூசனுடன் கூடிய திரை பளிச் என அழகாகத் தெரிகிறது. இதன்இன்னொரு சிறப்பம்சம் கீழாக உள்ள 1.4 அங்குல திரையும் அதே ரெசல்யூசனில்இருப்பதுதான். அடுத்ததாக வழக்கமான நேவிகேஷன் பேட் இல்லாமல் மெனுமற்றும் பிற வசதிகளைப்பெற இன்டராக்டிவ் பேட் ஆகச் செயல்படும் டச்சென்சிடிவ் திரை தரப்பட்டுள்ளது.

முதன் முதலில் சாம்சங் தன் யு–900 மொபைலில் இந்த வகை திரையைத் தந்தது. ஆனால் அதைக் காட்டிலும் சிறப்பாக இந்த திரை உள்ளது. போனின் பக்கவாட்டில்யு.எஸ்.பி. மற்றும் பேட்டரி சார்ஜிங் போர்ட் உள்ளது. இதற்கும் கீழாக கேமராதரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நேவிகேஷன் பேடினைச்செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியும். சிறிய ஸ்டிரிங் கொண்டு இணைக்கக்கூடிய ஸ்டைலஸ் ஒன்று தரப்படுகிறது. ஆனால் அளவில் இது ஒரு லிப்ஸ்டிக்போல தோற்றமளிக்கிறது. காலண்டர், கன்வெர்டர், அலாரம்,மெமோ மற்றும்ஸ்டாப் வாட்ச் போன்ற வழக்கமான வசதிகள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. சிறப்பான அம்சம் என்றால் முப்பரிமாணத்தில் தரப்படும் உலகக் கடிகாரத்தினைச்சொல்லலாம்.

தொலைந்து போனால் தேடுவதற்கு வசதியாக மொபைல் ட்ரேக்கர் தரப்பட்டுள்ளது. எழுதினால் புரிந்து கொண்டு டெக்ஸ்ட்டாக மாற்றும் வசதியும் பலரால்விரும்பப்படும். விரல்களில் கூட இந்த திரையில் எழுதலாம். ஆடியோபிளேயரிலும் அதிக வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள எப்.எம். ரேடியோ நாம் நகர்ந்து கொண்டிருக்கும்போதும் தெளிவாக சிக்னல்களை பிக் அப்செய்கிறது. இதில் வீடியோ பிளேயர் இருந்தாலும் அதனை மீடியா போல்டரில்வைக்காமல் மை ஸ்டப் என்ற போல்டரில் வைத்துள்ளனர்.

ஏ2 டி பி வசதி உள்ளதால் வயர்லெஸ் ஹெட்செட் இணைத்து பாடல்களைக்கேட்கலாம். இதன் கனெக்டிவிடியும் சிறப்பாகச் செயல் படுகிறது.ஆனால் ஒருசின்ன பிரச்னை. பெர்சனல் கம்ப்யூட்டருடன் இதனை இணைக்கையில் போன்ஆப் ஆகிவிடுகிறது. அந்நேரத்தில் யாரும் நம்மை அழைத்தால் நமக்கு சிக்னல்கிடைக்காது. பல ஆப்ஷன்களுடன் கூடிய 3 மெகா பிக்ஸெல் கேமரா நல்லபிளாஷுடன் செயல்படுகிறது. செல்ப் டைமர், கை நடுக்கம் நீக்குதல், ஆறுபடங்களை அடுத்தடுத்து எடுக்கும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் குறியிட்ட விலை ரூ. 14,990

ஸ்பைஸ் எஸ்–525

ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையில் எஸ் 525 என்ற மொபைல் போனை விற்ப னைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் உள்ளஎப்.எம். ரேடியோவின் ஒலி பரப்பினை ஒரு பட்டனை அழுத்தி ரெகார்ட் செய்திடும்வசதி தரப்பட்டுள்ளது. 77 கிராம் எடையில் 17.6 மிமீ தடிமனில் கைக்கு அடக்கமாகவடிவமைக்கப்பட்டுள்ளது. ஷெட்யூல் இயக்கம், சிங்– டோன், 500 முகவரிகள்கொண்ட அட்ரஸ் புக், ஸ்பீக்கர் போன் எனப் பல வசதிகளும் உள்ளன. போன்தொலைந்து போனால் கண்டுபிடிக்க வழி தரும் மொபைல் ட்ரேக்கர் வசதியும்இதில் தரப்பட்டுள்ளது.

திருடப்பட்ட போனில் வேறு ஒரு சிம் கார்டு பயன்படுத்தப் பட்டால் அதன்எண்ணை போனின் உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் வகையில்போனில் செட் செய்திடலாம். அத்துடன் குறிப்பிட்ட சில எண்களிலிருந்து வரும்கால்களையும் வரவிடாமல் தடுக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்துமணி நேரம் பேச முடியும்; அல்லது 200 மணி நேரம் சார்ஜ் நீடிக்கும். ஓர் ஆண்டுவாரண்டியுடன் இந்த போனின் விலை ரூ. 2,099 என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்.டி.சியின் பி 3350

இந்தியாவில் உள்ள இசை ரசிகர்களுக்கு இந்த போன் என்ற அறிவிப்புடன்எச்.டி.சி. நிறுவனம் அண்மையில் எச்.டி.சி. பி 3350 என்ற மொபைல் போனைஅறிமுகப் படுத் தியுள்ளது. கிராபைட் சில்வர் கூட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளஇந்த போனில் 360 கோணத்தில் சுழலும் வண்ணம் ஸ்குரோல் வீல்தரப்பட்டுள்ளது.

சில சிறப்பு செயல் பாடுகளுக்கென தனியாக 8 கீகள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மொபைல் இயக்கத் தொகுப்பில் இது இயங்குகிறது. 2 மெகாபிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 2.8 அங்குல வண்ணத் திரை, எப்.எம். ரேடியோ, அதிவேக லேன் கட்டமைப்பு, ஆடியோ மேனேஜர், பத்து பேண்ட் ஈக்கு வலைசர்எனப் பல்வேறு வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் மொபைல் தொகுப்பு இணைத்துத் தரப்படுவதால் வேர்ட், எக்ஸெல் மற்றும் பிரசன்டேஷன் பைல்களை எளிதாக இதில் இயக்கலாம். பி.டி.எப். பைல்களைப் பார்க்க அடோப் ரீடர் தொகுப்பும் தரப்பட்டு உள்ளது. இன்டர்நெட் ஷேரிங், ஆடியோ மேனேஜர், ஆடியோ பூஸ்டர் ஆகிய வசதிகளும்தரப்பட்டுள்ளன. நான்கு பேண்ட் இயக்கம், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் புளுடூத்மூலம் கனெக்டிவிடி கிடைக்கிறது.

1 Comment

 1. Siva Says,

  Good comparison of mobile phones!!

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments