TopBottom

நடிகர் விவேக்கிற்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கோடம்பாக்கத்தில் கர்ர்ர்புர்ர்ர்ரென்று பரவலான உறுமல் சத்தம். இரட்டை அர்த்த வசனங்களை சகட்டுமேனிக்கு பேசிவரும் விவேக்கிற்கு இந்த விருதை கொடுத்திருக்கிறார்களே, இவருக்கு கொடுத்ததற்கு பதிலாக வடிவேலுவுக்கே கொடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவிப்பவர்களும் உண்டு.

மணி மணியாக காமெடி செய்யும் அந்த நகைச்சுவை நடிகர், 'இந்த வருசம் ஆயிரம் பேருக்கு விருது கொடுத்தாங்கல்ல, அதிலே ஒன்னு சும்மாதான் இருக்கு. எடுத்திட்டு போ என்று இதுகிட்டேயும் சொல்லிட்டாங்க போலிருக்கு' என்று காமெண்ட் அடித்தாராம்.


இப்படி சிலிர்க்க வைக்கும் கோடம்பாக்க குமுறல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்... பிளாக்குகளிலும் கிழிகிழியென்று கிழிக்கிறார்கள் (இந்த வார்த்தையை நினைவுபடுத்திய டான்ஸ் மாஸ்டர் கலாவுக்கு நன்றி) வாசகர்களை ஏராளமாக கொண்டிருக்கும் இட்லிவடை பிளாக்ஸ்பாட்.காம் இப்படி வறுத்தெடுத்திருக்கிறது.


நமது மீடியாவிற்கு சினிமா, அரசியல் தவிர வேறு ஒன்றும் தெரியாது( நானும் இதில் அடக்கம்). நடிகர் விவேக், எழுத்தாளர் ஜெயகாந்தன்(சில நேரங்களில் சில மனிதர்கள், மற்றும் அவரது அரசியல் விமர்சனம் ஆகிவற்றால் பிரபலம் ஆனவர்) ஆகியோருக்கு பத்ம விருதுகள் கிடைத்த பத்தாவது நிமிஷம் இவர்கள் வீட்டு கதவு தட்டப்பட்டு, தூக்கத்திலிரிந்து எழுப்பி “உங்களுக்கு விருது கிடைத்திருக்கு, அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்ற பேட்டியை ஒளிபரப்பினார்கள். கே.டிவியில் சிரிப்பு வெடிகளில் வாத்துன்னு நினைத்து பின்பக்கம் சுட்டதாக வழக்கு, விவேக்: ஏண்டா வாத்துக்கும் -த்துக்கும் வித்தியாசம் தெரியாதா?


குரங்குக் கவிதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது...


வரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா? அதையும் ஒரு துறை-னு மதிச்சு, பணத்தைக் கொட்டி, குடும்பத்தைப் பார்க்காம, தள்ளாத வயசுலையும் கல்வெட்டு, குகைக் கோயில், கட்டுமானம், சிற்பம்-னு அலையற பிழைக்கத் தெரியாத கூட்டம் பல வருஷமா, மைனாரிட்டியா அலையுது (without reservation, of course). அவங்களையும் ஒரு ஆளா மதிச்சு ஜனாதிபதி விருது கொடுக்கறது....சுஜாதா சொல்லுவாரே...... குரங்கு தவறி டைப்ரேட்டர் மேல குதிச்சதுல, அது உடம்பு பட்ட கீ-யெல்லாம் பேப்பர்-ல தட்டச்சாகி, அது ஒரு கவிதையா இருந்து, அந்த கவிதையைப் போட்டிக்கு அனுப்பி, அந்தக் கவிதைக்கு முதல் பரிசும் கிடைக்கிற மாதிரி....எத்தனையோ வருடங்கள் முன்னால 'தொல்லியல் இமயம்' கே.ஆர்.சீனிவாஸனுக்கு பத்ம பூஷண் கொடுத்தாங்க, அதுக்கு அப்புறம், தவறாம இரண்டாவது ரவுண்டுல தோற்கும் சானியா (பேசாம சூனியா-னு பேரை வெச்சா சரியா இருக்கும்), ஸ்ருதியே சேராம பாடறவங்க, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டு திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்...இப்படி பல ரக மக்களைத் தாண்டி, இந்த வருஷம் குரங்குக் கவிதைக்கு பரிசு கிடடச்சாச்சு!


குமுதம் ஓ போடு பகுதியில் எழுத்தாளர் ஞானியும் விவேக்கின் பத்மஸ்ரீ பற்றி எழுதியிருக்கிறார். 'பத்மஸ்ரீ விருது இந்த வருடம் நடிகர் விவேக்கிற்கு தரப்பட்டது. இப்போது சுமார் 75 வயதை எட்டிவிட்ட நாகேஷ¨க்கு பத்மஸ்ரீ விருது 40 வருடங்களுக்கு முன்பே தரப்பட்டிருக்க வேண்டும். இன்று வரை இல்லை. இனிமேல் நாகேஷுக்கெல்லாம் பத்மவிபூஷணே கொடுத்தால் கூட அது அவமரியாதைதான். அவர் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்துவதுதான் நியாயம்'.


இந்த விருது அறிவிக்கப்பட்டவுடன் விவேக் சொன்னது இதுதான். 'இனிமே இன்னும் பொறுப்போட செயல்படனும்!' அவரே சொன்ன மாதிரி இனிமேலாவது இரட்டை அர்த்த வசனங்களை குறைத்துக் கொண்டால் கை நீட்டி வாங்கிய விருதுக்கு மரியாதை!

1 Comment

 1. http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/21.gif

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments