TopBottom

கணனியினுள் வைரஸ் எப்படி வருகிறது....?

எழுதியவர் : Karthikan Karunakaran 25 January 2009

போர்னோ சமாச்சாரம், இலவச சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் பாதுகாப்பு. வைரஸ் `எழுத்தாளர்கள்' இந்த மூன்றையும் சொல்லி ஆசை காட்டித்தான் கம்ப்யூட்டர் பயனாளிகளை மோசம் செய்கிறார்கள்.


"என் படுக்கையறைக் காட்சிகளை இலவசமாகப் பாருங்கள்!" என்று ஒரு ஈ-மெயில் வரும். அல்லது "இந்த சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள்! இன்டர்நெட்டில் நீங்கள் விட்டுச் சென்ற தடயங்களை நீக்குங்கள்!" அல்லது "ஹலோ, இது மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கின் லேட்டஸ்ட் அப்டேட். இதை இன்ஸ்டால் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும்" என்று உதவி செய்யப் பார்க்கும். . .

இப்படிப்பட்ட ஈ-மெயில்களை நம்பி அதில் இருக்கும் அட்டாச்மென்ட்களை க்ளிக் செய்து தொலைப்பவர்கள் பலர். இவர்கள் புண்ணியத்தில்தான் பல வைரஸ்களுக்கு உலகப் புகழ் கிடைக்கிறது. ஐலவ்யூ, மெலிஸா, அன்னா கோர்னிகோவா, சர்கேம் என்று ஆன்லைன், ஆஃப்லைன் உலகங்களை உலுக்கியெடுத்த வைரஸ்கள் எல்லாம் நம்மை ஏமாற்றித்தான் பரவின.

இந்த மாதிரி டிஜிட்டல் கிருமிகள் இப்போது ஈ-மெயில் மூலமாக மட்டுமில்லை, இன்ஸ்டன்ட் மெசேஜிங், இன்டர்நெட் ரிலே சாட் (ஐ.ஆர்.சி.) போன்ற மீடியங்கள் மூலமும் பரவத் தொடங்கியிருக்கின்றன. அதாவது ஒரு கம்ப்யூட்டர் கிரிமினல் இன்டர்நெட் சேவை நிறுவன அதிகாரி என்ற போர்வையில் ஒரு அப்பாவி கம்ப்யூட்டர் பயனாளிக்கு ஃபோன் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பயனாளி அதை நம்பி அவனிடம் தன் ஃபோன் நம்பர், க்ரெடிட் கார்டு எண் போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு அந்த கிரிமினல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த அட்டாச்மென்ட்கள் பயனுள்ள ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் அல்லது எம்.பி.3 ஃபைல் அல்லது கிளுகிளுப்பான படம் என்று நம்ப வைக்கப் பார்க்கின்றன. ஆனால் இவை உண்மையில் ஆபத்தான வைரஸ்கள்.

இந்த வைரஸ்கள், ட்ரோஜன்கள் ஆகியவற்றை வைத்து ஃபைல்களை அழிப்பதோடும் மேலும் பல கிரிமினல் வேலைகளுக்கு அஸ்திவாரம் போடுகிறார்கள். இந்த வைரஸ்கள் மூலம் டிஸ்ட்ரிப்யூட்டட் டினையல் ஆஃப் சர்வீஸ் என்ற வகை தாக்குதல் தொடுப்பதும் அதிகரித்திருக்கிறது என்கிறது செர்ட். வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர்கள் மூலம் இன்னொரு கம்ப்யூட்டரை தாக்குவது டி.டி.ஏ.எஸ்.

இன்டர்நெட் அரட்டை நெட்வொர்க்கான ஐ.ஆர்.சி. அரட்டை அறைகள், இன்ஸ்டன்ட் மெசஞ்சர் ஆகியவற்றின் பயனாளிகளுக்கு வைரஸ் மெசேஜ்களை அனுப்பித் தள்ளும் புரோகிராம்களை கிரிமினல்கள் பயன்படுத்துகிறார்கள் என்று செர்ட் சொன்னது.

ஐ.ஆர்.சி. அரட்டை அறைகளில் சில பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குப்பை மெசேஜ்களாக அனுப்பித் தள்ளுவது, பிறகு அப்படிப்பட்ட மெசேஜ்கள் வராமல் தடுக்கும் என்று வைரஸ் சாஃப்ட்வேர் ஒன்றை அனுப்புவதும் லேட்டஸ்ட் டெக்னிக் என்கிறார் மெக்அஃபி நிறுவன ஆராய்ச்சியாளர் ஜிம்மி குவோ.

எனவே, யாஹூ மெசஞ்சரிலும் சரி, ஐ.ஆர்.சி.யிலும் சரி, சாட் செய்யும்போது யாரிடம் என்ன ஃபைலைத் தருகிறீர்கள் என்பதில் உஷாராக இருங்கள். உங்கள் ஆர்வக் குறுகுறுப்பு சமயத்தில் ஆபத்தில் முடியலாம்.

நன்றி: msn

1 Comment

 1. மிகவும் உபயோகமான த்கவல்....THANKS A LOT

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments