TopBottom


தமிழ்நாட்டில கட்சி தொடங்க்கிறங்க்களோ இல்லையோ புதுசு புதுசா டிவி தொட்ங்கிடுவானுங்க. ஏற்கனேவே இருக்கும் சானல்களில் எதை பார்ப்பது என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் தமிழக மக்கள்....இந்த லட்சணத்துல புதுசா இன்னொரு டிவி...

‘எம்புள்ளைக்கு எதிரா சதி நடக்குது’ என்று பேட்டிகளில் ஆவேசப்பட்டு வந்த விஜய டி.ராஜேந்தர், தனக்கு சப்போர்ட்டா ஒரு சேனலும் இல்லையே என்றும் பொங்கினார். “சிம்புவை பற்றி வரும் செய்திகளுக்கு உடனுக்குடன் விளக்கம் கொடுக்க நானே ஒரு டி.வி சேனல் துவங்குவேன்” என்றும் சவால் விட்டார். மெகா சபதம் போட்டுவிட்டு ஜகா வாங்க முடியாதல்லவா? பொன் வைக்கிற இடத்தில் போர்ட்டபுள் டிவியை வைத்த மாதிரி, இப்போது வெப் டி.வி துவங்கப் போகிறாராம்.

தனது ஜகா சேனலை எட்டுக்கு எட்டளவு கொண்ட தனது அறையிலேயே துவங்கியிருக்கிறார் டிஆர். நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் படு ஆர்வமாக இருக்கும் இவர், “ஏய்... டண்டணக்கா ஏய்... டண்டணக்கா” என்று மேசையில் தட்டி, அதையே நிகழ்ச்சிகளுக்கு பின்னணி இசையாகவும் போட்டு வருகிறாராம்.

இந்த டி.விக்கு குறள் டி.வி என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண்களை கவரும் விதத்தில் கோலப் போட்டி, சப்பாத்தி சுடும் போட்டி, மாவு பிசையும் போட்டி என்று மகளிர் ஏரியாவிலும் மங்காத்தா ஆடும் விஜய டி.ஆர், பெண்கள் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராக தனது மனைவி உஷாவையே நியமித்திருக்கிறாராம்.

இனி குடும்ப கொண்டாட்டங்களுக்கு குறைவே இருக்காது!

6 Comments

  1. :)) வலிக்குது, அழுதுருவே

     
  2. Reply To This Comment
  3. என்னா கொடுமெ டெண்டணக்கா!

     
  4. Reply To This Comment
  5. Simbu Says,

    //“ஏய்... டண்டணக்கா ஏய்... டண்டணக்கா” என்று மேசையில் தட்டி, அதையே நிகழ்ச்சிகளுக்கு பின்னணி இசையாகவும் போட்டு வருகிறாராம்//

    என்னக் கொடுமை சார் இது.....:-o

     
  6. Reply To This Comment
  7. @வெங்கடேஷ்
    @A N A N T H E N
    @Simbu

    *தங்கள் பினூட்டத்திற்கு நன்றி*:)

     
  8. Reply To This Comment
  9. என்னக் கொடுமை சார் இது.....:-o

     
  10. Reply To This Comment
  11. நம்பல சேத்துக்குவாரான்னு ,தெர்லில்யே ???

    சும்மா, எங்க ஆளுங்கோ, அல்லாம் பேஷ்தடிச்சி,

    கீறாங்கோ :))

     
  12. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments