கூகிள் தத்தெடுத்த ஃபயர்ஃபாக்ஸ்....!

சில இணைய தளங்களைப் பார்வையிடும் போது நமக்குத் தெரியாமலேயே நமது கணினியில் வைரஸ் போன்ற சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவி விடுகின்றன.

சில தளங்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றன. இப்படிப்பட்ட இணைய தளங்களில் இருந்து நம்மையும் நமது கணினியையும் காப்பாற்றிக் கொள்ள "Web of Trust" உதவுகிறது. இது ஃபயர்பாக்ஸின் நீட்சியாகும்(add-on). இந்த நீட்சியை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

"Web of Trust" எல்லா இணைய தளங்களையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது. இந்த நீட்சி, முகவரிப் பெட்டியின் அருகில் ஒரு பாதுகாப்பு வளையத்தைச் சேர்க்கும். அது பச்சை நிறத்தில் இருந்தால், அது பாதுகாப்பான தளம். சிவப்பு நிறத்தில் இருந்தால், பாதுகாப்பற்ற தளமாகும். மஞ்சள் நிறத்தில் இருந்தால், கொஞ்சம் கவனம் தேவை.



இதன் சிறப்பு என்னவென்றால், கூகிள், யாகூ போன்ற தேடு பொறிகளில் தேடிடும் போதே, முடிவுகளில் வரும் இணையதளங்களின் பாதுகாப்பு அளவை காட்டி விடுவதால், அந்த தளங்களுக்குச் செல்லாமலே நமது கணினியைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.





ஃபயர்பாக்ஸ் பயனர்கள் மட்டுமே இதை உபயோகிக்க முடியும். .இ உபயோகித்தால், கணினிக்கு ஆபத்து அதிகம். கூகிள் சமீபமாக எடுத்த கணக்கெடுப்பின் படி, 52.4 சதவீத இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகிப்பாளர்கள் ஆன்லைன் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்கிறது. ஏனெனில், இன்டர்நெட் எக்ஸ்பளோரர், ஃபயர்ஃபாக்ஸை போல அடிக்கடி அப்டேட் ஆவது இல்லை. ஆகையால், தினம் தினம் புதிதாய் உருவாகிடும் வைரஸ் / செக்குரிட்டி ஹோல்களிடமிருந்து, இந்த இன்டர்நெட் எக்ஸ்பளோரரால் அதனையும் கணினியையும் பாதுகாத்து கொள்ள முடிவதில்லை. மேலும் பல வைரஸ்/ட்ரோஜன் புரோகிராம்கள் இன்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே செயல்படும் என்பது கூடுதல் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. அருகில் உள்ள படத்தைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.

நம்பாவிட்டால் இந்த வலைப்பதிவை பாருங்கள்.



இணைய உலாவியில், ஃபயர்ஃபாக்ஸ் முதலிடத்தையும், இண்டர்நெட் எக்ஸ்பளோரர் கடைசி இடத்தையும் பிடித்திருப்பதைப் படத்தில் பார்க்கலாம். ஆகையால், கூகிள் ஃபயர்ஃபாக்ஸைத் தத்தெடுத்து பரப்பி வருகிறது.

ஃபயர்ஃபாக்ஸின் நன்மைகள்

1) பத்து இணைய தளம் திறக்கும் போது, தனித்தனி திரையாக திறக்காமல், ஒரே திறையில் பல Tab-களில் திறக்கலாம்.



2) Popup Blocking - சில இணையதளங்கள் திறந்திடும் போது அதனுடன் ஒன்றிரண்டு பாப் அப் திறை தேவையில்லாமல் திறந்து தொல்லை கொடுக்கும். ஃபயர்ஃபாக்ஸ் பாப் அப் திறைகளை தனிச்சையாக தடுத்திடும்.

3) மாதம் ஒரு முறை அப்டேட் ஆகிவிடும்.

4) Easy History cleaner - ப்ரொவ்ஸிங் ஹிஸ்டரியை அழிக்க தனி மென்பொருள் தேவை இல்லை. ஃபயர்ஃபாக்ஸ் மூடிடும் போது அனைத்து ஹிஸ்டரி, குக்கீ அழியும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளலாம்.

5) Integrated Search Engine - கூகிள், யாகூ, லைவ், ஆகிய தேடு பொறிகள் ஃபயர்ஃபாக்ஸிலேயே இருக்கும்.

6) Download Manager - கோப்புகள் தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும் போது, இணையத் தொடர்பு துண்டித்துப் போனால் கூட இணைப்பு வந்தவுடன் தொடர்ந்து தரவிறக்கம் செய்யும்.

7) Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.

இன்னும் பல நன்மைகள் உள்ளன. ஒருமுறை உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள், உங்களுக்கே தெரியும் பல வித்தியாசங்கள்.

ஃபயர்ஃபாக்ஸை தரவிறக்க.....

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. நான் கடந்த 6 வருடங்கலாக உபயொகம் செய்கிரென், இது ரொம்ப பாதுகாப்பானது.

    பதிலளிநீக்கு
  2. ஜயா நான் ஆர்குட்யில் எனது நண்பர் போட்டோகளை
    காப்பி செய்ய முடிவது இல்லை இதை எப்படி செய்யவது

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்தைப் பார்த்தேன். இனி மேல், மெயிலில் வந்ததை பதிவு போடாதீர்கள். ஏனெனில், உங்களுக்கு மெயில் அனுப்பும் நபரும் எங்காவது இருந்து தான் எடுத்திருப்பார். ஒருவருக்காக யாரும் இப்படி நேரம் செலவழித்துத் தொழில்நுட்ப செய்திகளைத் தட்ட மாட்டார்கள்.

    அதெல்லாம் விடுங்க, நீங்க விருப்பப்பட்ட ஜிடாக்ல babu@indioss.com frienda சேதுக்கோங்க. சாட் செய்யலாம். பழசெல்லாம் மறந்துடுங்க.

    பதிலளிநீக்கு