TopBottom


ஒரு மொபைல் போன் தண்ணீரில் மூழ்கி பின் எடுக்கப்பட்டால் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

1. முதலில் போனை உடனடியாக தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க வேண்டும்.

2. போனின் பேட்டரியை உடனே போனிலிருந்து எடுக்கவும்.

3. சிம் கார்டையும் உடனடியாக வெளியே எடுக்கவும். அதில் உள்ள தகவல்கள் மிகவும் வேண்டியவை என்பதால் வேறு எதுவும் செய்திடாமல் சிம்கார்டினை வெளியே எடுத்து இயற்கையாக அதனை உலர வைக்கவும்.

4. டிஷ்யூ பேப்பர் அல்லது ஈரம் உறிஞ்சும் ஒரு துணியை எடுத்து போனின் பகுதிகளில் உள்ள ஈரத்தினை கூடுமானவரை உறிஞ்சவும்.

5. இதற்கு ஒரு நல்ல வழி உள்ளது. பேட்டரி மற்றும் சிம்கார்டு நீக்கப்பட்ட போனை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி வைத்துவிடவும். உள்ளே ஈரம் உறிஞ்சும் சிலிகா பைகளை போடலாம். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இப்படியே வைத்திருந்தால் சிலிகா பைகள் அதிக பட்சம் ஈரத்தினை உறிஞ்சிவிடும்.

6. போன் முற்றிலும் உலர கால அவகாசம் அளிக்கவும். உடனே சிம் கார்டு அல்லது பேட்டரியினைப் போட முயற்சிப்பது முற்றிலும் தவறு. சற்று ஈரம் இருந்தாலும் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு எந்த நிலையிலும் பயன்படுத்த முடியாததாக உங்கள் மொபைல் மாறிவிடும்.

7. பேட்டரியினுள் தண்ணீர் போக வாய்ப்பில்லை. அப்படி போயிருப்பதாக அறிந்தால் தயவு செய்து பேட்டரியை மாற்றிவிடவும்.

8. இரண்டு நாட்கள் கழித்து மொத்த ஈரமும் உலர்ந்து போன நிலையை உறுதி செய்து கொண்டு பின் பேட்டரியை இணைக்கவும். சிம் கார்டினை இணைக்குமாறு மெசேஜ் வந்தால் போன் சரியாகி விட்டது என்று பொருள். இல்லை எனில் இன்னும் ஒரு நாள் பொறுக்கவும்.

9. மூன்று நாட்கள் ஆகிய பின் னரும் ஈரம் இருப்பதனை உணர்ந்தால், அல்லது போன் இயங்கிட மறுத்தால் உடனடியாக மொபைல் விற்பனை செய்தவரை அணுகவும். அவர் அதற்கான அத்தாட்சி பெற்ற சர்வீஸ் நிறுவனத்தை அணுகச் சொல்வார். அவ்வாறே செய்திடவும். அவரிடம் எதனையும் மறைக்க வேண்டாம். உள்ளதை உள்ளபடி நடந்ததைச் சொல்லவும்.

வேறு சில முயற்சிகள்:

1. மொபைல் போனை டிவி, கம்ப்யூட்டர் மானிட்டர் அல்லது கேபிள் பாக்ஸில் வைக்கவும். இவற்றிலிருந்து வெளிவரும் இதமான சூடு மொபைல் போனின் ஈரத்தினை மெதுவாகப் போக்கும்.

2. உங்கள் பேட்டரி உப்பு நீரில் மூழ்கி விட்டால் பேட்டரியை வேறு நல்ல நீரில் அலசி பின் மற்ற செயல்பாட்டில் இறங்கவும். இதனால் கிறிஸ்டல்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

3. எந்த சூழ்நிலையிலும் அதிக சூட்டில் பேட்டரியை உலர வைக்க வேண்டாம். சூட்டில் வைத்தால் பேட்டரி வெடித்து அருகில் இருப்பவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும்.

4. ஆல்கஹால் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என திட்டமிட்டால் போனின் வெளிப்புறமாக மட்டும் அதனைப் பயன்படுத்தவும்.

5. போன் அல்லது பேட்டரியை எந்த சூழ்நிலையிலும் எதற் காகவும் மைக்ரோவேவ் அடுப்பில் வைத்துவிட வேண் டாம். உள்ளே தீ பிடிக்கலாம். அல்லது போன் கருகி விடலாம்.


Samsung நிறுவனம் புதியவகைக்் கைத்தொலைபேசிகளைத் தயாரித்துள்ளது. இத் தொலைபேசிகள் சிறப்பு யாதெனில், இவற்றின் பற்றரிகளைத் தண்ணீரில் புதுப்பித்துக் கொள்ள முடியும். இத்தகைய தொலைபேசிகளை 2010ல் சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் இத்தகைய தொலைபேசிகள் தொடர்ச்சியாகப் பத்துமணிநேரம் வரை பாவிக்க முடியுமென , இதன் தயாரிப்பபாளர்களான சம்சுங் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய தொலைபேசிகள் பாவனைக்கு வந்துவிட்டால், தவறித் தண்ணீரில் விழுத்த தொலைபேசியை பதறியடித்துத் தூக்க வேண்டியிராது.

1 Comment

 1. RS Athithan Says,

  //1. முதலில் போனை உடனடியாக தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க வேண்டும்//

  i lik ur first point lol :)

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments