மாயமாய் மறைந்த கூகிள் குரோம்...!



குரோம் பிரவுசர் வெளியானவுடன் பன்னாட்டளவில் அதற்கு வரவேற்பு கிடைத்தது. கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியானதால் பலவகையான புதிய வசதிகளை மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் விருப்பங்களில் பலவற்றைப் பூர்த்தி செய்திடும் வகையில் பிரவுசரும் அமைந்தது.

குறிப்பாக இதன் செம ஸ்பீட் இதுவரை எந்த பிரவுசரிலும் தாங்கள் அனுபவிக்காதது என மக்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் தாங்கள் பழைய பிரவுசர்களில் பழக்கப்பட்ட சில விஷயங்கள் இல்லாதது இந்த பிரவுசர் பயன் படுத்துவதற்குத் தடைக் கல்லாக இருப்பதையும் மக்கள் உணர்ந்தனர். குறிப்பாக அட்ரஸ் பார் ட்ராப் டவுண் மெனு இல்லாதது ஒரு பெரும் குறையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அட்ரஸ் பாரில் டைப் செய்வதற்குப் பதிலாக அட்ரஸ் பாரினைக் கிளிக் செய்து அண்மையில் பிரவுஸ் செய்த தளங்களின் முகவரிகளின் மீது கிளிக் செய்து பெறுவது பொதுவாக அனைத்து பிரவுசர்களிலும் தரப்படும் ஒரு வசதியாகும். இந்த வசதி இல்லாதது மக்களை மீண்டும் பழைய பிரவுசர்கள் பக்கமே திருப்பி விட்டது. பலரும் மீண்டும் பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

குரோம் வெளியான ஓரிரு நாட்களில் பன்னாட்டளவில் இன்டர்நெட் பயன் படுத்துபவர்களில் 1% இடத்தை குரோம் பிரவுசர் பிடித்திருந்தது. ஆனால் இரண்டாவது வாரத்தில் இது 0.85% ஆகவும் அடுத்த வாரத்தில் 0.77% ஆகவும் குறைந்தது. இதுவும் தங்களுடைய வழக்கமான பிரவுசிங் பணிகளை முடித்த பின்னர் பொழுது போக்கும் வகையில் பிரவுசிங்கை மேற்கொள்பவர்களே குரோம் பிரவுசரை நாடுகின்றனர் என்று தெரிகிறது. இதற்குக் காரணம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற பிரவுசர்கள் சில அம்சங்களைத் தரப்படுத்திவிட்டன என்பதே. அவற்றைப் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து நாம் மீள முடியவில்லை. அடுத்ததாக குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்திட வேண்டுமென்றால் இன்ஸ்டால் செய்கையில் நீங்கள் இன்டர்நெட்டிலிருந்து பெரும்பாலான பைல்களை டவுண்லோட் செய்திட வேண்டும். இது மற்றவற்றிலிருந்து மாறுபட்டது. ஏனென்றால் பல நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்தின் சில தளங்களுக்கு தங்கள் ஊழியர்கள் செல்லக் கூடாது எனத் தடை விதித்துள்ளனர்.



இதன் காரணமாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சென்ற வாரங்களில் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆப்பரா மற்றும் நெட்ஸ்கேப் தங்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து இழந்து வருகின்றன. சபாரி பிரவுசர் குரோம் பிரவுசரால் தன் இடத்தை இழக்கவில்லை. ஏனென்றால் மேக் கம்ப்யூட்டருக்கான குரோம் பிரவுசரை இன்னும் கூகுள் தரவில்லை.

மேலும் கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசர் குறித்து அவ்வளவாக விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. ஆனால் தங்களுடைய பிரவுசர் நிச்சயம் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெறும் என கூகுள் நம்புகிறது. இதற்குக் காரணம் குரோம் ஒரு ஓப்பன் சோர்ஸ் பேக்கேஜ் ஆகும். இதனால் பல வசதிகளைத் தரும் ஆட்–ஆன் தொகுப்புகள் விரைவில் வெளிவந்து வாடிக்கையாளர்களைக் கவரும் என கூகுள் எதிர்பார்க்கிறது.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. உங்கள் டெம்ப்ளேட் நல்லா இருக்கு.. கருத்துக்களும் அருமை.

    நிறைய எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நான் இப்பொழுது குரோம் தான் பயன்படுத்துகிறேன்.. ஆனால் அலுவலகத்தில் install permission இல்லை.. :-(

    பதிலளிநீக்கு
  3. @ தமிழ்நெஞ்சம்

    @ Kumaran

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.:)

    பதிலளிநீக்கு
  4. நன்றி நன்பரே!! useful information. நான் கூட தொடக்கத்தில் கூகுல் குரோம் உபயோகித்தேன், இப்போது Exploreர் க்கு மாறிட்டேன்!!

    பதிலளிநீக்கு