TopBottomசில சமயங்களில் ஒரிஜினலைவிட டூப்ளிகேட்டுகள் நன்றாக அமைவதுண்டு. அதற்கு மிகச்சிறந்த உதாரணந்தான் இந்த Tiny XP. விண்டோஸ் XP யில் பல விதமான பயன்பாடுகள் உள்ளன. ஆனால் இவற்றில் 30% தையாகிலும் நாம் முழுமையாக பயன்படுத்துவதில்லை.

ஏன், அவற்றை பற்றி அறிந்துகொள்ளக்கூட நமக்கு நேரமிருப்பதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படுவதில்லை. ஆக நமக்கு தேவையான ஓரிரு பயன்பாடுகளுக்காக முழு Windows XP யையே லோட் பண்ணி கணினியின் தலையில் சுமையேற்றி விடுகிறோம். இதனால் நம்ம பிஞ்சு கம்பியுட்டருக்கு நாக்கு வெளியே தள்ளி டவுசர் கிழிந்து போகும்.

இப்படி டவுசர் கிழியும் கணினிகளை பார்த்து சகிக்கமாட்டாத நம்மள மாதிரி இல்லாத நல்லவங்க கொஞ்சப்பேர் சேர்ந்து இதுக்கெல்லா காரணமான XP யோட டவுசரை கிளிக்க முயன்று வந்த வெற்றிகரமான முடிவுதான் இந்த Tiny XP.

Tiny XP யில் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயற்பாடுகளைத்தவிர மிச்சமுள்ளதெல்லாவற்றையும் கடாசிவிட்டார்கள். மிக முக்கியமானதென கருதுபவற்றை மாத்திரம் விட்டுவைத்திருக்காங்க.

இணைய இணைப்பு வசதி, பிரிண்டிங் வசதி, போன்ற முக்கியமாக செயற்பாடுகள் மாத்திரமே இதில் உள்ளன. இதனால் நமது கணினியின் சுமை குறைக்கப்படுகிறது. அதேவேளை கணினியை வேகமாக செயற்படவும் வைக்கிறது.

Tiny XP யை பல வேர்ஷனாக வெளியிட்டிருக்கிறார்கள். 55 MB முதல் 600 MB வரையிலான CD Image ISO கிடைக்கின்றன. 400MB Hard Disk space, 40 MB Ram இலேயே ஆகப்போக 8 - 15 நிமிட நேரத்திலேயே இன்ஸ்டால் பண்ணக்கூடியதான XP என்றால் ஆச்சரியமானதுதானே!!! அப்போ நம்ம சாதாரண கணனிகள் ச்சும்மா அதிருமே!!! ( வழமையாக XP Full Install ஆனது 1100MB Hard disk space எடுத்துக்கொள்ளும். குறைந்தது 256MB Ram ல்கூட இழுத்திழுத்து வேலை பண்ணும். இன்ஸ்டால் பண்ண 20-60 நிமிடங்கள் ஆகும்)

நமக்கு தோதான வெளியீட்டை தரவியக்கிக்கொள்ளலாம். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இவையனைத்தும் Pirate Versions!!!.

Tiny XP Rev 09 ஆனது லேட்டஸ்ட்டாக வந்தது. இதில இப்ப பிளாட்டினம் வேர்ஷனேல்லாம் வெளியிர்றாங்க!!!. SP3 யும் சேர்த்து குடுக்கறாங்க.

Torrents web site எதிலும் Tiny Xp என குடுத்து நீங்க டவுண்லோடு பண்ணலாம். eXperiance என்று இருக்கற Tiny XP நல்லது.

மேலும் http://tinyxp.com/ க்கும் ஒரு விசிட் அடிங்க. youtube லயும் இத பத்தி தேடி இது எப்படி வேலை செய்யுதுனு பார்க்கலாம். மேலும் என்ன டவுட்டு வந்தாலும் இந்த தளத்துக்கு போய் பாருங்க.

6 Comments

 1. Anonymous Says,

  super post

   
 2. Reply To This Comment
 3. The Botanist Says,

  Please post some links to download. I searched and found 100's. Which is good. TINY XP EXPERIENCE is around 700 MB in size. How this will be a TINY VERSION?

   
 4. Reply To This Comment
 5. @ The Botanist

  Tiny XP Rev 09 ஆனது லேட்டஸ்ட்டாக வந்தது. இதில இப்ப பிளாட்டினம் வேர்ஷனேல்லாம் வெளியிர்றாங்க!!!. SP3 யும் சேர்த்து குடுக்கறாங்க.

  Tiny Xp Platinam version is latest and good.

   
 6. Reply To This Comment
 7. Anonymous Says,

  Great site. Thank you..

   
 8. Reply To This Comment
 9. benzaloy Says,

  Am new to computer ... used XP-Tiny on an old
  Toshiba machine given me as a gift.
  Learnt all what I know by reading sites like yours.
  When I had to download with Microsoft approval they readily accepted and there4 consider it as NOT pirated version.
  Anyway, you know better.
  Your site is useful and informative.
  I found you on Tamilish this morning while my daughter too sent me your url a little while later.
  Wish you all the best.

   
 10. Reply To This Comment
 11. @ benzaloy

  thanks for your wishes :)

   
 12. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments