TopBottom

இந்த பொங்கலுக்கு அளவு சாப்பாடுதான்! ஒவ்வொரு பொங்கலன்றும் கொட்டி வைத்த பொன்னி அரிசி மாதிரி குவியலாக வரும் படங்களின் வரிசை, கரும்பு தேய்ந்து கணுக்கரும்பு ஆனது போல ஆகிவிட்டது. மூன்றே படங்கள்தான் இந்த பொங்கலுக்கு!

மாதவனின் குரு என் ஆளு, எஸ்.ஜே.சூர்யாவின் நியூட்டனின் 3ம் விதி, பசுபதி, அஜ்மல் நடித்த டி.என்.67-ஏ.எல்.4777 ஆகிய படங்கள் தியேட்டர் கிடைக்காமல் தள்ளிப் போய்விட்டன.
விஜயகாந்த் நடித்துள்ள எங்கள் ஆசான் படம் பொங்கலன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால், கோர்ட் தடை போட்டு விட்டதால் படம் ரிலீஸாகவில்லை.

வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா இல்லே இந்த மூன்று படங்களில் வில்லு முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், திடீரென்று தனது வேகத்தை அதிகப்படுத்தி போட்டியில் கலந்து கொண்டிருக்கிறது படிக்காதவன்.

வில்லு-

போக்கிரிக்கு பிறகு பிரபுதேவா இயக்கி விஜய் நடித்திருக்கும் படம். நயன்தாராவுக்கு தமிழில் இருக்கிற மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு. விஜய்க்கு மட்டும் என்னவாம்? இதே கட்டாயம்தான்! தனது இரட்டை வேட சென்ட்டிமென்ட்டை புறம் தள்ளிவிட்டு இந்த படத்தில் அப்பா-மகனாக நடித்திருக்கிறார். இடைவேளைக்கு முன்பு வரை காமெடி புயலை வீசி, தியேட்டரையே திடுதிடுக்க வைத்திருக்கிறாராம் வடிவேலு. மசாலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கதையில் நம்ப முடியாத சண்டைகள்தான் அதிகம் என்கிறார்கள். கமர்ஷியல் சினிமாவில் இது சகஜம்தான் என்றாலும், வில்லுவின் சண்டை காட்சிகள் முழுக்க முழுக்க காதிலே பூ என்கிறார்கள். முனியாண்டி விலாசிற்கு போனால் தயிர் சாதமா கிடைக்கும்?

இளையதளபதி "பழைய தளபதி " ஆகாமல் இருந்தால் சரி....!

படிக்காதவன்-

மருதமலை என்ற வெற்றிப்படத்தை இயக்கிய சுராஜ் இயக்கியிருக்கும் படம். எப்பவுமே இவரது படங்கள் காமெடி ஸ்பெஷல். இந்த படத்திலும் அதற்கு குறையில்லை என்கிறார்கள். வடிவேலுவுக்கு பதிலாக இதில் விவேக் நடித்திருக்கிறார். பொல்லாதவன், யாரடி நீ மோகினி வெற்றியை தொடர்ந்து வருகிற தனுஷின் படம். என்ன நினைத்தார்களோ, முந்தைய படங்கள் மாதிரி கதையை மட்டும் நம்பாமல் ஆக்ஷனையும் பலமாக நம்பியிருக்கிறார்கள். படித்த குடும்பத்தில் பிறந்து பத்தாவது கூட பாஸ் ஆகாத தனுஷ் செய்கிற அலம்பல்கள்தான் கதை. ஜோடி தமன்னா. தமிழ் சினிமாவில் திடீர் பிரமோஷன் ஆகியிருக்கும் தமன்னாவுக்கு இந்த படம் முக்கியமான என்ட்ரி பாஸ்!

பக்கத்தில இருக்கிற போட்டோவை பாத்தாலே தெரியுது...!

காதல்னா சும்மா இல்லே-

ராஜ் டிவி நிறுவனம் தயாரித்திருக்கும் படம். ரவிகிருஷ்ணா. தெலுங்கு ஹீரோ சர்வானந்த், கமலினி முகர்ஜி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை ஒற்றன் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இளங்கண்ணன் இயக்கியிருக்கிறார். ஆந்திராவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன கம்மியம் என்ற படத்தின் ரீமேக் இது. 7ஜி ரெயின்போ காலனிக்கு பிறகு ஒரு கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் ரவி கிருஷ்ணா, இதில் காமெடியாகவும் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் விசேஷம். தேஜா ஸ்ரீ போட்டிருக்கும் ஒரு கெட்ட ஆட்டமும், அந்த பாடலும் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடிக்கும்.

ரவிகிருஷ்ணா மீண்டும் காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேராமல் இருக்க வேண்டுமே...!

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments