TopBottom


இங்கிலாந்தில் வ‌சிக்கும் ஈழ‌த்து த‌மிழ்பெண் மாயா [M.I.A] மாத‌ங்கி அருள்பிர‌காச‌ம் இவ‌ர் இங்கிலாந்தில் புக‌ழ் பெற்ற‌ பாட‌ல் ஆசிரிய‌ர், ராப் பாட‌க‌ர். த‌மிழ் ஈழ‌த்தில் 17 ஜுலை 1977-ல் க‌லா ம‌ற்றும் அருட்பிர‌காச‌ம் த‌ம்ப‌தியின‌ருக்கு பிற‌ந்த‌வ‌ர்.

சமீபத்தில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்றுள்ள திரைப்படமான "ஸ்லம்டாக் மில்லியனர்" (Slumdog Millionaire) திரைப்படத்தில் வரும் 'ஓ சயா' என்ற பாடலை எழுதி பாடியவர் மாயா. இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழனின் வேதனை உணர்த்த தக்க சமயத்தில் மாயா என்ற தமிழ் பாடகிக்கு ஆஸ்கார் மற்றும் மிகவும் உயர்ந்த பாடகர் விருதான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாயா தனது 11 வயதில் ல‌ண்ட‌னில் அக‌தியாக‌ த‌ன‌து வாழ்க்கையை துவ‌ங்கிய‌வ‌ர். ல‌ண்ட‌னில் உள்ள‌ சென்ட்ர‌ல் செயிண்ட் மார்சியல் ஆர்ட் அகேடமியில் த‌ன‌து க‌லைப் ப‌ட்டப்‌ப‌டிப்பை முடித்தார். ப‌ட்டப்‌ப‌டிப்பு முடிந்ததும் இவ‌ர் த‌னி இசைப்பாட‌ல்க‌ள் இய‌ற்றுவ‌தும் தானாக‌வே ஆல்ப‌ங்க‌ள் த‌யாரிக்கும் ப‌ணியில் ஈடுப‌ட்டார். இவ‌ர‌து பாட‌ல்க‌ள் இங்கிலாந்து ம‌ட்டுமின்றி அமெரிக்க‌ நாடுக‌ளிலும் பிர‌ப‌ல‌மான‌து. த‌னி இசை ஆல்ப‌ம் இங்கிலாந்தில் மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌து. 2005-ஆம் ஆண்டில் ஆல்ப‌ம் ஆப் த‌ இய‌ர் என்ற‌ விருதை பெற்றுத்த‌ந்த‌து. இந்த‌ வ‌ருட‌ம் பேப்ப‌ர் ப்ளேன்ஸ் (Paper Planes-2008), சகா லைக் அஸ் என்ற‌ இர‌ண்டு ஆல்ப‌ங்க‌ளுக்கு மிக‌ உய‌ரிய‌ விருதான‌ கிராமிவிருது இவ‌ருக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப‌ட்டுள்ள‌து.



அவர் தொலைக்காட்சிக்கு அளித்த முழுமையான நேர்காணலை இங்கே காணலாம்.

1 Comment

  1. அவரின் பல பாடல்களை பார்த்திருக்கிறேன்
    ஆஸ்கார் பெற வாழ்த்துக்கள்

     
  2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments