TopBottom

தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய இரண்டு பிரிவுகளில் வென்று, இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.


உலகளவில் திரையுலகினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் மொத்தம் 10 பிரிவுகளில் போட்டியிட்டது.

இப்படத்தில் இசையமைத்த தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய 2 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த இரண்டு பிரிவுகளிலும் வென்று, இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டதும் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் மேடையேறிய ஏ.ஆர்.ரகுமான், விருதை பெற்றபோது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசினார்.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவி்ல் ஒரு விருதும், 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஜெய் ஹோ பாடலுக்கான விருதை ரஹ்மானுடன் சேர்த்து அதை எழுதிய பாடலாரிசியர் குல்சாரும் பெற்றுள்ளார்.

ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.

சவுண்ட் மி்க்சி்ங்-பூக்குட்டிக்கு:

இந்தப் படத்துக்கு சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை தமிழகத்தைச் சேர்ந்த சவுண்ட் மிக்சிங் நிபுணர் பூக்குட்டி வென்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பூக்குட்டி பெற்றுள்ளார்.

மேலும் சிறந்த இயக்குனர், எடிட்டிங் உள்பட ஸ்லம்டாக் மில்லியனர் மேலும் 5 விருதுகளையும் வென்றுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.

விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான்,

''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

Congratulations AR.Rahman


இதன்மூலம் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் கூடுதல் பெருமை சேர்த்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

2 Comments

 1. YUVA Says,

  Ya thats something and a real thing to celebrate. But, Oscar is not the kind of award you mentioned. Its created for awarding English films, created by Hollywood producers. They have a category for non-english films, Thats it. It cannot be taken as a award to recognise best of the world films. There are a lot other awards which does it, not Oscar.

   
 2. Reply To This Comment
 3. Valaipookkal Says,

  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

   
 4. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments