TopBottom

ஆஸ்கர் விருதும் சில சர்ச்சைகளும்

எழுதியவர் : Karthikan Karunakaran 25 February 2009


ஸ்லம்டாக் மில்லியனர் படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றியதை உலக அதிசயமாக இடைவிடாமல் ஒளிபரப்பின வட இந்திய ஆங்கில செய்தி ஊடகங்கள். ஸ்லம்டாக் மில்லியனரின் வெற்றியை தங்களது சொந்த வெற்றியாக கொண்டாடும்படி இந்தியர்கள் இந்த ஊடகங்களால் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்தியர்களான ஏ.ஆர். ரஹ்மானும், ரெசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் விருது பெற்றது சரித்திர சாதனை என்பதில் ஐயமில்லை. அதேநேரம், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மற்ற ஆறு விருதுகளுக்கும் சேர்த்து இந்தியர்கள் சந்தோஷ­ம் கொண்டாடுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆஸ்கர் விருதின் பூர்வீகம் அறிந்த கமல்ஹாசன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தே ரஹ்மானை பாராட்டியிருக்கிறார். அமெரிக்கர்கள் தங்களது சினிமாவுக்கு அளிக்கும் விருதான ஆஸ்கரை அமெரிக்க படத்தில் வேலை செய்து பெற்றிருக்கிறார் ரஹ்மான் என்று தெளிவுபட கூறி அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் இந்தியாவில் தயாரான படம் என்றாலும் அது இந்திய படம் அல்ல. அப்படியிருக்க அப்படத்துக்கு எட்டு ஆஸ்கர் விருது கிடைத்ததுக்காக ஏன் இந்தியர்களும், இந்தி மீடியாக்களும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார், முகேஷ்பட்.

ஸ்லம்டாக் மில்லியனர் போலவே அதிக ஆஸ்கர் விருதுகளை குவித்த படம் லார்ட் ஆஃப் தி ரிங். இப்படம் நியூசிலாந்தில் தயாரானது என்றாலும் இதுவொரு அமெரிக்க தயாரிப்பு. ஆஸ்கர் விருது இப்படத்துக்கு கிடைத்தபோது, நமது படத்துக்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது என்று நியூசிலாந்துக்காரர்கள் பட்டாசு வெடிக்கவில்லை. இதையும் முகேஷ்பட்டே கூறியிருக்கிறார்.

அதேபோல் அமிதாப்பச்சனும் இந்தியாவை சிறந்த முறையில் வெளிப்படுத்திய படம் ஸ்லம்டாக் மில்லியனரா அல்லது டெல்லி 6 படமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

விருது கிடைத்த சந்தோ­ஷத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டிய கசப்பு மாத்திரைகள் இந்தக் கேள்விகள் என்பதில் ஐயமில்லை.

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகமடா இது...!

5 Comments

  1. vinoth Says,

    யென் மனதில் இருபதை அப்படியெ சொல்லி வி ட் டி இர் கல்

     
  2. Reply To This Comment
  3. Anonymous Says,

    இதில் சொல்லியிருக்கும் கருத்துக்கள் மிக்க சரியே,இந்திய படங்களுக்கு தனிப்பிரிவு உண்டு, அதில் நமக்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் தான் நமக்கு முழு மரியாதை,அப்போது முழுமனதுடன் கொண்டாடுவோம்,நீங்கள் குறிப்பிட்டுள்ள திரு,முகேஷ் பட் தவறு திரு,மகேஷ் பட் தான் சரி,

     
  4. Reply To This Comment
  5. ஹிந்தி காரர்களுக்கு கிடைக்காத விருதை ஒரு தமிழனும் மலையாளியும் பெறுவதை அவர்களால் பொறுக்க முடியவில்லை
    --

    கமலை பொறுத்த வரை - அவர் கூறியது நிஜம் தான்.

    ஆனால் இவரை நடிக்க கூப்பிட எந்த ஹாலிவுட் இயக்குனருக்கும் தோன்றவில்லை. ரஹ்மானை இசையமைக்க அழைக்க தோன்றியதற்கு காரணம் ரஹ்மானின் திறமை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்

    //ஆஸ்கர் விருது இப்படத்துக்கு கிடைத்தபோது, நமது படத்துக்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது என்று நியூசிலாந்துக்காரர்கள் பட்டாசு வெடிக்கவில்லை//
    அந்த படத்திற்கு நியூசிலாந்து காரர்கள் யாராவது இசையமைத்தார்களா ??

     
  6. Reply To This Comment
  7. பெருந்தலைகளே...இவ்வாறு கருத்து சொல்லியிருக்கும்போது...சரியாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து...மற்ற....STALWARTS...எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்று...பொறுமையுடன் இருந்து பார்ப்போம்...:"பழுத்த மரம் தான், கல்லடி படும் என்பது...சான்றோர் வாக்கு"....

     
  8. Reply To This Comment
  9. newspaanai Says,

    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

     
  10. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments