புதிதாக லப்டொப்(Laptop) வாங்கப்போறிங்களா...?

தற்போது அனைத்துக் கணினிகளின் விலை மாபெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. உயர்தரமான அதிக வசதிகள், பயன்பாடுகள் கொண்ட கணினியைக்கூட இன்று மிகக் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

வழக்கமான நிலைக்கணினியை போலவே மடிக்கணினி இன்று மிகப்பரவலாகப் பயன்பட்டு வருகிறது. ஏறத்தாழ இரண்டின் விலையும் ஒரே அளவில் தான் இருக்கின்றன். அப்படியிருக்கையில் இன்னும் ஏன் நிலைக்கணினி? புறப்படுங்கள் மடிக்கணினிக்கு...


மடிக்கணினி வாங்க தயாராகிவிட்டீர்கள் அல்லவா? இதோ மடிக்கணினி வாங்குவதற்கு முன்பான சில யோசனைகள்...


மடிக்கணினி வாங்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை :

  • எடை மற்றும் அளவு

  • இணைப்புத்திறன்

  • மின்கலங்கள்

  • பாதுகாப்புத் தன்மை

  • மேம்பாட்டு வசதி

  • உத்தரவாதம் மற்றும் ஆதரவு

எடை மற்றும் அளவு

மடிக்கணினி வாங்குவதற்கான கருத்துருக்களில் மிக முக்கியமானது எடை மற்றும் அளவு. பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து பயணித்து வருபவர் மெல்லிய மற்றும் எடை குறைவான மடிக்கணினிகளையே வாங்க வேண்டும். அதிக எடை கொண்டவற்றை எடுத்துச்செலவதும் பயன்படுத்துவதும் மிகக் கடினம். நிலைக்கணினிகளை இடம்பெயர்க்கும் மடிக்கணினி சிறந்ததுதான் என்றாலும் அதனை பயண நேரங்களில் பயன்படுத்துவது சற்று கடினமே.

இணைப்புத்திறன்

இணையம் மற்றும் அலுவலக வலைப்பின்னலில் இணைக்கும் இணைப்புத்திறனை அவசியம் பெற்றிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல இணைப்புகளை ஏற்கும் திறனை பெற்றிருப்பதோடு சில சமயங்களில் பங்கீட்டு இணைய வலைப்பின்னல் வசிதியை வழங்கவிருப்பதாகவும் இருக்க வேண்டும். Wi-Fi இணைப்புத்திறன் பெற்றிருப்பின் சாலச் சிறந்தது.

மின்கலங்கள்

நடமாடும் அலுவலக பயனீட்டாளர்களுக்கு அதிக வாழ்நாள் தன்மை கொண்ட மின்கலங்களே பொருத்தமானதாகும். அதுமட்டுமில்லாது மற்றும் ஒரு மின்கலத்தை இணைக்கும் வசிதியும் இருக்க வேண்டும். மின்சார வசதி இல்லாத இடங்களிலும், பயணம் மேற்கொள்ளும் போதும் இது மிக உதவியாக இருக்கும். மேலும் மின்கலங்களை புத்துயிரூட்ட (RECHARGE ) ஆகும் நேரத்தையும் கருத்தில் கொண்டு வாங்க வேண்டும்.


பாதுகாப்புத் தன்மை

இன்று அதிகம் களவுபோவது செல்லிடைப்பேசிகளை அடுத்து மடிக்கணினிகளே. ஆதலால் பாதுகாப்புத் தன்மைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. மேம்பட்ட பாதுகாப்புத் தன்மை கொண்ட மடிக்கணினி நம்முடைய பணத்தையும் அச்ச உணர்வையும் பெருமளவு குறைக்கும்.

மேம்பாட்டு வசதி

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய மடிக்கணினியையும் மேம்படுத்தும் வசதி மிகவும் அவசியமாகிறது. நினைவகம் (RAM MEMORY ), கொள்ளளவகம் (HARDDISK ), செயலகம் (PROCESSOR) போன்றவற்றை மேம்படுத்துவது மிக எளிமையானதாக இருக்க வேண்டும். உள்ளிணைந்த (On Board ) வசதி மேம்பாட்டு வசதியினை தடுத்து விடுவதால் அத்தகையவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் அளவில் மிகச்சிறியவற்றை தேர்ந்தெடுப்பதினால், அதனை பயன்படுத்துவது கடினமானதாகவும் காயமேற்படுத்துவதாகும் இருப்பதினால் சற்று பெரிய மடிக்கணினிகளையே வாங்குவது நல்லது.

உத்தரவாதம் மற்றும் ஆதரவு

24x7 ஆதரவு அளிக்கும் நிறுவனத்திடம் மட்டிமே மடிக்கணினிகளை வாங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத உத்தரவாதம் மற்றும் ஆதரவு இருக்க வேண்டும்.பிரச்சனைக்குரிய அனைத்து பாகங்களையும் சரி செய்தோ அல்லது மாற்று பாகங்களை அளித்தோ ஏற்றிட வேண்டுமென்பதை வாங்கும்போதே உறுதி செய்துகொள்ள வேண்டும். பிரச்சனைகளுக்குத் தீர்வு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் கிடைப்பின் மிகு நன்மையளிக்கும்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. எனது மடி கணினி 1 மணி அல்லது சற்று நேரத்துக்கு மேல் உபயோகத்தில் இருக்கும் பொது தன்னால் off ஆஹி விடுகிறது. ஏன்?

    பதிலளிநீக்கு
  2. அதிகமாக சூடாவதாலும் இருக்கலாம் அல்லது உங்கள் Power sever timer இல் நேரம் செட் செய்யப்பட்டிருந்த்தாலும் இப்படி நிகழ‌லாம். எதற்கும் உங்கள் கணனியை வாங்கிய computer store இல் கேட்டு பாருங்கள்.

    பதிலளிநீக்கு