ஏன் கிடைக்கிறது 'Session Expired'?


மிகப் பிரியமான இன்டர்நெட் பிரவுசிங்கில் அடிக்கடி "Session Expired"என்ற செய்தி கிடைத்து நம் ஆர்வத்தைக் கெடுக்கும். நமக்கோ ஒன்றும் புரியாது. ஆர்வம் அதிகம் இருந்தால் மீண்டும் முதலில் இருந்து அந்த தளத்தைத் திறந்து ஒவ்வொரு லிங்க்காகக் கிளிக் செய்து வருவோம்.

இந்த பிரச்சினைக்கு நம் பிரவுசர் தான் காரணம் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். எதனால் இந் செய்தி கிடைக்கிறது என இங்கு பார்க்கலாம்.



1. பிரவுசிங்கை விட்டுச் செல்லல்: நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில் வேறு ஒரு வேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டு நீங்கள் செல்ல வேண்டியதிருக்கலாம். மீண்டும் வந்து பார்க்கின்ற போது "Session Expired" என்ற செய்தி திரையில் கிடைத்துக் கொண்டிருக்கும்.


எந்த விதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத் திருக்கலாம். அதன் எதிரொலியே இது. எத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்று இருந்தால் அந்த தளம் இந்த செய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாக வரையறுக்க முடியாது. இது அந்த தளத்தை வடிவமைத்தவர்கள் செய்த வரைமுறையாக இருக்கலாம்.

2. குக்கீஸ்: சில தளங்கள் தங்க ளிடம் முறையாகப் பதிவு செய்யாதவர் கள் தளத்தைப் பார்க்க சில நிமிடங்களே அனுமதி தரும். அந்த நேரம் முடிந்துவிட்டால் தானாகத் தளம் மூடப்பட்டு "Session Expired" செய்தி கிடைக்கும். மேலும் சில தளங்கள் குக்கீஸ் எனப்படும் குறுந்தகவல் தொகுப்புகளை அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்கும்.


அப்போதுதான் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்தை அணுகுகையில் உங்களைப் பற்றிய தகவலை அந்த தளம் அறிந்து கொண்டு உங்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ள முடியும். எனவே குக்கீஸ் பெறுவதனை நீங்கள் தடுக்கும்படி செட் செய்திருந்தால் மாற்றிவிடவும். இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று அதில் Privacy டேப் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் திரையில் Default என்னும் பட்டனைக் கிளிக் செய்தால் குக்கீஸ் பெறுவது அனுமதிக்கப் படும்.



3. பயர்வால்: கம்ப்யூட்டரில் பயர்வால் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளம் தானாகவே மூடும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால் பயர்வால் செட்டிங்ஸ் சில தளங்களை இறக்கம் செய்து பார்க்கவிடாது. இதனால் பிழைச் செய்தி கிடைக்கலாம். இதற்கு உடனே பயர்வால் செட்டிங்ஸ் பார்த்து திருத்தவும். நீங்கள் விரும்பிப் பார்க்கின்ற தளங்களை பயர்வால் அனுமதிக்கும் படி பயர்வால் செட்டிங்ஸை மாற்றவும்.




4. தவறான நாளும் நேரமும்: சில வேளைகளில் தவறான நாள், தேதி மற்றும் நேரத்தை உங்கள் கம்ப்யூட்டர் காட்டிக் கொண்டிருந்தால் அதனாலும் "Session Expired"செய்தி வரலாம். ஏனென்றல் சில தளங்கள் பின்புலத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் நேரத்தோடு இணைந்து சில புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருக்கலாம். இதனால் தவறான நடவடிக்கைகளுக்குள்ளாகி செஷன் எக்ஸ்பயர் ஆக வாய்ப்புண்டு.



5. தளத்தில் வேறு பிரச்னைகள்: மேலே குறிப்பிட்ட எதுவுமின்றி இணைய தளத்தில் எக்ஸ்பயர் செய்தி வருகிறதென்றால், அதுவும் குறிப்பாக ஒரு தளத்திற்காக வருகிறது என்றால் அந்த தளத்தில் பிரச்னை உள்ளது என்று பொருள். அந்த தளத்தை புதுப்பிப்பதற்காக இயக்கத்தை நிறுத்தி வைத்திருக்கலாம். அல்லது அந்த தளத்தைக் கொண்டிருக்கும் சர்வர் இணைய வலையிலிருந்து விடுபட்டிருக்கலாம்.

அல்லது அந்த சர்வரில் பிரச்னை ஏற்பட்டு பராமரிப்புக்காக சர்வரின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்கலாம். "Session Expired" என்ற பிரச்னை முற்றிலும் இணைய தளம் மற்றும் அந்த தளத்தைத் தாங்கிக் கொண்டு வழங்கும் சர்வர் சார்ந்த பிரச்னை ஆகும்.எனவே உங்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் சரி செய்வதனால் இது நிவர்த்தி அடையாது.

எனவே இந்த செய்தி வரும் பட்சத்தில் பொறுமையாக உடனே அல்லது சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அதனைப் பெற முயற்சிப்பதுதான் சிறந்த வழியாகும்.

இந்தப் பதிவு கம்யூட்டர்மலரில் இருந்து எடுக்கப்பட்டது. மேலும் படிக்க....

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. Thanks for this info. When we donload files from rapodshare, most of the times, after the clock completes, download button appears and I click to download. Now the 'session expired' error occurs. It happens many times, not all the times. any tips?

    Rajasekaran

    பதிலளிநீக்கு
  2. Thanks for the info. IN rapidhare website, after the clock is over, downlaod button appears, and when we click it for downloading, 'session expired' error appears. any reason? any tips.

    Rajasekaran

    பதிலளிநீக்கு
  3. ஒரு குறிப்பிட்ட தளத்தின் செஷன் டைமை அதிகரிப்பது எப்படி? கான்ஃபிகரேஷன் ஃபைலில் இருக்கும் நிமிடங்களை அதிகப் படுத்தியும் கூட இதே மாதிரி விரைவில் எக்ஸ்பயரி ஆகிவிடுகிறதே!

    பதிலளிநீக்கு