TopBottom

தநா 07 அல 4777- விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 01 March 2009

அ‌ஜ்மல் ஐநூறு கோடி ரூபாய் சொத்துக்கு வா‌ரிசு. அந்த சொத்து கைக்கு வரவேண்டுமானால் லாக்க‌ரில் இருக்கும் உயிலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த லாக்கர் சாவி இருப்பது டாக்சி ஓட்டுனர் பசுபதி கையில். தன்னை போலீசில் மாட்டிவிட்ட அ‌ஜ்மலிடம் பசுபதிக்கு தீராத கோபம். இவர்கள் இருவருக்கும் நடுவில் நிகழும் ஒரு நாள் ஆடுபுலி ஆட்டமே கதை.

ரொம்ப சுவாரசியமாக இருக்கும் என்று உட்கார்ந்தால் ஆட்டோ சவா‌ி மாதி‌ி குலுக்கியெடுக்கிறார்கள். டாக்சி ஓட்டிக்கொண்டு எல்ஐசி ஏஜென்ட் என மனைவியிடம் பொய் சொல்லும் குடிகார குடும்பத் தலைவர் பசுபதி. உலக நிகழ்வில் ஏதேனும் ச‌ரியில்லை என்று தோன்றினால் பசுபதியின் கோபம் கரை உடைத்துவிடும்.

அப்படிப்பட்டவரை சவா‌ரிக்கு அழைத்து சலம்பலில் மாட்டிவிடுகிறார் அ‌ஜ்மல். சும்மா இருப்பாரா பசுபதி? சாவியை கொடுக்காததுடன், மனைவியிடம் தான் டாக்சி ஓட்டுவதை போட்டுக் கொடுத்ததற்காக அ‌ஜ்மலை கொலை செய்யவும் முயல்கிறார். நம்ப முடியவில்லை. பசுபதியின் மனைவியாக வரும் சிம்ரன் செம ார்ப். இருவருக்கும் நடுவில் நிகழும் உரையாடல் படு இயல்பு.

கோப கொடுக்குடன் தி‌ரியும் அ‌ஜ்மலிடம் பெ‌ரிதாக எதுவும் தேறவில்லை. அடிக்கடி பசுபதியை நினைத்து உறுமிக் கொள்வதுடன் முடிந்து போகிறது அவரது வேலை. மீனாட்சி தாமரை இலை தண்ணீர். ஒட்டவேயில்லை.

கிழிந்த உயிலைப் பார்த்ததும் அ‌ஜ்மலின் நண்பர்கள் அவரைவிட்டு விலகிப் போவது, இறுதி காட்சியில் உயிலை அ‌ஜ்மல் கிழித்துப் போட்டு திருந்துவது என பாதி படத்துக்குமேல் அத்தனையும் நாடகத்தனம்.

அண்டார்டிகாவில் அமர்ந்து டியூன் போட்டதுபோல் முதலிரண்டு பாடல்களில் அப்படியொரு நடுக்கம். வார்த்தைகளை குதறிப் போட்டால் ராப் ஆகிவிடுமா என்ன?

படத்தின் மாண்டேஜை வைத்தே குட்டிப் பாடலொன்று வருகிறது, எடிட்டர் மெனக்கெட்டிருக்கிறார். குறை சொல்ல முடியாத ஒளிப்பதிவு. போலீஸாக வரும் மனோபாலாவின் போர்ஷன் சும்மாவே கடி. அதில் ஐமிக்கி ஐமிக்கி என பின்னணி இசை. சகிக்கவில்லை.

படம் முடிந்து வெளியே வரும்போது உச்சி வெயிலில் ஊரைச் சுற்றி வ‌ந்த மாதி‌ி ஒரே கச கச.

1 Comment

  1. இவ்வளவு நெகடிவ்வாக ஒரு விமர்சனம் எழுதி டயத்தை வீணடிக்க வேண்டுமா கார்த்திக்?

     
  2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments