இன்டர்நெட் மையங்களில் கவனம் + அன்டிவைரஸ் சப்ட்வயர்கள் தரமானதா என்று அறிய சூப்பரான வழி

வெளியூர்களுக்குச் செல்கையில் அல்லது அவசரத் தேவைக்கு பொதுவான இன்டர்நெட் மையங்களுக்குச் சென்று உங்கள் இணைய வேலையை மேற்கொள்கிறீர்களா? சிறிது பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

1. இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கும் முன் பிரவுசர் செட்டிங்ஸ் பார்வையிடவும். இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் கண்டென்ட் டேப் மீது கிளிக் செய்திடுங்கள். பின் ஆட்டோ கிளிக் பிரிவில் செட்டிங்ஸ் பட்டன் கிளிக் செய்து அதில் உள்ள பாக்ஸ்களில் உள்ள டிக் அடையாளங்கள் அனைத்தையும் எடுத்துவிடவும். பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால் பிரைவசி என்ற டேப்பில் கிளிக் செய்து ஹிஸ்டரி, குக்கீஸ் ன்ற பிரிவுகளில் உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிடவும். பின் செக்யூரிட்டி டேபில் கிளிக் செய்து அதில் பாஸ்வேர்ட்ஸ் என்று உள்ள பகுதிகளில் உள்ள பெட்டிகளில் காணப்படும் டிக் அடையாளங்களை எடுத்துவிடவும்.

2. உங்களுக்கு வந்துள்ள அல்லது இன்டர்நெட் தளங்களில் உள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான வெப்சைட் லிங்குகளில் கிளிக் செய்து அந்த வங்கியின் தளம் பெற முயற்சிக்க வேண்டாம். இந்த லிங்க்குகள் உண்மையானவை களாக இருக்காது. அதில் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு போலியான செய்திகளுடன் கட்டங்கள் காட்டப்பட்டு உங்கள் நிதி குறித்த பெர்சனல் தகவல்களைப் பெற அந்த தளம் முயற்சிக்கவும். எனவே நீங்களே வங்கி மற்றும் நிதி நிறுவனங் களின் இணைய முகவரிகளை என்டர் செய்திடவும்.

3. பொதுவான அல்லது பிறரின் கம்ப்யூட்டர்களில் பெர்சனல் தகவல்கள் (பாஸ்வேர்ட், கிரெடிட் கார்டு எண் போன்றவை) டைப் செய்வதைத் தவிர்க்கவும். கீ லாகர் போன்ற ஹார்ட் வேர் சாதனங்கள் இருப்பதை எந்தவித ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களும் கண்டறிய முடியாது.

4. பிரவுசிங் முடிந்தவுடன் நீங்கள் சென்று வந்த தளங்களுக்கான தடயங்களை அழித்துவிடவும். பயர்பாக்ஸ் பிரவுசரில் கண்ட்ரோல்+ ஷிப்ட்+ டெலீட் அடித்து கிடைக்கும் கட்டங்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் டூல்ஸ் மெனு சென்று ஹிஸ்டரி குறித்த டேட்டா பதிவாகி இருப்பதை முற்றிலுமாக நீக்கவும்.

5. அத்தனையும் முடிந்துவிட்டதா? மை கம்ப்யூட்டர் ஐகான் மீது கிளிக் செய்து பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். டிஸ்க் கிளீன் அப் பட்டன் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ரீசைக்கிள் பின் மற்றும் டெம்பரரி பைல்கள் என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கொடுத்தால் அனைத்தும் கிளீனாக எடுக்கப்பட்டுவிடும்.

ஒரு சிறிய தகவல்

நீங்கள்
பயன்படுத்தும் அன்டிவைரஸ் சாப்ட்வாயர் பாதுகாப்பானதா என்று அறிய
ஒரு நோட்பேட் கோப்பினைத் திறந்து கீழே உள்ளதை காப்பி செய்து அதில் ஒட்டுங்கள்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

பிறகு அந்த கோப்பினை fakevirus.exe என்று பெயர் கொடுத்து உங்கள் கணினியில் சேமியுங்கள்.


நீங்கள் சேமித்த உடனே அந்த கோப்பு அழிக்கப்பட்டால் உங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருள் சிறந்தது என்பதையும் அப்டேட் செய்யப்பட்டதுதான் என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள். உடனே அக்கோப்பு அழிக்கப்படா விட்டால் மென்பொருளை அப்டேட் செய்யுங்கள். அல்லது சிறந்த வேறொரு மென்பொருளுக்கு மாறுங்கள்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. AVG மென்பொருளில் அந்த கோப்பை ஸ்கேன் செய்தால் தான் அது வைரஸ் என்று காண்பிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. @ வடுவூர் குமார்

    அப்படியானால் உங்கள் AVG மென்பொருளை அப்டேட் செய்யுங்கள்.நான் Avira பயன்படுத்துகிறேன். அந்த நோட்பேட் கோப்பினை சேவ் செய்த உடனேயே வைரஸ் அலேர்ட் வந்துவிட்டது.McAfee இலும் பைலை சேவ் செய்தவுடன் Virus Alert வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு