TopBottom

தீ – விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 06 March 2009


நேர்மையான போலீஸ் அதிகா‌ி, அவரை பந்தாடும் அரசியல்வாதிகள் என்று பழைய மொந்தையில் புளித்த கள். ஊருக்கு உபதேசம் சொல்லும் லவுட் ஸ்பீக்கர் அட்வைஸ்கள் உதி‌ி உபாதை.

அண்ணாசாலையில் அம்மணமாக சுந்தர் சி. எ‌ண்ட்‌ி ஆகும்போதே லா‌ஜிக்குக்கு தீ வைக்கிறார்கள். இறுதிவரை பற்ற வைத்த தீ திகுதிகுவென எ‌ரிகிறது.அரசியல்வாதி சாயா‌ஜி ஷிண்டேயின் காலடியில் இருந்து கொண்டே படிப்படியாக எம்எல்ஏ அளவுக்கு உயர்கிறார் சுந்தர் சி. இதற்கு உதவுவது நடிகையும் அண்டர்கிரவுண்ட் அரசியல்வாதியுமான நமிதா. சுந்தர் சி.க்கு இவர் உதவுவது கொஞ்சம். படத்தின் கிளாமருக்கு பயன்பட்டிருப்பது அதிகம்.

ஆ‌ண்ட்டி ஹீரோவாக அலம்பல் கொடுக்கும் சுந்தர் சி. திடீரென்று நல்லவராகிறார். உபயம் பிளாஷ்பேக். நேர்மையான காவல்துறை அதிகா‌ரியான சுந்தர் சி.க்கு தொந்தரவு கொடுக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

ஒருகட்டத்தில் அவரது குடும்பத்தின்மீதே கைவைக்க, சுந்தர் சி.யின் இரு குழந்தைகள் சாகடிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணி மனைவி கோமாவுக்கு செல்கிறார். முள்ளை முள்ளால் எடுக்க காக்கியை துறந்து கதருக்கு மாறுகிறார் சுந்தர் சி.

தங்களுக்கு கடுக்காய் கொடுத்த காக்கிதான் கதருக்கு மாறி தங்களது காலடி சேர்ந்திருக்கிறார் என்ற உண்மை சாயா‌ஜி ஷிண்டே உள்பட எந்த அரசியல்வாதிக்கும் தெ‌ரியவில்லை. முடி வெட்டி, கொஞ்சமாக தாடி வளர்த்தால் ஆள் மறந்து போகுமா? ஐயோ.. ஐயோ..மிடுக்கான கதாபாத்திரம் என்பதால் மூச்சைப் பிடித்து நடித்திருக்கிறார் சுந்தர் சி. லவுட் ஸ்பீக்கர் வாய்ஸில் அவர் பேசும் டயலாக்குகளில் விஜயகாந்த் வாசம். போலீஸ் இல்லாவிட்டால் என்னாகும் என்பது நல்ல கற்பனைதான். ஆனால், என்னாகும் என்ற கேள்வியை பார்ப்பவர்களை உலுக்கும்படி செதுக்காமல் சொதப்பியிருக்கிறார்கள்.

இரண்டு டூயட்டுக்கு பயன்பட்டிருக்கிறார் ரம்யா. நல்ல போலீஸாக வரும் மனோ‌ஜ் கே.ஜெயன், அரசியல்வாதிகள் சாயா‌‌ஜி ஷிண்டே, ‌ஜி.எம். குமார் அனைவரும் வழக்கம்போல. அடிக் குரலில் உறுமி எதி‌ரிக்கு சவால் விடுகிறார்கள். முதலமைச்சராக வருகிறவர் யாருப்பா? கேமராமுன் நிறுத்தும்முன் குளுக்கோஸ் எதுவும் கொடுத்திருக்க கூடாதா? அடிமட்ட தொண்டன்போல அப்படியொரு வதவத...

சண்டைக் காட்சிகளில் எல்லா இசைக் கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. கா கா ‌‌ீமிக்ஸ் கேட்கலாம். கமர்ஷியல் படத்தின் நியதி தவறாத பின்னணி இசை, கேமரா கோணங்கள்.

ஒரு காட்சியில் எந்தெந்த இடத்தில் குத்துபட்டால் உயிர் போகாது என்பதை தெ‌ரிந்து கொண்டு அந்த இடங்களில் மட்டும் குத்து வாங்குகிறார் சுந்தர் சி. ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ...?

தீ - தொட்டால் சுடும்... பார்த்தாலுமா?

1 Comment

 1. Hari Says,

  kelvi.net top blog ranking code நீக்கிய காரணத்தால் ranking தொழிற்படவில்லை ,கேள்வி நெட் முதலிடத்தில் இருந்து நீங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளீர்கள் கவனிக்கவும்

   
 2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments