ஆட்டோமேடிக் வால் பேப்பர் தயாரிக்கலாம்...!

மானிட்டர் திரையில் நமக்குப் பிடித்த காட்சிகளை வால் பேப்பராக வைத்துக்கொள்வதுனைவரின் வழக்கம். ஒரு சில கம்ப்யூட்டரில் ஒன்றுக்குமேற்பட்டவர்கள் பணியாற்றினால் ஒவ்வொருவரும் பணி தொடங்குகையில்தங்களுக்குப் பிடித்த வால் பேப்பரை அமைத்துக் கொண்டே பணியினைத்தொடங்குவார்கள்.

சிறுவயதில் கார்ட்டூன் படங்களில் தொடங்கி பின் தங்களுக்குப் பிடித்த திரைப்படநட்சத்திரங்கள், தங்கள் போட்டோக்கள், இயற்கைக் காட்சிகள் பின் இறைவனின்படங்கள் எனப் பலவகைகளில் இவற்றை கம்ப்யூட்டர் மானிட்டர்களில்பார்க்கலாம். இப்போதெல்லாம் பலர் அனிமேஷன் மற்றும் ஒலி இணைந்த வால்பேப்பர்களைப் பயன்படுத்துகின்றனர். இவை இணையத்தில் எக்கச்சக்கமாய்கிடைக்கின்றன. (இதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். இவற்றைடவுண்லோட் செய்து பயன்படுத்தினால் கூடவே ஸ்பை வேர் எனப்படும்புரோகிராம்களும் இணைந்து கம்ப்யூட்டரில் தங்கி உங்கள் பெர்சனல்தகவல்களை எடுக்கத் தொடங்கும்.)


இந்த வால் பேப்பர்களை நாம் தினந்தோறும் நம் விருப்பப்படி அமைக்காமல் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வால் பேப்பரை கம்ப்யூட்டரே அமைக்க முடியுமா? அல்லது மொத்தமாகப் போட்டுவைத்தால் தினம் ஒன்று என்று காட்டுமா? அது எவ்வளவு வசதியாக இருக்கும். அப்படிப்பட்ட புரோகிராம் ஒன்றைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது. எனவே பயமின்றி டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் இங்கே மைக்ரோசாப்ட் நிறுவன இணையதள முகவரியிலிருந்து இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தலாம். இது ஒரு சிறிய பவர்டாய் புரோகிராம். இதன் மூலம் இந்த போல்டரில் நிறைய வால் பேப்பர் இருக்கிறது. அதிலிருந்து எடுத்து இப்படி இப்படி பயன்படுத்து என கம்ப்யூட்டருக்குக் கட்டளைகளை அமைக்கலாம். இதனால் ஒரே படத்தை அல்லது அனிமேஷனை வால் பேப்பராகத் தொடர்ந்து வைக்காமல் அடிக்கடி மாற்றி மனதிற்குப் பிடித்த வகையில் கம்ப் யூட்டர் மானிட் டரின் திரைத் தோற் றத்தை மாற்றலாம்.

வால் பேப்பர் மட்டுமின்றி உங்களுக்குப் பிடித்த படங்களை மட்டும் போட்டோவினையும் இதில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். இவற்றைக் குறிப்பிட்ட நாட்களில் காட்டும்படி புரோகிராம் செய்துவிடலாம். இதனால் குறிப்பிட்ட நாட்களில் அந்த படங்களைக் காட்டிவிட்டு பின் மீண்டும் வழக்கம்போல பிற வால் பேப்பர்களை இது காட்டும். எடுத்துக் காட்டாக உங்கள் குழந்தையின் படத்தை அதன் பிறந்த நாளின்போது காட்டலாம். உங்கள் திருமணக் கோல போட்டோவினை திருமண நாளன்று காட்டும்படி அமைக்கலாம்.


அதே
போல வால் பேப்பர் தோன்றும் காலத்தையும் மாற்றி அமைக்கலாம். 15 விநாடிகளிலிருந்து ஒரு வார காலம் வரை இதன் மூலம் செட் செய்திடலாம். இவ்வாறு செட் செய்திட உங்களுக்குத் தேவையான வால் பேப்பர் சேஞ்சர் புரோகிராமினை மேலே குறிப்பிட்டுள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடவும். அதன்பின் உங்களுக்குப் பிடித்த வால் பேப்பர்களை எல்லாம் ஒரு போல்டரில் அமைக்கவும்.


இதனை மை பிக்சர்ஸ் போல் டரில் வால் பேப்பர் என்ற பெயரில் துணை போல்டராக அமைக்கலாம். பின் வால் பேப்பர் சேஞ்சர் புரோகிராமினை இயக்கினால் கிடைக்கும் விண்டோ மற்றும் டயலாக் பாக்ஸில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் வால் பேப்பர்கள் அடங்கிய போல்டரைச் சுட்டிக் காட்ட வேண்டும். பின் எத்தனை விநாடிகள், நிமிடங்கள், நாட்கள் என ஒவ்வொரு படத்திற்கும் கால அவகாசத்தினையும் காட்ட செட் செய்திடலாம். இது மிகவும் எளிதான வகையில் தரப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட படம் காட்டவும் இதில் செட் செய்திடும் வழி தரப்பட்டுள்ளது. இவ்வாறு செட் செய்திடுகையில் வால்பேப்பர் சேஞ்சர் புரோகிராம் நீங்கள் நிர்ணயம் செய்திடும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு போல்டரை உருவாக்கி அன்று அதனைப் பயன்படுத்தும் வகையில் செட் செய்து கொள்ளும். இதற்கு முதலில் வால் பேப்பர் புரோகிராமை இயக்கவும்.


பின் Configure Wallpaper என்பதைத் தேர்தெடுக்கவும். Override Wallpaper on Special Days என்று உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். பின் குறிப்பிட்ட நாளில் அமைக்கப் பட வேண்டிய படங்களை போல்டர் உருவாக்கி அதில் போட்டு வைக்கவும். இதற்கு இந்த புரோகிராமே உங்களுக்கு வழி காட்டும். முடித்தபின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் செட் செய்தபடி வால் பேப்பர்கள் காட்டப்படும்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. இதை செய்தபோது டவுண்லோட் செய்ய முடியவில்லை. அதை பதிய தொடங்கும்போது பாஷ்வேர்ட் தருகிறது. அதற்கு அப்பால் செல்லுதில்லை. அல்லது செல்ல முடியவில்லை. என்னவாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
  2. மெலே பதிவில் உள்ள முகவரியில் டவுண்லோட் செய்ய முடியாதவர்கள். கீழுள்ள ஏதாவது ஒரு முகவரியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.

    1.Power Toys

    2.Power Toys

    பதிலளிநீக்கு