TopBottom

கீழே கொடுத்துள்ள தகவல்கள் எல்லாம் சோனி நிறுவனம் தன் அதிகாரிகள் கூட்டத்தில் காட்டப்பட்ட பிரசன்டேஷன் தொகுப்பில் கிடைத்த தகவல்களாகும்.


* அதிகப் புத்திசாலித்தனம் கொண்ட இந்திய மக்களில் 25% பேர் அமெரிக்க மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம் பேராவார்.

* அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இந்தியாவில் திறனும் மதிப்பும் மிக்க குழந்தைகள் அதிகம்.


* 2010ல் அதிகம் ஆள் தேடப்படும் அல்லது விருப்பப்படும் முதல் பத்து வேலைகள் 2004ல் இல்லாத வேலைகளாகவே இருக்கும்.


* இப்போது இல்லாத சில வேலைகளுக்காக இன்னும் கண்டுபிடிக்காத தொழில் நுட்பங்களை வைத்து நாம் தற்போது மாணவர்களைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். எதற்காகத் தெரியுமா? இன்னும் பிரச்சினைகள் என்று கண்டறியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக.


* நான்கு ஆண்டு தொழில் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளில் படிப்பதில் பாதி மூன்றாவது ஆண்டில் பழைய தொழில் நுட்பமாகிவிடும்.


* அமெரிக்க அரசின் வேலை வாய்ப்பு துறை அறிவிப்பின் படி இன்றைய மாணவர்களுக்கு அவர்களின் 38 வயதில் 10முதல் 14 வேலைகள் இருக்கும்.


* தற்போது நான்கு ஊழியர்களில் ஒருவர் அவருடைய நிறுவனத்தில் ஓராண்டுக்கும் குறைவாகவே பணியாற்றுகிறார். இருவரில் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே பணியாற்றுகிறார்.


* மை ஸ்பேஸ் தளத்தில் பதிந்தவர்கள் எண்ணிக்கை 20 கோடி. மை ஸ்பேஸ் ஒரு நாடாக இருக்கும் பட்சத்தில் அது உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இந்தோனேஷியாவிற்கும் பிரேஸிலுக்கும் இடையே இருக்கும்.* ஒரு நாட்டின் மக்கள் தொகையில் இன்டர்நெட் அதிகம் பயன்படுத்துபவர்களின் நாடாக பெர்முடா உள்ளது. இந்த வகையில் அமெரிக்க 19 ஆவது இடத்தையும், ஜப்பான் 22 ஆவது இடத்தையும் கொண்டுள்ளன.


* ஒவ்வொரு மாதமும் கூகுள் தளத்தில் 3100 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்ற 2006ல் இது 270 கோடியாக இருந்தது. அப்படியானால் கூகுளுக்கு முன்னால் இந்த கேள்விகளை யாரிடம் கேட்டார்கள்? தெரியலயே!


* முதல் எஸ்.எம்.எஸ். வர்த்தக செய்தி 1992 டிசம்பரில் அனுப்பப்பட்டது. இன்று ஒரு நாளில் அனுப்பப்படும் மற்றும் பெறப்படும் டெக்ஸ்ட் மெசேஜ் எண்ணிக்கை உலக மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.


* விற்பனை மூலம் மக்கள் தொகையில் 5 கோடி பேரை எட்டிப் பிடிக்க ரேடியோவிற்கு 38 ஆண்டுகள் ஆயின. டிவிக்கு 13 ஆண்டுகள் பிடித்தன. இன்டர்நெட்டுக்கு 4 ஆண்டுகள் பிடித்தன. பாட் ஜஸ்ட் 3 ஆண்டுகள் தான் எடுத்துக் கொண்டது. பேஸ் புக் தளம் இந்த எண்ணிக்கையை 2 ஆண்டுகளிலேயே எட்டியது


*1984ல் இன்டர்நெட் டுக்கான சாதனங்களின் எண்ணிக்கை 1,000. 1992ல் இது பத்து லட்சம். 2008ல் இது நூறு கோடி.

*ஆங்கில மொழியில் ஏறத்தாழ 5,40,000 சொற்கள் இருக்கின்றன. ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் இது 5 மடங்கு அதிகமாகும்.


* புதிய தொழில் நுட்பம் குறித்த செய்திகளின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு ஆண்டிலும் இரு மடங்காக உயர்கிறது.


* தற்போது உலகில் நாள்தோறும் 3,000 நூல்கள் வெளியாகின்றன. வருங்காலத்தில் இபேப்பர் என்னும் எலக்டரானிக் செய்தித்தாளின் விலை அச்சிட்டு வெளியாகும் செய்தித்தாளைக் காட்டிலும் விலை குறைவாகவே இருக்கும்.


* ஜப்பானின் என்.டி.டி. நிறுவனம் வெற்றிகரமாக ஒரு பைபர் ஆப்டிக் இழை மீது சோதனை நடத்தியுள்ளது. இதன் ஒரு இழை மூலம் ஒரு நொடியில் 14 ட்ரில்லியன் பட்ஸ் தகவல்களை அனுப்பலாம். இது 2,660 சிடியில் உள்ள தகவல்களுக்கு சமமாகும். இது ஒரு நொடியில் 21 கோடி போன் கால்களுக்கு இணையாகும். தற்போது ஒவ்வொரு ஆறு மாத காலத்திலும் மூன்று பங்கு உயர்ந்து வருகிறது. இதே உயர்வு இன்னும் 20 ஆண்டுகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* 2013ல் மனித மூளையின் செயல்பாட்டினை மிஞ்சும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்படும்.

* 2049ல் 1000 டாலருக்குக் கிடைக்க இருக்கும் கம்ப்யூட்டர் உலகின் அனைத்து மனித மூளைகளுக்கும் உள்ள கணக்கிடும் திறனைக் காட்டிலும் வேகமும் திறனும் கொண்டதாக இருக்கும்.


* இந்த செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த கால அவகாசமான 8 நிமிடத்தில் அமெரிக்காவில் 67 குழந்தைகள் பிறந்திருக்கும். சீனாவில் 274 பிறந்திருக்கும். 395 குழந்தைகள் நம் நாட்டில், இந்தியாவில், பிறந்திருக்கும். 6 லட்சத்து 94 ஆயிரம் பாடல்கள் இன்டர்நெட்டிலிருந்து திருட்டுத்தனமாக டவுண்லோட் செய்யப்பட்டிருக்கும். இவை எல்லாம் எதை நோக்கிப் போகின்றன? இதன் பொருள் என்ன? யாருக்குத் தெரியும்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லலாம்.

3 Comments

 1. மிகவும் நன்று..
  Spam mail களிடம் இருந்து உங்கள் mail box ஐ காப்பது எப்படி என்பதனை இங்கு பாருங்கள்
  http://vinothkumarm.blogspot.com/2009/03/secure-your-mail-box-from-spams.html

   
 2. Reply To This Comment
 3. உங்கள் தமிழாக்கம் நன்றாக உள்ளது...

   
 4. Reply To This Comment
 5. வீழ்வது நாமயினும் வாழ்வது தமிழாகட்டும்

   
 6. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

  Twitter Updates

   follow me on Twitter

   Recent Comments