TopBottom

பிகினி – பின்வாங்கும் நடிகைகள்

எழுதியவர் : Karthikan Karunakaran 30 March 2009

பில்லாவில் நயன்தாரா பிகினியில் தோன்றியது பரபரப்பாக பேசப்பட்டது. அந்தக் காட்சிக்காகவே அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன.


பில்லா
தற்போது தெலுங்கில் ‌‌‌ரீமேக்காகிறது. இதில் நயன்தாரா நடித்த வேடத்தை அனுஷ்கா செய்கிறார். நயன்தாராவைப் போல் பிகினி காட்சி இவருக்கும் உண்டு. இந்த சில நொடி காட்சிக்காக இவருக்கு பேசப்பட்டது கோடி ரூபாய்.

பிகினியால் பணம் கொட்டும் என்பதைப் பு‌ரிந்து கொண்ட நடிகைகள் பிகினியில் தோன்ற ஆர்வம் காட்டினர். கீர்த்தி சாவ்லா தமிழ்ப் படம் ஒன்றில் பிகினியில் தோன்றுகிறார். தெலுங்கு துரோணா படத்தில் ப்‌ரியாமணி நீச்சல் உடையில் தோன்றியது பத்தி‌ரிகைகளில் சக்கைபோடு போட்டது.

துரதிர்ஷ்டவசமாக துரோணா வெற்றிபெறவில்லை. நயன்தாராவின் பில்லா பரபரப்பும் அடங்கி அவரது சத்யம், ஏகன் என அடுத்தடுத்தப் படங்கள் பிளாப்பாகி கே‌ரியர் கிராஃ‌பும் அதல பாதாளத்துக்கு சென்றிருக்கிறது. பிகினியால் பிக்கப்பாகலாம் என நினைத்திருந்தவர்களுக்கு இது பலத்த அடி.

பிகினிக்கு ஓகே சொன்னவர்களும் இப்போது பின்வாங்குகிறார்கள். சமீபத்தில் அப்படி பின்வாங்கியவர் லட்சுமிராய். முத்திரை படத்தில் பிகினியில் தோன்ற முதலில் சம்மதித்தவர் தற்போது முடியாது என மறுத்திருக்கிறார்.

திறமையா, பிகினியா? இந்த கேள்விக்கு நடிகைகளின் ஓட்டு திறமைக்குதானாம். நடிகைகளின் இந்த மாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

1 Comment

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதயுடன்)
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்

     
  2. Reply To This Comment
:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments