பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய சோதனைத் தொகுப்பு

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துவோருக்கு ஒரு நல்ல அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய வசதிகளுடன் கூடிய பிரவுசர் தொகுப்பு 3.1ன் சோதனைத் தொகுப்பு பீட்டா 3 வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியாகி பயன்பாட்டில் இருக்கும் பிரவுசர் தொகுப்பில் பல புதிய வசதிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. பழைய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பிரைவேட் பிரவுசிங் மோட் என்னும் வசதி உயர்த்தப்பட்டுள்ளது.


இதில் நுழைந்து பிரவுஸ் செய்தால் நாம் பார்க்கும் தளங்கள் ஹிஸ்டரி பட்டியலில் இடம் பெறாது. ட்ரேஸ் மங்க்கி ஜாவா ஸ்கிரிப்ட் தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட செயல்பாடு மற்றும் நிலைத்த இயக்கம் கிடைக்கிறது. உள் கட்டமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இணையப் பக்கங்கள் வேகமாக கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகின்றன.


புதிய இன்டர்நெட் தொழில் நுட்பம் அனைத்தும் இதில் சப்போர்ட் செய்யப்படுகின்றன. இந்த முகவரியிலிருந்து இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ், மேக் ஓ.எஸ். எக்ஸ் மற்றும் லினக்ஸ் தொகுப்புகளில் இயங்கும் வெவ்வேறு பதிப்புகள் தரப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. The Exact Link is,

    http://www.mozilla.com/en-US/firefox/all-beta.html

    Pls update in your blog.

    -Rajasekaran

    பதிலளிநீக்கு
  2. சரியான லின்க்,
    http://www.mozilla.com/en-US/firefox/all-beta.html

    தங்களுடைய வலைப்பின்னலில் மாற்றம் செய்யவும்.

    ‍‍‍ராஜசேகரன்

    பதிலளிநீக்கு
  3. @ ‍‍‍ராஜசேகரன்

    தற்போது லிங் திருத்தப்பட்டுள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு