TopBottom

Mr.Bean's Holiday (2007) - விமர்சனம்

எழுதியவர் : Karthikan Karunakaran 23 March 2009


மிஸ்டர் பீன் பட வரிசையில் மீண்டும் வயிறு குலுங்கச் சிரிக்கும்படியான முழுநீள காமடிப் படம் கொடுத்திருக்கிறார்கள்...

ரோவன் பற்றி சொல்லவேண்டியதில்லை.. என் வாழ்நாளில் ஒரு நடிகரைப் பார்த்ததும் சிரிப்பு வருகிறது என்றால் அது ரோவனை மட்டுமே குறிப்பிடுவேன்...

அதே கார் ; அதே கோட்டு சூட்டு... எல்லாம் அதே! லண்டனில் ஒரு பரிசுப் போட்டியில் வெற்றி பெரும் பீன் அதன் பரிசாக ஒரு டிஜிட்டல் வீடியோ கேமிராவையும் பாரீஸிலுள்ள கான்னஸ்(Cannes) பீச்சுக்கும் செல்ல தேர்வாகிறார்.. கிறுக்குத்தனமான நடவடிக்கையால் ஒரு பயணியையும் அவரது மகனையும் பிரித்துவிடுகிறார்.

அந்த மகனும் பீனும் அடுத்த ஸ்டேசனில் இறங்கி நிற்கும்போது அந்த பயணி அடுத்த ரயிலில் செல்கிறார்... அந்த ரயில் நிற்காமல் சென்றாலும், அவர் எழுதிவைத்த போன் எண்ணை கண்ணாடி வழியே காண்பிக்க, பீன் , தான் கொண்டுவந்த கேமிராவின் உதவியால் அதை வீடியோ எடுக்க, இறுதியில் அந்த போன் எண்களின் கடைசி எண்ணை வீடியோவில் சரிவர பதிக்காமல் போனார்...

பின்னர் இருவரும் அடுத்த ரயில் ஏறுவதற்குள் மறந்தவாறு போன் செய்யும் இடத்தில் தனது பர்ஸையும் பாஸ்போர்ட்டையும் வைத்துவிட்டு ஏறிவிடுகிறார் பீன்.. டிக்கெட் இல்லாததால் அடுத்த ஸ்டேசனில் இறக்கிவிடப்படுகின்றனர், பின்னர் இருவரும் மிகவும் சிரமப் பட்டு பணம் சேகரித்து ஓரிடத்தில் இருவரும் பிரிந்து பின் கதாநாயகியுடன் சேர்ந்து, ........ இறுதியில் அந்த பயணியிடம் அவர் மகனை ஓப்படைத்தலும் கான்னஸ் பீச்சுக்குப் போய் சேர்தலுமே கதை...

இடையிடையே நடக்கும் கூத்துக்கள் அடேயப்பா!! நான் மூன்றுமுறை பார்த்தேன்... எல்லா இடத்திலும் சிரிப்பு மீண்டும் மீண்டும்.... பட ஆரம்பத்தில் பரிசுப் போட்டி அறிவிப்புகளோடு ஆங்கில டயலாக் முடிந்துவிடுகிறது.. பிறகு வசனமே இல்லை. முழுவதும் இசைதான். காமிரா கையில் கிடைத்ததும் பீன் செய்யும் லோலாயங்களுக்கு அளவே இல்லை.. ஒவ்வொரு காட்சியும் அதிரடி சிரிப்பை வரவழைக்கிறது.


ரயிலை
மிஸ் செய்வதும், ரெஸ்டாரெண்டில் பிடிக்காத உணவை சாப்பிடுவதுபோல நடித்து அடுத்தவர் கைப்பையில் உணவைப் போடுவதும், அந்த பயணியிடம் காமிராவைக் கொடுத்து படமெடுக்கச் சொல்லுவதும், அப்பப்பா!! என்ன ரகளை!!! அதோடு விட்டாரா? ஒரு எண் விடுபட்டுவிட்டது என்பதால் இருக்கும் எல்லா எண்களுக்கும் போன் செய்து யாரென்று கேட்பது... தவறிப்போய் பாஸ்போர்ட்டையும் பர்ஸையும் விட்டுவிட்டு, பாட்டுப் பாடி பணம் சேகரிப்பதும் காமடியில் கலக்கல்...

ஒரு பஸ் டிக்கெட் தவறி கீழே விழுந்து அது ஒரு கோழியின் காலில் ஒட்டிக்கொண்டு அதைத் துரத்தப் போய் கோழிப்பண்ணைக்கே செல்வதும் அதைப் பிந்தொடர்ந்து சாலையோரத்தில் யாராவது தன்னை ஏற்றிக் கொள்ளமாட்டார்களா என்று கைகாட்ட, வெகுதூரத்தில் ஒரு வண்டி மிகமிக மெதுவாக வர, அதற்க்காக காத்திருந்து காத்திருந்து, ஒருவழியாக அந்த வண்டி வந்துசேர,, அதையும் பீன் விடாமல் லவட்டப் பார்க்க, வண்டியின் உரிமையாளர் நடந்துவந்தே அந்த வண்டியைப் பிடுங்குவார் பாருங்கள்..... காமடியின் உச்சம் இது..... அத்தனை காமெடி..

கதாநாயகி திரைப்படத்தில் நடிக்கும் நடிகையாக வருகிறார்... பீனின் காரில் இருவரும் பயணிக்க ஒரே கூத்து... இறுதியில் தான் நடித்த படத்தில் ஒரு முத்தக் காட்சி இடம்பெறவில்லை என்று வருத்தமாய் இருக்க (ப்ரிவியூவில்) பீன் தான் கொண்டுவந்த காமிராவில் ஏற்கனவே எடுத்த கதாநாயகியின் மூவி க்ளிப்புகளை ஆப்பரேட்டர் அறைக்குள் சென்று ஓட்டி விடுகிறார்... இதன்காரணமாக அந்தப் பையனை அவனுக்குரிய பெற்றவனிடம் ஒப்படைப்பதும் இங்கேதான்... அருமையாக கதை முடிந்து இருக்கிறது.. பீனின் கனவுப் பயணமான கான்னஸ் பீச்சும் தியேட்டருக்கு அருகே இருக்கக் கண்டு அவர் செல்லும் விதம் கூட அருமை...

படம் பார்க்க இருப்பவர்கள் கைக்குட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டும்... சிரித்து சிரித்து கண்களில் நீர் வரும் நிச்சயமாக... வயிறுவலி மாத்திரை அவசியம் வேண்டும்...

இந்தப் படத்தை ஆன்லைனில் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.

0 Comments

:a   :b   :c   :d   :e   :f   :g   :h   :i   :j   :k   :l   :m   :n   :o   :p   :q   :r   :s   :t

About Me

My Photo
Karthikan Karunakaran
View my complete profile

Twitter

    Twitter Updates

      follow me on Twitter

      Recent Comments