ரீ-சைக்கிள் பின்னின் (Recycle Bin) கொள்ளளவை அதிகப்படுத்தலாம்.

விண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் ரீசைக்கிள் பின் செட் செய்த அளவிலேயே கிடைக்கிறது. சிஸ்டத்தில் அது ஹார்ட் டிஸ்க் அளவில் ஏறத்தாழ 10 சதவிகிதமாக உள்ளது. இந்த இடம் அதற்கென்று ஒதுக்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால் இதனை குறைக்கலாம். அல்லது அதிகப்படுத்தலாம். ஆனால் சற்று கூடுதலாக இருப்பது நல்லதுதான். ஏனென்றால் நம்மை அறியாமலேயே பெரிய பைல் ஒன்றை அழித்துவிட்டால் ரீ சைக்கிள் பின்னில் அதிக இடம் இருந்தால் தானே அது அங்கு சென்று அமரும். பின்னால் நாம் மீண்டும் எடுத்துப் பயன்படுத்த உதவும்.


இதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.

ரீசைக்கிள் பின் ஐகானில் முதலில் ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக் கவும்.

திரையின் நடுவில் உள்ள ஸ்லைடர் பாரினை அட்ஜஸ்ட் செய்தால் ரீசைக்கிள் பின்னின் அளவு உயரும் அல்லது குறையும்.

இதனை முடிவு செய்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தபடி அளவில் ரீசைக்கிள் பின் அமையும். இந்த புதிய அளவு மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்திடும்போது மட்டுமே அமலுக்கு வரும்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்